ஜாவேத் அக்தர்
ஜாவேத் அக்தர் (உருதுவில்: جاوید اختر ; இந்தி: जावेद अख़्तर), (ஜனவரி 17, 1945ஆம் ஆண்டில் பிறந்தவர்) என்ற இவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு உருது மொழி கவிஞர், பாடலாசிரியர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவருடைய வெற்றிகரமான எழுத்துப்பணிகள் 1970 மற்றும் 1980 ஆண்டுகளில் சலீம் கான் என்பவருடன் இணைந்து உருவாக்கப்பட்டவை, இந்த உரை எழுத்து இரட்டையர்கள் சலீம்-ஜாவேத் என்றழைக்கப்பட்டனர். அக்தர் தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறார் மற்றும் இன்றும் விரும்பப்படும் பாடலாசிரியராக இருக்கிறார்.
ஜாவேத் அக்தர் | |
---|---|
![]() Javed Akhtar in PuKaSa meeting at Kollam | |
பிறப்பு | ஜாவேத் அக்தர் 17 சனவரி 1945 Gwalior state, இந்தியா |
தொழில் | பாடலாசிரியர், கவிஞர், திரைக்கதையாசிரியர் |
நாடு | இந்தியர் |
இலக்கிய வகை | கஜல் |
கருப்பொருட்கள் | காதல், தத்துவம் |
http://www.javedakhtar.com/ |
தாக்கங்கள்
மஜாஸ், ஜேன் நிசார் அஹ்டர் (Majaz, Jan Nisar Akhtar)
பின்பற்றுவோர்
உருது கவிதைகள் (Urdu poetry)
ஆரம்பகால வாழ்க்கை
இவர் குவாலியர் மாநிலத்தில் (தற்போது மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர்) பிறந்தார், இவரின் தொடக்கக்கால பெயர் ஜாதூ அக்தர் என்பதாகும். இவருடைய தந்தை ஜான் நிசார் அக்தர் என்பவர் பாலிவுட் சினிமா பாடலாசிரியர் மற்றும் உருது கவிஞருமாவார், இவருடைய தாய் சஃபியா அக்தர் என்பவரும் பாடகி, ஆசிரியர் மற்றும் எழுத்தாளருமாவார். இவருடைய தந்தை எழுதிய ஒரு கவிதையில் வரும் வரியான, "லம்பா, லம்பா கிசி ஜாதூ கா ஃபாஸனா ஹோகா" என்பதிலிருந்து இவருடைய நிஜப்பெயரான ஜாது என்பது எடுக்கப்பட்டது: ஜாதூ என்ற சொல்லுக்கு நெருக்கமான உச்சரிப்பைக் கொண்டிருந்ததால், அதிகாரப்பூர்வமாக ஜாவேத் என்று பெயரிடப்பட்டது.[1] இவருடைய பரம்பரையில் சுமார் ஏழு தலைமுறையினர் வரை எழுத்தாளர்களாக இருந்தனர். உருது கவிஞர் மஜாஸ் என்பவர் இவருடைய தந்தை வழி மாமா ஆவார், மேலும் இவருடைய தாத்தா முஸ்தர் காய்ராபாடியின் கவிதைகள் உருது கவிதைகளின் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. தாத்தாவின் மூலமாக, இவர் மவுலானா பாஸ்ல்-ஈ-ஹக் காய்ராபாடி என்ற தத்துவவியலாளர், கவிஞர், மத அறிஞரின் அறிமுகம் இவருக்கு கிடைத்தது. இவரே 1857 ஆம் ஆண்டில் இந்திய புரட்சியில் முக்கிய பங்காற்றியவர் மற்றும் காலிப்பின் முக்கிய பணிகளைத் திருத்தியவரும் ஆவார். அக்தருக்கு ஒரு சகோதரர் உண்டு; இவருடைய இளைய சகோதரரான சல்மான் அக்தர் அமெரிக்காவைச் சார்ந்த இந்திய உளவியல் அறிஞர் ஆவார்.
இவர் பிறந்தவுடன், இவருடைய பெற்றோர், உத்திர பிரதேசத்தின், லக்னோ நகருக்கு சென்றனர், பின்னர் அலிகார் நகரத்திற்கு சென்றனர். ஜாவேத் அக்தர் இளவயதிலேயே தன்னுடைய தாயை இழந்தார். மேலும் இவருடைய தந்தை அடிக்கடி லக்னோவிற்கும் பம்பாய்க்கும் சென்று வந்து கொண்டிருந்தார், இதனால் இவரும் இவருடைய சகோதரரும் பெரும்பாலான நேரம் உறவினர்களுடனே இருந்து வந்தனர்.
