கோட்டா, இராசத்தான்

கோட்டா (Kota, இந்தி: कोटा), இந்தியாவின் வட மாநிலம் இராசத்தானில் உள்ள ஓர் நகரமாகும். மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து தெற்கே 240 கிலோமீட்டர்கள் (149 mi) தொலைவில் சம்பல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சுற்றுப்புறத்தில் பயிராகும் கம்பு, கோதுமை, நெல், தானியங்கள், கொத்தமல்லி மற்றும் எண்ணெய் வித்துகளுக்கு சந்தையாக இந்நகரம் விளங்குகிறது. எண்ணெய் ஆலைகள், பருத்தி ஆலைகள், கைத்தறிகள், உலோக கைவினைப்பொருட்கள் ஆகியன பாரம்பர்ய தொழில்களாகும். பருத்தி சேலைகளில் கோட்டா வகை சேலைகள் தனித்துவம் பெற்றவை. அண்மையில் வேதி உரங்கள், வேதித் தொழிலகங்கள் மற்றும் பொறியியல் தொழிற்சாலைகள் வளர்ந்து வருகின்றன. இராசத்தானின் மூன்று பெரிய நகரங்களில் ஒன்றாக உள்ளது; மற்றவை ஜெய்ப்பூரும் ஜோத்பூரும் ஆகும்.

கோட்டா
மாநகராட்சி
கடிகாரச் சுற்றில் மேலிருந்து வலம்: சம்பல் ஆறு, கடோற்கஜன் வட்டம், ஏழு அதிசயப் பூங்கா, பன்சால் கண்ணாடிகள், ஜெக்மந்திர் அரண்மனை, கோட்டாவின் வான்பரப்புக் காட்சி, வணிக வளாகம், கர் அரண்மனை, வானூர்தி நிலையம்
அடைபெயர்(கள்): இராஜஸ்தானின் கல்வி மற்றும் தொழில் நகரம்
கோட்டா
கோட்டா
ஆள்கூறுகள்: 25°0′0″N 76°10′0″E
நாடுஇந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்கோட்டா
கோட்டம்கோட்டா
அரசு
  வகைDemocratic
  Bodyமாநகராட்சி
  மேயர்Mahesh Vijay (BJP)
  Member of Parliament Kota-BundiOm Birla (BJP)
  Member of Legislative Assembly Kota SouthSandeep Sharma (BJP)
  Member of Legislative Assembly Kota NorthPrahlad Gunjal (BJP)
பரப்பளவு[1]
  மொத்தம்527
ஏற்றம்271
மக்கள்தொகை (2011)[2][3]
  மொத்தம்1
  தரவரிசை46வது இடம்
  அடர்த்தி1
மொழிகள்
  அலுவல் மொழிஇந்தி
  வட்டார மொழிகள்இராஜஸ்தானி மொழி, ஹரௌதி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்324001 to 324011 and 324022
தொலைபேசி குறியீடு எண்0744
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRJ-IN
வாகனப் பதிவுRJ-
பாலின விகிதம்895 /
இணையதளம்kota.rajasthan.gov.in

அண்மையில் இங்கு பொறியியல், மருத்துவம் மற்றும் இந்தியத் தொழிற்நுட்பக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் பெருகி புகழ்பெற்றுள்ளன. கோட்டாவின் தனித்துவமிக்க ஓவியப் பாணியும் குறிப்பிடத்தக்கது.

வெளியிணைப்புகள்

மேலும் அறிய

  • Tod James Annals and Antiquities of Rajasthan: Or, The Central and Western Rajpoot States of India Published 2001 Asian Educational Services ISBN 81-206-1289-2 pp. 407–690
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.