சோத்பூர்

சோத்பூர் அல்லது ஜோத்பூர் (Jodhpur , जोधपुर), இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள இரண்டாவது பெரிய நகரம் ஆகும். இது ஆங்கிலேய ஆட்சியில் முந்தைய ராஜஸ்தானின் தலைநகரமாகவும் மார்வார் என அறியப்படும் அரசாட்சிப் பகுதியின் தலைநகரமாகவும் இருந்தது. சோத்பூர் ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாகும். பல அரண்மனைகள், கோட்டைகள் மற்றும் கோயில்கள், தார் பாலைவனத்தின் வித்தியாசமான இயற்கைக்காட்சி அமைப்பு ஆகியவை இந்நகரின் சிறப்பாகக் கூறப்படுகிறது.

சோத்பூர்
  மாநகராட்சி  
சோத்பூர், "'சூரிய நகரம்"' என்றும் அழைக்கப்படுகிறது
சோத்பூர், "'சூரிய நகரம்"' என்றும் அழைக்கப்படுகிறது
சோத்பூர்
இருப்பிடம்: சோத்பூர்
, இராச்சசுத்தான்
அமைவிடம் 26°17′N 73°01′E
நாடு  இந்தியா
மாநிலம் இராச்சசுத்தான்
மாவட்டம் சோத்பூர் மாவட்டம்
ஆளுநர் கல்யாண் சிங்
முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா
மாநகரத் தந்தை ராமேசுவர் தாதிசு
மக்களவைத் தொகுதி சோத்பூர்
மக்கள் தொகை

அடர்த்தி

11,10,000[1] (2010)

11,210/km2 (29,034/sq mi)[2]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

95.50 கிமீ2 (37 சதுர மைல்)

231 மீட்டர்கள் (758 ft)

இந்நகரத்தின் பொலிவு காரணமாக சூரிய நகரம் என சோத்பூர் அழைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் இங்கு வெப்பமான பருவநிலை காணப்படுகிறது. மேலும் மெஹ்ரன்கார்ஹ் கோட்டையைச் சுற்றியிலுள்ள வெள்ளையடிக்கப்பட்ட வீடுகளின் கருநீல சாயத்தின் காரணமாக நீல நகரம் எனவும் இது அழைக்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் புவிமையப் பகுதியில் சோத்பூர் அமைந்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளால் அடிக்கடி இந்தப் பிரதேசத்திற்கு பயணிக்கும் விதத்தில் சாதகமான இடமாக இந்நகரம் அமைந்துள்ளது. ஜோத்பூரின் பழைய நகரம் தடிப்பான கற்சுவர்களால் சூழப்பட்டுள்ளது.

வரலாறு

மெஹ்ரன்கார்ஹ்ஹில் இருந்து பார்க்கமுடிகிற ஜோத்பூரின் பரந்தத் தோற்றம்

குர்ஜரா - பிரதிஹாரா பேரரசின் ஒரு பகுதியான இப்பிரதேசம் 1100 CE வரை வலிமை மிக்க பார்குஜார் அரசரால் ஆளப்பட்டு வந்தது.

1459 ஆம் ஆண்டில் ராத்தூர் குலத்தின் ராஜ்பூட் தளபதி ராவ் ஜோதா ஜோத்பூரை உருவாக்கினார். ஜோத்பூரை சுற்றியுள்ள அனைத்து ஆட்சி பரப்புகளையும் ராவ் ஜோதா வெற்றிகொண்டார். பின்னர் மார்வார் என்ற மாநிலத்தை நிறுவினார். ராவ் ஜோதா அருகில் இருந்த நகரமான மேண்ட்ரோவைச் சேர்ந்தவர் ஆவார். தொடக்கத்தில் மாநிலத்தின் தலைநகரமாக இந்த நகரம் கருதப்பட்டது. எனினும் ராவ் ஜோதா காலத்திலேயே விரைவில் சோத்பூர் தலைநகரானது. டெல்லியில் இருந்து குஜராத்திற்கு செல்லும் முக்கிய சாலை இணையும் இடத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. அபின், செம்பு, பட்டு, மிதியடிகள், ஈச்ச மரங்கள் மற்றும் காஃபி போன்ற பொருட்களின் வர்த்தகம் இந்நகரின் முக்கிய வருவாயாக இருக்கிறது.