எட்டு வயதில், இவர் லக்னோவில் உள்ள கொல்வின் டலுக்டார்ஸ் கல்லூரியில் ஆறாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். லக்னோவிலிருந்து, தன்னுடைய தந்தை வழி அத்தையுடன் தங்குவதற்காக அலிகார் நகருக்கு சென்றார்.
அலிகார் பள்ளியில், மின்டோ சர்க்கிள் என்பதில் சேர்க்கப்பட்டார், இது அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாகும். அவர் தன்னுடைய மெட்ரிக் பள்ளிப்படிப்பை, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் முடித்தார். மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தவுடன் போபாலில் உள்ள சாய்ஃபியா கல்லூரியில் சேர்ந்து பி.ஏ பட்டம் பெற்றார். இவர் கல்லூரியில் சிறந்த வாதத்திறமை மிக்கவராக இருந்தார், அடிக்கடி ரோட்டரி கிளப் பரிசை வென்று வந்தார்.
தொழில் வாழ்க்கை

அக்டோபர் 4, 1964ஆம் ஆண்டில் அக்தர் மும்பை நகரத்திற்கு வந்து சேர்ந்தார். மும்பையில் தங்கியிருந்த ஆரம்ப ஆண்டுகளில், சிறிய படங்களுக்கு 100 ரூபாய்க்கு வசனங்கள் எழுதிக் கொடுத்து வந்தார். சில நேரங்களில், உதவியாளராகவும் பணிபுரிந்து வந்தார். அவர் யக்கீன் என்ற தோல்விப்படத்திற்கு திரைக்கதை எழுதினார். பின்னர் அக்தர் தன்னுடைய நண்பர் சலீம் கானுடன் இணைந்து அதிகார் என்ற கதையை உருவாக்கத் தொடங்கினார். இவர்கள் இருவரும், ஜி.பி. சிப்பியால் சிப்பி ஃபிலிம்ஸின் அக திரைக்கதை எழுத்தாளர்களாக பணியமர்த்தப்பட்டனர், மேலும் அவர்கள் அந்தாஸ் , சீத்தா அவுர் கீத்தா , ஷோலே மற்றும் டான் போன்ற சிறந்த படங்களுக்கு திரைக்கதை அமைத்தனர்.
அக்தர் தன்னுடைய கருத்துக்களை உருது மொழியில் எழுதுவார், பின்னர் அதனை அவருடைய உதவியாளர் ஹிந்தி மொழியில் எழுதுவார். பின்னர் மற்றொரு உதவியாளர் ஒற்றைவரி சுருக்கத்தை ஆங்கிலத்தில் எழுதி தருவார். இவர் சலீம் கானுடன் 1980ஆம் ஆண்டு வரை இணைந்து பணிபுரிந்து வந்தார். இதன் பின்னர், அக்தர் சொந்தமாக பல திரைக்கதைகளை எழுதினார், ஆனாலும் மெல்ல மெல்ல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுவதில் தனது முழுகவனத்தையும் திருப்பினார், அதில் அவர் வெற்றியும் பெற்றார்.
திரைப்படங்களுக்காக எழுதுவதைத் தவிர, தீவிரமான உருது இலக்கியத்திலும் தன்னுடைய முயற்சிகளை செய்து வந்தார். அவருடைய பணிகளில், பெரும்பாலானவை டர்காஷால் தொகுக்கப்பட்டது, அதில் இவருடைய சொந்த குரலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜக்ஜீத் சிங் மற்றும் மறைந்த நுஸ்ரத் ஃபதே அலி கான் ஆகிய பாடகர்களும் இவருடைய திரைப்படம் சாராத கவிதகளை பாடியுள்ளனர்.
அனு மாலிக், கைலாஷ் கெர் மற்றும் சோனாலி பிந்த்ரே போன்றவர்களுடன் இணைந்து, இந்தியாவின் பாடகர் தேடல் நிகழ்ச்சியான இண்டியன் ஐடோல் 4 இல் நடுவராகவும் இருக்கிறார். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக்கான ஆசிய அகாடமியின் ஆலோசனைக் குழுவிலும் இவர் இடம்பெற்றுள்ளார்.
