சாங்கலி

சாங்கலி (Sangli, மராத்தி: सांगली) இந்திய மாநிலம் மகாராட்டிரத்தில் அமைந்துள்ள ஓர் மாநகரமாகும். மாநிலத் தலைநகர் மும்பையிலிருந்து தென்கிழக்கே 372 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு மிகக்கூடுதலாக மஞ்சள் பயிரிடப்படுவதையும் ஆசியாவின் மிகப்பெரும் மஞ்சள் சந்தையாகவும் இருப்பதையடுத்து சாங்கலி மஞ்சள் நகரம் என அறியப்படுகிறது. பல சர்க்கரை ஆலைகளும் இங்குள்ளன. இந்த நகரம் கிருஷ்ணா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கணபதி கோவில் பல சமயப் பயணிகளை ஈர்க்கிறது. சாங்கலியின் பேல்பூரியும் பாதங் எனப்படும் அரிசிப்பொரி தயாரிப்பும் புகழ்பெற்றவை.

சாங்கலி
  நகரம்  
சாங்கலி
இருப்பிடம்: சாங்கலி
, மகாராட்டிரம் , இந்தியா
அமைவிடம் 16°52′01″N 74°34′01″E
நாடு  இந்தியா
மாநிலம் மகாராட்டிரம்
மாவட்டம் சாங்லி
ஆளுநர் சி. வித்தியாசாகர் ராவ்
முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிசு
மக்களவைத் தொகுதி சாங்கலி, மகாராட்டிரம்
Civic agency சாங்கலி-மீரஜ் மற்றும் குப்வாட் நகர மாநகராட்சி (SMKMC)
மக்கள் தொகை 601 (2008)
கல்வியறிவு 77% 
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மகாராட்டிரத்தில் திராட்சைப் பண்ணைகள் மிகுந்த வட்டாரமாகவும் திராட்சைமது இறுக்கும் இடமாகவும் சாங்கலி உள்ளது. மாநில அரசு இத்தொழிலை வளர்க்க சாங்கலியிலிருந்து 30 கிமீ தொலைவில் கிருஷ்ணா பள்ளத்தாக்கு திராட்சைமது பூங்காவை நிறுவியுள்ளது. அண்மையில் இந்தியாவில் காற்றாலை மின்னாற்றல் உற்பத்தி செய்யும் முதன்மை இடமாக முன்னேறி வருகிறது. கல்வித்துறையிலும் பல புகழ்பெற்ற நிறுவனங்கள் இங்குள்ளன. வால்சந்த் பொறியியல் கல்லூரி, மீரஜ் மருத்துவக் கல்லூரி ஆகியன குறிப்பிடத்தக்கவை. இவற்றைத்தவிர 15 பொறியியல் கல்லூரிகளும் 13 பட்டய பொறியியல் நிறுவனங்களும் சாங்கலியைச் சுற்றி 50 கிமீ சுற்றளவில் உள்ளன.

தற்போது சாங்கலியின் அருகாமையிலுள்ள சிற்றூரான குண்டல் பழங்கால இந்தியாவில் 12ஆம் நூற்றாண்டில் சாளுக்கியப் பேரரசின் தலைநகராக இருந்தத்தாக கருதப்படுகிறது.

காலநிலை

தட்பவெப்பநிலை வரைபடம்
சாங்கலி
பெமாமேஜூஜூ்செடி
 
 
0
 
31
12
 
 
1
 
33
15
 
 
4
 
36
18
 
 
30
 
38
21
 
 
44
 
37
22
 
 
86
 
31
22
 
 
98
 
28
21
 
 
72
 
28
21
 
 
139
 
30
20
 
 
163
 
32
19
 
 
9
 
30
16
 
 
0
 
30
13
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: IMD

சாங்கலி மிதமான வறண்ட காலநிலை கொண்டது; வெப்பமிகு வறண்ட வேனிற்காலம் பெப்ரவரி நடுவிலுருந்து சூன் நடுவரையும், மழைக்காலம் சூன் முதல் அக்டோபர் வரையும் மிதமான குளிர்காலம் நவம்பர் துவக்கம் முதல் பெப்ரவரி முதல்பாதி வரையும் நிலவுகிறது. இங்கு பெய்யும் மொத்த மழையின் அளவு ஏறத்தாழ 25.5 அங்குலங்கள் (647.7 மிமீ)

குறிப்பிடத்தக்க இடங்கள்

  • சாங்லி கணபதி கோவில் - சாங்லியின் பட்வர்தன் பரம்பரையினரால் கட்டப்பட்ட பெரிய கோவில்
  • சாகரேசுவர் வனவிலங்கு உய்வகம்
  • கிருஷ்ணா வால்லி வைன் பார்க், பாலுசு - திராட்சை & மது சுற்றுலா இடம்
  • சந்தோலி தேசிய பூங்கா - தற்போது சகயாத்ரி புலி உய்வகம் என பெயரிடப்பட்டுள்ளது
  • சந்தோலி அணை & ஏரி
  • காந்தார் அருவி
  • தண்டோபா பாதுகாக்கப்பட்ட வனம்
  • பிராச்சிகட் கோட்டை - மராத்தா பேரரசர் சிவாஜி மகராஜினால் கட்டப்பட்டது
  • பாட்டிசு சிராலா - காட்டுப் பாம்புகளுக்குப் பெயர்பெற்றது
  • சங்கமேசுவர் சிவன் கோவில், அரிப்பூர்
  • பாகேடில் கணபதி கோவில், அரிப்பூர்
  • டாஸ்கான் கணபதி கோவில்

மேற்கோள்கள்

    வெளியிணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.