சிற்றிலக்கிய வகை
பிரபந்தத் திரட்டு பிரபந்த தீபம், பிரபந்த தீபிகை, பிரபந்த மரபியல் என்னும் இலக்கண நூல்களில் பலவகையான 200-க்கு மேற்பட்ட சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது. இவற்றில் பல நூல்களுக்கு இலக்கியங்கள் இக்காலத்தில் காணப்படவில்லை. இலக்கண நூல்கள் காட்டும் சிற்றிலக்கியங்கள் தொகுக்கப்பட்டுப் பொருள்நோக்குப் பாகுபாடு செய்யப்பட்டு அகரவரிசைப்படுத்தி இங்குத் தரப்பட்டுள்ளன. விளக்கம் அவற்றைச் சொடுக்கிக் காணலாம்.
- எண் குறிப்பு
எண்கள் நூலிலுள்ள பாடல் எண்ணைக் குறிப்பன.
- தனி எண் (பிரபந்தத் திரட்டு)
- (-) (பிரபந்த தீபம்)
- ((-)) (பிரபந்த தீபிகை)
- (((-))) (பிரபந்த மரபியல்)
பாடல் எண்ணிக்கையால் பெயர் பெற்றவை
10 பாடல்கள் கொண்ட நூலைப் பழங்காலத்தில் 'பத்து' என்றே பெயரிட்டு வழங்கினர். பிற்காலத்தில் 'பதிகம்' என்று இதனை வழங்கினர். பதிற்றுப்பத்து நூலிலுள்ள 10 பாடல்களுக்குத் 'தொகுப்புரை' அமைந்துள்ள பாடலைப் 'பதிகம்' என்கிறோம். இந்தச் சொல் வேறு. 10 பாடல்கள் கொண்ட 'பதிகம்' என்னும் நூலைக் குறிக்கும் சொல் வேறு.இன்னா நாற்பது போன்ற நூலகளையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.
ஐங்குறுநூறு, அகநானூறு ஆகிய நூல் பெயர்கள் 'நூறு' என்னும் சொல்லாலேயே வழங்கப்படுகின்றன. பிற்காலத்தில் 'சதகம்' என்னும் வடசொல் 100 பாடல்களைக் குறிக்கப் பயன்படுத்தினர்.
|
|
|
பாடல் வகையால் பெயர் பெற்றவை
வெண்பா, விருத்தம் என்பவை பாடலைக் குறிக்கும் பெயர்கள். இவற்றில் ஒரு பெயரை இணைத்துக்கொண்டு பெயர் பெறும் நூல்கள் பல. கலம்பகம் நூலில் பலவகையான பாடல்கள் இடம் பெற்றிருக்கும்.
|
|
|
திணை வகையால் பெயர் பெற்றவை
பொருள் கோட்பாட்டுத் திணைகளைத் தொல்காப்பியர் அகத்திணை 7, புறத்திணை 7 எனப் பாகுபடுத்திக் கண்டார். பிற்காலத்தவர் அகத்திணை 5 என்றும், புறத்திணை 12 என்றும் மாற்றி அமைத்துக்கொண்டனர். இவை அனைத்துமே இலக்கண நூலார் செய்துகொண்ட பாகுபாடுகள். இந்தத் திணைநிலைகளை மையமாகக் கொண்டு அமைந்த தனித்தனிச் சிற்றிலக்கியங்களே இவை.
- வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, தானை ஆகிய 9 போர்த்தொழில் பற்றி எந்த ஒருவகைப் பாட்டாலும் 30 பாடல்கள் பாடும் நூல் அந்தத் திணையால் பெயர் பெறும்.[1]
|
|
தொடை வகையால் பெயர் பெற்றவை
|
|
வாழ்த்து
|
|
உலா
|
|
நிலை பாடல்கள்
|
|
அ, க
|
|
|
ச
|
|
|
த, ந
|
|
|
ப, ம
|
|
|
வ
|
|
|
அடிக்குறிப்பு
-
வெட்சி நிரைகொளல்
தவிர்த்தல் கரந்தை
மாற்றார்பால் செல்லல் வஞ்சி
ஊன்றல் காஞ்சி
மதிலைக் காத்தல் நொச்சி
கற்றல் உழிஞை
தும்பை பொருதல்
வென்று மிகுபுகழ் விளைத்தல் வாகை
தானையை விரித்தல் தானை மாலை
இவை ஒன்பதும்
எப்பாட்டானும் முப்பஃது இயம்பின்
அப்பெயர் வருக்கத்து அவ்வம் மாலை