இதன் முந்தைய வரலாற்றில் முகலாயப் பேரரசின் கீழ் ஒரு மானிய நிலமாக இந்த மாநிலம் மாறியது. இன்னும் கொடுக்கப்பட்டிருக்கும் ராஜ மரியாதையால் அவர்கள் சில உட்புற சுய ஆட்சியை அனுபவிக்கின்றனர். இந்த வரலாற்று காலத்தின் போது மகாராஜா ஜஸ்வண்ட் சிங் போன்ற பல்வேறு சிறப்புமிக்க தளபதிகளுடன் இந்த மாநிலத்தை முகலாயர்கள் அளித்தனர். உலகில் ஜோத்பூரின் பிரபலத்தின் காரணமாக அந்நகரம் மற்றும் அதன் மக்கள் பயனடைந்தனர். கலை மற்றும் கட்டடக்கலையின் புதிய பாணிகளின் மூலம் உள்ளூர் வர்த்தகர்களுக்கு அவர்கள் தோற்றம் மற்றும் வாய்ப்புகளை வழங்கினர். இதன் மூலம் இந்தியா முழுவதும் அவர்களது அடையாளத்தை ஏற்படுத்தினர்.

இந்த மாநிலத்தை (c.1679) ஒளரங்கசீப் குறிப்பாக சிறுபான்மையினரின் போலிக்காரணங்களால் தனதாக்கிக் கொண்டார். ஆனால் 1707 ஆம் ஆண்டில் ஒளரங்கசீப் இறந்த பிறகு இதன் சரியான அரசனின் ஆட்சிக்கு மீண்டும் சேர்க்கப்பட்டது. 1707 ஆம் ஆண்டுக்குப் பிறகு முகலாயப் பேரரசு படிப்படியாக சரியத்தொடங்கியது. ஆனால் உட்சதியால் சோத்பூர் நீதிமன்றத்திற்கு தீங்கிழைக்கப்பட்டது. ஆனால் இந்த சூழ்நிலைகளில் இருந்து ஆதாயமடையும் நோக்கில் நிலக்கிழார்களாக அப்பிரதேசத்தை ஆக்கிரமித்த முகலாயர்கள் மார்வார் வழிவந்தவர்களின் சச்சரவுகளையும் மற்றும் மராத்தாக்களின் குறிக்கீடையும் வரவேற்றனர். எனினும் நிலைப்புத் தன்மை மற்றும் அமைதிக்காக இது ஏற்படுத்தப்படவில்லை. 50 ஆண்டுகாலப் போர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் மாநிலத்தின் செல்வத்தை சீரழித்தன. இதனைப் பயன்படுத்திக் கொண்டு 1818 ஆம் ஆண்டில் ஆங்கிலேயருடன் நேச நாடுகளும் படையெடுத்து வந்தன.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது ராஜ்புட்டனாவின் அனைத்து நிலப்பகுதியையும் விட அதிகமான நிலத்தை சோத்பூர் மாநிலம் கொண்டிருந்தது. அமைதி மற்றும் நிலைத்தன்மையின் கீழ் சோத்பூர் செழித்தோங்கியது. இது இந்த வரலாற்று காலத்தின் ஒரு தரக்குறியீடாக இருந்தது. இந்த மாநிலத்தின் நிலப்பகுதி 23543 mi² ஆக இருந்தது. மேலும் 1901 ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 44,73,759 ஆக இருந்தது. இது ஒரு தோராயமான மதிப்பாக £35,29,000/ வருவாயைக் கொண்டிருக்கிறது. அதன் வணிகர்களான மார்வாரிகள் இந்தியா முழுவதிலும் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்களை அவர்களது இடத்தை ஆக்கிரமித்து வளர்ச்சிபெறவோ அல்லது ஒரு எல்லைக்கு மேல் வளர்ச்சி அடையவோ அனுமதிப்பதில்லை. 1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்த மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது மற்றும் ராஜஸ்தானின் இரண்டாவது நகரமாக சோத்பூர் விளங்கியது.

