பிகானேர்

பிகானேர் (Bikaner, இராஜஸ்தானி மொழி:बिकाणो) இந்திய மாநிலம் இராஜஸ்தானின் வடமேற்குப் பகுதியில் தார் பாலைவனத்தில் உள்ள ஒர் நகரமாகும். பிகானேர் அதே பெயரிலுள்ள மாவட்டம் மற்றும் கோட்டத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. முன்னதாக பிகானேர் இராச்சியத்தின் தலைநகரமாகவும் விளங்கியது. மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து வடமேற்கே 330 கிலோமீட்டர்கள் (205 mi) தொலைவில் அமைந்துள்ளது. 1486ஆம் ஆண்டு இதனை நிறுவிய ராவ் பிகாவின் நினைவில் இந்நகர் பெயரிடப்பட்டுள்ளது. [1][2][3] இன்று பெரும் வளர்ச்சியைக் கண்டு இராஜஸ்தானின் நான்காவது பெரும் நகரமாக விளங்குகிறது.

பிகானேர்
  நகரம்  
பிகானேர்
இருப்பிடம்: பிகானேர்
, இராஜஸ்தான்
அமைவிடம் 28°01′00″N 73°18′43″E
நாடு  இந்தியா
மாநிலம் இராஜஸ்தான்
மாவட்டம் பிகானேர்
ஆளுநர் கல்யாண் சிங்
முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா
மக்களவைத் தொகுதி பிகானேர்
மக்கள் தொகை

அடர்த்தி

7,23,982 (2008)

1,960/km2 (5,076/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

270 கிமீ2 (104 சதுர மைல்)

242 மீட்டர்கள் (794 ft)

1928ஆம் ஆண்டில் முடிக்கப்பட்ட கங்கா கால்வாயும் 1987ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்திராகாந்தி கால்வாயும் வேளாண்மைக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளன. கடுகு, பருத்தி, நிலக்கடலை, கோதுமை மற்றும் காய்கறிகள் பயிராகின்றன. கம்பளித் தயாரிப்பும் ஜிப்சம், பாரிசுச் சாந்து மற்றும் பெண்டோனைட் அகழ்ந்தெடுத்தலும் பிற தொழில்களாகும். பிகானேர் நகரம் கார,இனிப்பு வகைகளுக்கு (இந்தியில் நம்கீன் என்று சொல்லப்படுகிறது தின்பண்டங்களுக்கு) பெயர்பெற்றது.

வழிபாட்டுத் தலங்கள்

இதனையும் காண்க

  1. பிகானேர் இராச்சியம்


மேற்கோள்கள்

  • Patnaik, Naveen. (1990). A Desert Kingdom: The Rajputs of Bikaner. George Weidenfeld & Nicolson Ltd., London.
  1. http://www.bkn.co.in/History.php
  2. http://www.prachinamuseum.org/bikaner.htm
  3. http://www.travelgrove.com/travel-guides/India/Bikaner-History-c868406.html

வெளியிணைப்புகள்

  • District Government Site
  • www.realbikaner.com/
  • bikaner.nic.in
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.