சொந்த வாழ்க்கை
அக்தர் ஹனி இரானி என்ற ஹிந்தி திரைப்பட திரைக்கதை எழுத்தாளரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஃபர்ஹன் அக்தர் மற்றும் ஜோயா அக்தர் என்ற இரு குழந்தைகள் பிறந்தனர், தற்போது இருவருமே திரைப்பட இயக்குநர்களாக இருக்கின்றனர். தந்தை மகன்கள் இணைந்து, சமீபத்திய படங்களான, தில் சஹ்தா ஹை , லக்ஷயா , மற்றும் ராக் ஆன்!! ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ளனர்.
இரானியிடமிருந்து, விவாகரத்து பெற்றவுடன், மற்றொரு உருது கவிஞரான கைஃபி அஸ்மியின் மகளான நடிகை ஷப்னா ஆஸ்மியை மணமுடித்துக் கொண்டார்.
பிப்ரவரி 26, 2005ஆம் ஆண்டில், "Spirituality, Halo or Hoax", என்ற தலைப்பில் நிகழ்ந்த உரையில் அக்தர் தான் ஒரு நாத்திகவாதி என்று வெளிப்படுத்தினார். அவர், தனக்கு மத நம்பிக்கைகள் இல்லையென்றும் ஆன்மீகத்தில் நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தார்.[2]
விருதுகள்
1999 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் இவருக்கு, பத்ம ஸ்ரீ விருதை வழங்கியது, மீண்டும் 2007 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருதையும் பெற்றார். அக்தர் ஃபிலிம்பேர் விருதை பதினான்கு முறை வென்றுள்ளார், ஏழு முறை சிறந்த திரைக்கதைக்காகவும், ஏழு முறை சிறந்த பாடல் வரிகளுக்காகவும் பெற்றுள்ளார். அவையாவன, 1942-எ லவ் ஸ்டோரி படத்தில் வரும் "ஏக் லடிக்கி கோ தேக்கா...", பாப்பா கஹ்தே ஹைன் படத்தில் வரும் "கர் சே நிகல்தே ஹி...", பார்டர் படத்தில் வரும் "சாந்த்ஸே ஆத்தே ஹைன்....", ரிஃப்யூஜி படத்தில் வரும் "பாஞ்ச் நதியா பவன் கே ஜோன்கே...", லகான் படத்தில் வரும் "ராதா கைஸே நா ஜலே", கல் ஹோ நா ஹோ படத்தில் வரும் "கல் ஹோ நா ஹோ", வீர்-ஜாரா படத்தில் வரும் "தேரே லியே..." மற்றும் ஜோதா அக்பர் படத்தில் வரும் "ஜஷ்ன்-ஈ-பஹாரா" ஆகிய பாடல்களாகும்.
தேசிய விருதை ஐந்து முறை அக்தர் பெற்றுள்ளார். 1996 ஆம் ஆண்டில் இவர், சாஸ் படத்திற்காக சிறந்த பாடலாசிரியர் விருதையும், 1997 ஆம் ஆண்டில் பார்டர் திரைப்படத்திற்காகவும் வென்றுள்ளார். காட்மதர் திரைப்படத்திற்காக மீண்டும் 1998 ஆம் ஆண்டில் விருது பெற்றார். 2000 ஆம் ஆண்டில், ரிஃப்யூஜி படத்திற்காக "பாஞ்ச்சி நதியான் பவன் கே ஜோன்க்கி..." என்ற பாடலுக்கும், 2001 ஆம் ஆண்டில் "ராதா கைஸே நா ஜலே" என்ற லகான் திரைப்படத்தின் பாடலுக்காகவும் இவர் விருது பெற்றார்.
1995 மற்றும் 1997 ஆண்டுகளில் ஸ்கிரீன் வீடியோகான் விருதுகளைப் பெற்றார். பார்டர் திரைப்படத்தில் வரும் "சந்தேசே ஆத்தே ஹைன்" என்ற பாடலுக்காக முதன்முதலாக சிறந்த பாடலாசிரியருக்கான ஜீ விருதைப் பெற்றார். ரிஃப்யூஜி திரைபடத்திற்காக, "பாஞ்ச்சி நதியான் கே ஜோன்க்கே..." என்ற பாடலுக்காக, ஜீ லக்ஸ் சினி விருதை இவர் வென்றுள்ளார்.