ஜோத்பூரின் மகாராஜா ஆட்சி செய்து வந்த கோர்வார் பிரதேசத்தின் மீது ஓஸ்வல் ஜெயின்கள் கவனம் செலுத்தினர். மேலும் ஓஸ்வல் ஜெயின்கள் அதிகப்படியான செல்வத்தை மற்றும் இரத்தினக் கற்களை ஜோத்பூரின் மகாராஜாவிற்கு நன்கொடையளித்ததன் மூலம் ஜோத்பூரின் வலிமையான அஸ்திவாரத்திற்கு முக்கியப் பங்காற்றியுள்ளனர். மேலும் செல்வ வளமிக்க ஓஸ்வல் ஜெயின் வணிகர்களை நாகர் செத் அல்லது பல்வேறு பிற கெளரவமான தலைப்புகளில் அழைத்து கெளரவிப்பதற்கு சோத்பூர் மகாராஜா இதனைப் பயன்படுத்துகிறார்.

பிரிவினையின் போது ஜோத்பூரை ஆட்சி செய்த ஹன்வண்ட் சிங் இந்தியாவுடன் சேர்வதற்கு விரும்பவில்லை. ஆனால் இறுதியில் சுதந்திர இந்தியாவில் ஜோத்பூரின் தலைநகர மையத்தின் பின்னால் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிறப்பான தலைமையில் இந்நகரம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. பின்பு மாநில மறுஅமைப்பு சட்டம் 1956 ஆம் ஆண்டுக்குப் பிறகு இது ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது[3].

புவியியல் மற்றும் பருவநிலை

ஜோத்பூரின் அரண்மனைத் தோட்டங்கள்

சோத்பூர் 26.29°N 73.03°E / 26.29; 73.03[4] என்ற கோணத்தில் அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் 232 மீட்டர்கள் (761 அடி) ஆகும்.

ஜோத்பூரின் பருவநிலை பொதுவாக வெப்பமாகவும் மிதவறட்சியாகவும் இருக்கும். ஆனால் ஜூன் பிற்பகுதி முதல் செப்டம்பர் வரை மழைக்காலமாக இருக்கும் (கோப்பென் BShw ). எனினும் மழைப்பொழிவு சராசரியாக ஏறத்தாழ 360 மில்லிமீட்டர்கள் (14 in) ஆக இருக்கும், இதன் அளவு அசாதாரணமாக மாறுபடும். 1899 ஆம் ஆண்டில் பஞ்ச காலத்தில் 24 மில்லிமீட்டர்கள் (0.94 in) அளவு மட்டுமே சோத்பூர் கொண்டிருந்தது. ஆனால் 1917 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருமழையில் அதிக அளவாக 1,178 மில்லிமீட்டர்கள் (46.4 in) இந்நகரில் பதிவானது.

பருவமழையின் போது அடர்த்தியான மேகங்களினால் வெப்பநிலை சிறிது குறையும் அதைத்தவிர மார்ச் முதல் அக்டோபர் வரை எப்பொழுதும் அதிக வெப்பநிலையே இருக்கும். எனினும் அடைமழைக் காலங்களின் போது பொதுவாகவே குறைவான ஈரப்பதம் அதிகரித்து வெப்பத்திலிருந்து சிறிது அசெளகரியத்தை உருவாக்குகிறது.

