சைதாப்பேட்டை
சைதாப்பேட்டை (Saidapet) சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு புறநகராகும். இப்பகுதியை சுற்றியிருக்கும் முக்கிய பகுதிகள் தி. நகர், கிண்டி, மாம்பலம், நந்தனம், மற்றும் கே கே நகர் ஆகும். சென்னையின் முதன்மையான சாலையான அண்ணா சாலை இப்பகுதி வழியாக செல்கிறது.
சைதாப்பேட்டை | |
— neighbourhood — | |
அமைவிடம் | 13°03′19″N 80°16′51″E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | இரா. சீத்தாலட்சுமி, இ. ஆ. ப. [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
கோவில்கள்
- காரணீசுவரர் கோவில் - இக்கோவில் மிகவும் பழமையான மற்றும் பிரபலமானதுவும் ஆகும். இங்குள்ள அம்மனின் பெயர் சொர்ணாம்பிகை. இங்கு அழகான தெப்பக்குளம் உள்ளது.
- சௌந்தரேசுவரர் கோவில்
- கடும்பாடி அம்மன் கோவில்
- சந்தன விநாயகர் கோவில்
- அங்காளம்மன் கோவில்
- பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்
- இளங்காளியம்மன் கோவில்
- சுப்பிரமணிய சுவாமி கோவில்
- கரர்க்கட விநாயகர் கோவில்
- லக்ஷ்மி நாராயணர் கோவில்
- முருகர் கோவில்
சித்தர் கோவில்
பிறமதக் கோவில்கள்
சிறப்பு அம்சங்கள்
- மிகப்பழமையான ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி இங்கு உள்ளது. சர்வ பள்ளி இராதாகிருஷ்ணன் இந்த பயிற்சிப்பள்ளியில் படித்தவர். நெ. து. சுந்தரவடிவேலுவும் இங்கு பயின்றவர்.[4]
- இங்குள்ள மீன் சந்தை (மார்க்கெட்) மிகப் பரவலானதும் பிரபலமானதும் கூட.
- தமிழ்நாடு அரசின் கால்நடைத் துறையின்கீழ் இயங்கும் பன்முக கால்நடை மருத்துவமனை இங்கு அமைந்துள்ளது.
- முந்தைய காலத்தில் செங்கற்பட்டு மாவட்டத்தோடு இணைந்திருந்தபோது பஞ்சாயத்துத் தணிக்கைக்காகப் பிரிக்கப்பட்ட சைதாப்பேட்டை வட்டமும் திருப்பெரும்புதூர் வட்டமும் இணைந்த மூன்றாம் பகுதிக்கும், செங்கற்பட்டுக்கும் தலைநகராக, தனி நகராட்சியாக சைதாப்பேட்டை விளங்கியது. [5]
படங்கள்
- சைதாப்பேட்டை சௌந்தரேசுவரர் கோவில்
- சைதாப்பேட்டை குருலிங்க சாமிகள் ஜீவசமாதி கோயில்
- சைதாப்பேட்டை ஞானவிநாயகர் கோயில்
மேற்கோள்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 509
- நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 446
அமைவிடம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.