2001 ஆம் ஆண்டில், அனைத்திந்திய தீவிரவாத எதிர்ப்பு அமைப்பின் சார்பாக, "தேசிய ஒருங்கிணைப்பு விருதை" இவர் பெற்றார் மற்றும் உ.பி. அரசாங்கத்திடமிருந்து, அவாத் ரத்தன் விருதையும் பெற்றுள்ளார். உதய்ப்பூரைச் சேர்ந்த மகாரானா மேவார் ஃபவுண்டேஷனிடமிருந்து, 2003 ஆம் ஆண்டின் ஹக்கீம் கான் சர் சம்மான் விருதையும் இவர் பெற்றுள்ளார்.
பணிகள்
திரைக்கதை
- சலீம்-ஜாவேத் குழுவின் ஒரு அங்கத்தினராக அல்லது அந்த பெயருடன் எழுதப்பட்ட திரைப்படங்கள்
- ஹாத்தி மேரே சாத்தி , 1971 (சலீம்-ஜாவேத்)
- சீத்தா அவுர் கீத்தா , 1972 (சலீம்-ஜாவேத்)
- யாதோன் கி பாரத் , 1973 (சலீம்-ஜாவேத்)
- ஜஞ்சீர் , 1973 (சலீம்-ஜாவேத்)
- மஜ்பூர் , 1974 (சலீம்-ஜாவேத்)
- தீவார் , 1975 (சலீம்-ஜாவேத்)
- ஷோலே , 1975 (சலீம்-ஜாவேத்)
- இமான் தரம் , 1977 (சலீம்-ஜாவேத்)
- சாச்சா பாடிஜா , 1977 (சலீம்-ஜாவேத்)
- மனஷுலு சேசின தொங்காலு (தெலுங்கு படம்), 1977 (சலீம்-ஜாவேத்)
- திரிஷூல் , 1978 (சலீம்-ஜாவேத்)
- டான் , 1978 (சலீம்-ஜாவேத்)
- யுகந்தர் (டான் )திரைப்படத்தின் தெலுங்கு மறுஆக்கம், 1979 (சலீம்-ஜாவேத்)
- காலா பத்தர் , 1979 (சலீம்-ஜாவேத்)
- தோஸ்தானா , 1980 (சலீம்-ஜாவேத்)
- ஷான் , 1980 (சலீம்-ஜாவேத்)
- கிராந்தி , 1981 (சலீம்-ஜாவேத்)
- ஷக்தி , 1982 (சலீம்-ஜாவேத்)
- துனியா , 1984, கதை, திரைக்கதை மற்றும் வசனம்
- மிஸ்டர் இந்தியா , 1987 (சலீம்-ஜாவேத்)
- டான் - தி சேஸ் பிகின்ஸ் அகெய்ன் (சலீம்-ஜாவேத்: ஒரு நிஜக் கதையின் அடிப்படையில் எழுதப்பட்டது), 2006
சிறந்த பாடலாசிரியருக்கான ஃபிலிம்பேர் விருதை இவர் 19 முறைகள் பெற்றுள்ளார்.
பாடல்வரிகள்
|
|
|
மேலும் காண்க
- உருது
- உருது கவிஞர்களின் பட்டியல்
குறிப்புதவிகள்
- Chopra, Anupama (2000). Sholay: The Making of a Classic. Penguin Books India. பக். 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0140299970.
- Spirituality, Halo or Hoax - Javedakhtar.com, Spirituality, Halo or Hoax, 26 February 2005. "There are certain things that I would like to make very clear at the very outset. Don’t get carried away by my name – Javed Akhtar. I am not revealing a secret, I am saying something that I have said many times, in writing or on TV, in public…I am an muslim, . . ."
- சோப்ரா, அனுபமா, ஷோலே - தி மேக்கிங் ஆஃப் தி கிளாசிக் (பெங்குவின் புக்ஸ்) 2000 ISBN 0-14-029970-X
புற இணைப்புகள்
- Javed Akhtar at Kavita Kosh (Hindi)
- இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் ஜாவேத் அக்தர்
- BBC's Noel Thompson interviews JavedAkhtar on 4 September 2006
- JavedAkhtar.com