நினைவுச்சின்னங்கள்

எண்ணற்ற வரலாற்று நினைவுச்சின்னங்கள் நகரத்திலும் அந்தப் பிரதேசத்தைச் சுற்றிலும் அமைந்துள்ளன. அவற்றில் சில நினைவுச்சின்னங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

உமைத் பவன் அரண்மனை

உமைத் பவன் அரண்மனை.

உமைத் பவன் அரண்மனை இந்தியாவின் அதிக கம்பீரமான அரண்மனைகளில் ஒன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அரண்மனைகள் பலவற்றுள் மிகவும் அண்மைகாலத்ததாகவும் இருக்கிறது. இதன் ஏராளமான கலை வேலைப்பாடு நினைவுச்சின்னமானது தற்போதும் அங்கு ஒரு அரசர் வாழ்ந்து வருவது போன்ற கற்பனையை நமக்கு ஏற்படுத்துகிறது. ஒரு நீண்ட பஞ்ச காலத்தின் போது பொது நிவாரணம் மற்றும் பணியாளர் செயல்திட்டமாக இந்த அரண்மனைக் கட்டப்பட்டது. அரண்மனையின் கட்டுமானப் பணியின் போது ஒரு மில்லியன் சதுர அடிக்கு (90,000 m²) மேலான தரமான சலவைக்கற்கள் பயன்படுத்தப்பட்டன. சிட்டார் மணற்கல் என அழைக்கப்படும் ஒரு சிறப்புவகை மணற்கல் அரண்மனைக் கட்டுமானப் பணியில் பயன்படுத்தப்பட்டதன் மூலம் அது ஒரு சிறப்பான விளைவைக் கொடுத்தது. இந்தக் காரணத்திற்காக உள்ளூர் மக்களால் இது சிட்டார் அரண்மனை எனவும் அழைக்கப்படுகிறது. இதன் கட்டமைப்பின் பாணியானது அழகான மேல்மாடம், கவர்ச்சிமிக்க முற்றங்கள், பசுமைத் தோட்டங்கள் மற்றும் மதிப்புவாய்ந்த அறைகளுடன், இந்தோ-சாராசெனிக் கட்டடக்கலைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது. இந்தச் செயல்திட்டத்திற்கு 15 ஆண்டு காலங்களுக்கு மேல் (1929-1943) 3,000 கலைஞர்கள் பணியமர்த்தப்பட்டனர். இந்த அரண்மனையைக் கட்டிய மகாராஜா உமைத் சிங்கின் (1876-1947) பெயரே பிறகு இதற்கு இடப்பட்டது. இவர் கட்டடக் கலைஞர்களுக்கான பிரிட்டிஷ் ராயல் கல்வி நிறுவனத்தின் அவைத்தலைவராகவும் இருந்தார். 1977 ஆம் ஆண்டில் இந்த அரண்மனையானது அரசக் குடியிருப்பு, பாரம்பரியமானத் தங்கும் விடுதி மற்றும் அருங்காட்சியகம் எனப் பிரிக்கப்பட்டது. இது மொத்தமாக 347 அறைகளைக் கொண்டுள்ளது. இது உலகத்தின் மிகப்பெரிய தனியாளர் குடியிருப்பாகும். பழங்கால அறைக்கலனுடன் இங்குள்ள 98 குளிர்சாதன அறைகளும் நேர்த்தியாக அழகுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் ஐந்து நட்சத்திரத் தங்கும் விடுதியில் உள்ளதைப் போன்று அனைத்து வசதிகளும் இக்குடியிருப்பில் உள்ளன.

