டோங் மாவட்டம்
டோங் (Tonk) மாவட்டம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். டோக் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இம்மாவட்டம் ஜெய்ப்பூரில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.

எல்லைகள்
இம்மாவட்டத்தில் எல்லைகளாக கிழக்கே சவாய் மதோபூர் மாவட்டமும், தென்கிழக்கே கோட்டா மாவட்டமும், வடக்கே ஜெய்ப்பூர் மாவட்டமும், தெற்கே புந்தி மாவட்டமும், தென்மேற்கே பில்வாரா மாவட்டமும், மேற்கே ஆஜ்மீர் மாவட்டமும் அமைந்துள்ளது.
மக்கள் தொகை
2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 14,21,711 ஆகும்.[1] இது சுவிசர்லாந்து நாட்டின் மக்கட்தொகைக்குச் சமமாகும்.[2] அல்லது அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தின் மக்கட் தொகைக்குச் சமமாகும்.[3] இங்கு மக்கள் அடத்தி 198 பேர் ஒரு சதுர கிலோமீட்டருக்கு எனும் வீதத்தில் உள்ளது.[1] கல்வியறிவு 62.46% ஆகும்.[1]
மேற்கோள்கள்
- "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
- US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்த்த நாள் 2011-10-01. "Swaziland 1,370,424"
- "2010 Resident Population Data". U. S. Census Bureau. பார்த்த நாள் 2011-09-30. "Hawaii 1,360,301"