கோட்டா மாவட்டம்

கோட்டா மாவட்டம் (Kota) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். கோட்டா நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.

அமைப்பு

இம்மாவட்டத்தின் எல்லைகளாக வடக்கே புந்தி மாவட்டமும், கிழக்கே பரான் மாவட்டமும், தெற்கே ஜலாவார் மாவட்டமும், மேற்கே சித்தோர்கார் மாவட்டமும் அமைந்துள்ளது.

மக்கள் தொகை

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 19,50,491 ஆகும்.,[1] இது அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தின் மக்கட் தொகைக்குச் சமமாகும்.[2] மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 374 எனும் வீதத்தில் உள்ளது.[1]கல்வியறிவு 77.48% ஆகும்.[1]

மேற்கோள்கள்

  1. "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
  2. "2010 Resident Population Data". U. S. Census Bureau. பார்த்த நாள் 2011-09-30. "New Mexico - 2,059,179"
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.