மெஹ்ரன்கார்ஹ் கோட்டை

அடையாளச்சின்னமான மெஹ்ரன்கார்ஹ் கோட்டை

மெஹ்ரன்காஹ் கோட்டை சோத்பூர் நகரத்தின் புறநகர்பகுதியில் 125 மீ உயர மலை மீது அமைந்துள்ளது. சிறப்புவாய்ந்த மெஹ்ரன்காஹ் கோட்டையானது (சோத்பூர் கா கிலா), இந்தியாவின் மிகவும் கம்பீரமான மற்றும் பெரிய கோட்டைகளில் ஒன்றாகும். இந்தக் கோட்டை முதலில் ஜோத்பூரை நிறுவிய ராவ் ஜோதாவால் (c.1459) தொடங்கப்பட்டது. எனினும் பெருமளவில் அழிந்து போகாத கோட்டையானது ஜஸ்வந் சிங்கின் (1638-78) காலத்தில் இருந்து தொடங்கப்பட்டது. இந்தக் கோட்டையின் சுவர்கள் 36 மீ உயரம் வரையிலும் 21 மீ அகலத்திலும் உள்ளன. இவை கொஞ்சம் நேர்த்தியான அழகுடையக் கட்டமைப்பைக் கொண்டுள்ளன. இந்தக் கோட்டையின் அருங்காட்சிய இல்லங்களானது மூடு பல்லக்குகள், அம்பாரிகள், அரச தொட்டில்கள், நுண்ணிய ஓவியங்கள், இசைசார் கருவிகள், ஆடைகள் மற்றும் அறைகலன்களுடன் ஒரு நேர்த்தியான தொகுப்புகளைக் கொண்டுள்ளன. மெஹ்ரன்காஹ் கோட்டையின் மதிற்சுவர்கள் மிகச்சிறந்த காப்பக பீரங்கிகளைக் கொண்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் அது நெஞ்சை அள்ளும் நகரத்தின் இயற்கைக்காட்சியையும் கொண்டுள்ளது.

ஜஸ்வந்த் தாடா

ஜஸ்வந்த் தாடா என்பது சோத்பூரில் காணப்படும் ஒரு கட்டடக்கலை சார்ந்த இடக்குறிப்புப் பகுதியாகும். இது 1899 ஆம் ஆண்டில் இரண்டாம் ஜஸ்வந்த் சிங் மகாராஜாவின் நினைவாக கட்டப்பட்ட வெள்ளை சலவைக்கல் நினைவாலயமாகும். இந்த நினைவுச்சின்னம் முழுவதும் கடுஞ்சிக்கலான சிற்பப் படைப்புகளுடன் சலவைக்கல்லினால் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கற்கள் மிகவும் மெலிதாகவும் சிறப்பாகப் பளபளப்பாக்கப்பட்டும் உள்ளன. அதனால் சூர்யோதயத்தின் போது அதன் மேற்பரப்பு முழுவதும் நடனத்தைப் போன்ற மிதமான அழகொளியை பிரதிபலிக்கின்றன. இந்த நினைவுச்சின்னத்தினுள் இரண்டு சமாதிகளும் உள்ளன.

ஓசியன் கோவில்

இது சென்று பார்க்கும் நன்மதிப்புடைய ஒரு தொண்மையான கோவிலாகும். இந்தக் கோவில் ஜோத்பூருக்கு வெளியே 60 கிமீ தொலைவில் உள்ள ஓசியன் கிராமத்தில் அமைந்துள்ளது. அனைத்து ஓஸ்வாலும் (ஒரு பெருமளவான ஜெயின் சமுதாயம்) ஓசியனில் இருந்து தோற்றுவிக்கப்பட்டன என இங்கு நம்பப்படுகிறது. இந்தக் கோவிலில் பலப் பகுதிகள் உள்ளன. முற்றிலும் மாறுபட்ட பல்வேறு பிரிவுகளாக இவைக் கட்டப்பட்டுள்ளன.

