திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் கோயில்
திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் குளித்தலை வட்டத்தில் உள்ள திருப்பராய்த்துறை கிராமத்தில் அமைந்துள்ளது. இறைவன் பிட்சாடனராய் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்கட்கு அருள்புரிந்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள மூன்றாவது சிவத்தலமாகும்.
தேவாரம் பாடல் பெற்ற திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் கோயில் | |
---|---|
![]() | |
பெயர் | |
புராண பெயர்(கள்): | தாருகாவனம், உத்தம சீவிச் சதுர்வேதிமங்கலம், திருப்பராய்த்துறை |
பெயர்: | திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருப்பராய்த்துறை |
மாவட்டம்: | திருச்சி |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பராய்த்துறைநாதர், தாருகாவனேஸ்வரர் |
உற்சவர்: | பராய்த்துறைப் பரமேஸ்வரன் |
தாயார்: | பசும்பொன் மயிலாம்பிகை |
உற்சவர் தாயார்: | ஹேமவர்ணாம்பாள் |
தல விருட்சம்: | பராய் மரம் |
தீர்த்தம்: | அகண்ட காவேரி |
ஆகமம்: | சிவாமம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் |
தல வரலாறு
- பராய் மரக்காட்டில் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இத்தலம் 'பராய்த்துறை' எனப்படுகிறது.
- இத்தலத்திற்கு 'தாருகாவனம்' என்றும் பெயருண்டு. பராய் மரம் சமஸ்கிருதத்தில் 'தாருகா விருக்ஷம்' எனப்படுகிறது.
- இறைவன் பிட்சாடனராய்ச் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்கட்கு அருள்புரிந்தார்.
சிறப்புக்கள்
- இக் கோவிலுள்ள நவகிரகங்களுள் சனிபகவானுக்கு மட்டுமே வாகனம் உள்ளது, ஏனையோருக்கு வாகனமில்லை.
- முதற் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டது இத்திருக்கோயில்.
- இக்கோவிலின் கல்வெட்டில் இத்தலம், "உத்தம சீவிச் சதுர்வேதிமங்கலத்துத் திருப்பராய்த்துறை" என்றும்; இறைவன் பெயர் "பராய்த்துறை மகாதேவர் " என்றும்; "பராய்த்துறைப் பரமேஸ்வரன்" என்றும் குறிக்கப்படுகிறது.
திருத்தலப் பாடல்கள்
இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:
திருஞான சம்பந்தர் பாடிய பதிகம்
நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
ஆறுசேர்சடை அண்ணலே.
வேதர்வேதமெல் லாமுறையால்விரித்
தோதநின்ற ஒருவனார்
பாதிபெண்ணுரு ஆவர்பராய்த்துறை
ஆதியாய அடிகளே
தோலுந்தம்மரை யாடைசுடர்விடு
நூலுந்தாமணி மார்பினர்
பாலும்நெய்பயின் றாடுபராய்த்துறை
ஆலநீழல் அடிகளே..
திருநாவுக்கரசர் பாடிய பதிகம்
கரப்பர் கால மடைந்தவர் தம்வினை
சுருக்கு மாறுவல் லார்கங்கை செஞ்சடைப்
பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத்
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே
பட்ட நெற்றியர் பால்மதிக் கீற்றினர்
நட்ட மாடுவர் நள்ளிருள் ஏமமுஞ்
சிட்ட னார்தென் பராய்த்துறைச் செல்வனார்
இட்ட மாயிருப் பாரை அறிவரே.. Block quote
படத்தொகுப்பு
- பராய்துறைநாதர் உள்கோபுரம்
- மூலவர் சன்னதிக்கு முன்புள்ள காளி தேவியின் சிலை
- மூலவர் சன்னதிக்கு முன்புள்ள ஊர்த்தவ தாண்டவ மூர்த்தியின் சிலை
- மீன் சின்னங்கள்
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
- தல வரலாறு தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்
- சம்பந்தர் பாடிய தேவாரப் பதிகம்
- அப்பர் பாடிய தேவாரப் பதிகம்
- அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்