மக்கள் தொகைப் புள்ளிவிவரம்

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[5] ஜோத்பூரின் மக்கள் தொகை 846,408 ஆகும். மக்கள் தொகையில் 53 சதவீத ஆண்களும், 47 சதவீதப் பெண்களும் உள்ளனர். ஜோத்பூரின் சராசரியான கல்வியறிவு விகிதம் 67 சதவீதமாக உள்ளது. இது தேசிய சராசரியான 59.5 சதவீதத்தை விட அதிகமாகும். இதில் 75 சதவீதம் ஆண்களும், 58 சதவீதம் பெண்களும் கல்வியறிவு பெற்றுள்ளனர். சோத்பூரில் 14 சதவீதம் பேர் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாக உள்ளன

பொருளாதாரம்

நகரத்தின் பிற தொழில்துறைகளால் கைத்தொழில்துறை அண்மைகாலங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. சில மதிப்பீட்டின் மூலம் அறைகலன்கள் ஏற்றுமதிப் பகுதியானது $200 மில்லியன் தொழிற்துறையாக உள்ளது, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 200,000 மக்கள் இதில் பணிபுரிகின்றனர். நெசவகங்கள், உலோகப் பாத்திரங்கள், மிதிவண்டிகள், மை மற்றும் விளையாட்டுப் பொருள்கள் உள்ளிட்ட பிற வகைகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. கண்ணாடி வளையல்கள், சமையலறைக் கத்திகள், கம்பளங்கள் மற்றும் சலவைக்கல் தயாரிப்புகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கான, வளர்ந்து வரும் குடிசைத் தொழில்கள் பல இங்கு இருக்கின்றன.

கைத்தொழில்களுக்குப் பிறகு ஜோத்பூரின் மிகப்பெரிய தொழிற்துறை சுற்றுலாத்துறை ஆகும். கோதுமை உள்ளிட்ட விவசாயம் சம்பந்தப்பட்டவை இங்கு பயிரிடப்படுகின்றன. மேலும் மதனியா வின் சிகப்பு மிளகாய்கள் இங்கு பிரபலமாக உள்ளன. ஜிப்சம் மற்றும் உப்பு ஆகியவை தோண்டப்படுகிறது. கம்பளி மற்றும் விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு இந்நகரம் ஒரு முக்கிய சந்தை இடமாகவும் செயலாற்றுகிறது. இந்திய விமானப்படை, இந்திய இராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை போன்றவை சோத்பூரில் பயிற்சி மையங்களை அமைத்துள்ளன.

நிர்வாகம்

ஜோத்பூரின் நிர்வாகம் மாவட்ட ஆட்சியரின் கீழ் இயங்குகிறது. இவருக்கு கீழ் 4 (I,II, நில மாற்றம் மற்றும் நகர ADM) கூடுதல் மாவட்ட குற்றவியல் நீதிபதிகளும் உள்ளனர். தற்போது ஆட்சியர் மற்றும் மாவட்ட குற்றவியல் நீதிபதியாக மிஸ்டர் நவீன் மஹாஜன் (I.A.S) பதவி வகிக்கிறார்.

சுற்றுலாப் பயணங்கள்

  • மந்தோர்
  • கல்யானா ஏரி மற்றும் தோட்டம்
  • பல்சமந்த் ஏரி
  • சர்தார் சமந்த் ஏரி மற்றும் அரண்மனை
  • தாவா (தோலி) வனப்பகுதி
  • கிச்சன்
  • ஓசியன்

நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள்

ஜோத்பூருக்கு அருகே அமைந்துள்ள ராணக்பூர் சமணர் கோயில்கள்

சமையற்கலை

பல சுவைமிக்க இந்திய உணவு சோத்பூரில் இருந்து வெளிவந்தன எனலாம். அவற்றில் மனநிறைவளிக்கும் மக்ஹானியா லஸ்ஸி, மாவா கச்சோரி, பாயாஜ் கச்சோரி, சூடான & காரசாரமான மிர்சிபடா (உருளைக்கிழங்கு, ஆனியன், சில்லி மற்றும் கிராம்பிளார் கொண்டு தயாரிக்கப்படும்) ( பிரபலமான சவுத்ரி கா மிர்சி படா), தால் பாட்டி சர்மா, பன்ச்குட்டா, லப்ஸி (கோதுமை, பனைவெல்லம் மற்றும் நெய்யுடன் தயாரிக்கப்படும் ஒரு சிறப்புவகை உணவு), கச்சர் மிர்சா கரி (சில்லி மற்றும் பாலைவனப் பகுதியில் வளரும் ஒரு சிறப்பு வகை காய்கறியான கச்சரைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது) மற்றும் காடை (க்ராம்பிளார், தயிர் மற்றும் மிளகாயுடன் தயாரிக்கப்படுகிறது) அதனுடனான பாஜ்ரெ கா சோக்ரா ஆகியவை அடங்கும். பாரம்பரியமான "மக்ஹன்படா " முதல் பெங்காலி "ரசகுல்லாஸ் " வரையுள்ள உயர்தரமான இனிப்புகள் மூலமும் சோத்பூர் அறியப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் பிட்சா ஹட், மெக்டொனால்ட்ஸ், பாஸ்கின் ராபின்ஸ் போன்ற மற்றும் பல பிரபலமான வாணிகர்கள் அவர்களது கடைகளை இங்கு திறந்துள்ளனர். பிட்சா ஹட் இங்கு தோல்வியடைந்ததன் காரணமாக அவர்களது கடைகள் இங்கு மூடப்பட்டுவிட்டன.

ராணுவம்

மேற்கு ராஜஸ்தானின் போர்கலையியல் இடங்கள் காரணமாக இந்திய விமானப் படை, இந்திய இராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகமான வருகையை சோத்பூர் கொண்டிருக்கிறது.

சோத்பூர் AFS

சோத்பூர் அதன் காலவரையில் பயிற்சி நிறுவனங்களின் பெருவளத்தைப் பார்த்துள்ளது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஃபேர்சைல்ட் கார்னெல் வானூர்தி பயிற்சியளித்த, எண்.1 தொடக்கநிலை விமானப்பயிற்சிப் பள்ளியை (எண்.2 EFTS) RAF தன்னகத்தே கொண்டுள்ளது. பிறகு சுதந்திரத்திற்குப் பின்னர் IAF இன் மூலமாக எண்.2 விமானப்படை அகாடமி தொடங்கப்பட்டது. இதில் விமானப் பயிற்சி அளிப்பதற்காக பெர்சிவல் ப்ரெண்டிஸ் மற்றும் ஹார்வர்ட் ட்ரைனர் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. பிறகு ஹார்வர்டில் நவீனப் பயிற்சியை அளிப்பதற்கு ஏர்போர்ஸ் ஃபிளையிங் காலேஜ் (AFFC) என்று எண்.2 AFA இன் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1965 ஆம் ஆண்டின் இந்திய பாகிஸ்தான் போருக்குப் பிறகு விமானப்பயிற்சி தடைசெய்யப்பட்டது. ஆனால் அங்கு தென்மேற்கு வான் அதிகாரத்தின் கீழ் ஒரு விமானப் படை நிலையம் பராமரிக்கப்பட்டு வருகிறது. SWAC காந்திநகருக்கு மாற்றப்படும் முன்பு அதன் தலைமையகம் சோத்பூரில் இருந்தது. முன்பு HQ, SWAC HQ அருங்காட்சியகமாக இருந்தபோது 1971 ஆம் ஆண்டு போரில் சேதமடைந்த ஒரு F-104 ஸ்டார்பைட்டர் உள்ளிட்ட சில வானூர்திகளை தன்னகத்தில் கொண்டிருந்தது. இந்த அருங்காட்சியகம் சோத்பூரில் இன்னும் உள்ளதா அல்லது காந்திநகருக்கு மாற்றப்பட்டு விட்டதா என்பது சரியாகத் தெரியவில்லை. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முந்தைய அதிகார இல்லத்தில் ஒரு புதிய மரபுடைமை அருங்காட்சியம் திறக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் மூன்று வானூர்திகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு F-104 ரெக் வைக்கப்பட்டு இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

நீதித்துறை

  • ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்

கல்வி

  • MBM பொறியியல் கல்லூரி, சோத்பூர்
  • இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சோத்பூர்
  • ஆயெர்வெட் பல்கலைக்கழகம், சோத்பூர்
  • போர்டு ஆப் டெக்னிக்கல் எஜுகேசன், சோத்பூர்
  • முந்தைய சோத்பூர் பல்கலைக்கழகமான ஜெய் நரேன் வியஸ் பல்கலைக்கழகம், சோத்பூர்
  • தேசிய சட்டப் பல்கலைக்கழகம், சோத்பூர்
  • டாக்டர் எஸ்.என். மருத்துவக் கல்லூரி, சோத்பூர்
  • அரசாங்க பல்நுட்பியல் கல்லூரி, சோத்பூர்
  • சோத்பூர் தேசியப் பல்கலைக்கழகம், சோத்பூர் www.jodhpurnationaluniversity.com
  • லக்கோ மெமோரியல் காலேஜ் ஆப் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி, www.lachoomemorial.org
  • ஜி.டி.மெமோரியல் கலேஜ் ஆப் ஃபார்மசி, வட்டப்பகுதி-4, குரி- பஹ்டஸ்னி வீட்டு வசதி வாரியம், சோத்பூர், வலை: www.gdmcp.luckygroup.edu.in

போக்குவரத்து

இந்நகரம் சாலை, இரயில் மற்றும் வான்மார்க்கமாக மிகவும் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது. சோத்பூர் - இந்தோர் எக்ஸ்பிரஸ், சோத்பூர் - போபால் எக்ஸ்பிரஸ், சோத்பூர் - பூரி எக்ஸ்பிரஸ் மற்றும் பிற இரயில்கள் சோத்பூரை பிற இடங்களுடன் இணைக்கிறது.

மேலும் காண்க

கூடுதல் வாசிப்பு

  • சோத்பூர் , [s.l.] மூலமாக வெளியிடப்பட்டது, 1933.
  • மகாராஜா M 1973.
  • மார்வார் அண்டர் ஜஸ்வந்த் சிங், (1658-1678): சோத்பூர் ஹுக்குமட் ரீ பஹி , சதிஷ் சந்திரா, ரகுபீர் சிங்கால் எழுதப்பட்டது, கன்ஷியம் தட்டன் சிங் ஆப் சோத்பூர் அண்ட் ஹிஸ் டைம்ஸ் (1803-1843 A.D.) பத்மஜா சர்மாவால் எழுதப்பட்டது. ஷிவா லால் அகர்வாலாவால் வெளியிடப்பட்டது, 1972.
  • த அட்மினிஸ்ட்ரேசன் ஆப் சோத்பூர் ஸ்டேட், 1800-1947 A.D. , நிர்மலா M. உபத்யாயாவால் எழுதப்பட்டது. சர்வதேச வெளியீட்டாளர்கள், ஷர்மா. மீனாக்ஷி பிரகாஸ்ஹன்னால் வெளியிடப்பட்டது, 1976.
  • சோத்பூர், பிக்கெனர், ஜெய்சால்மெர்: டிசர்ட் கிங்டம்ஸ் , கிஷோர் சிங், கரோக்கி லீவிஸால் எழுதப்பட்டது. லஸ்டெர் பிரெஸ் லிமிட்டெடு. 1992.
  • த ஹவுஸ் ஆப் மார்வார்: த ஸ்டோரி ஆப் சோத்பூர் தனனஜெய சிங்கால் எழுதப்பட்டது. லோட்டஸ் கலெக்சன், ரோலி புக்ஸ், 1994. ISBN 81-7436-002-6.
  • மாடன் இந்தியன் கிங்சிப்: டிரடிசன், லிஜிடிமசி & பவர் இன் சோத்பூர் மர்சியா பால்ஜனியால் எழுதப்பட்டது. ஜேம்ஸ் குர்ரே லிமிட்டெடால் வெளியிடப்பட்டது, 2003. ISBN 0-85255-931-3.
  • சோத்பூர் அண்ட் த லேட்டர் முகல்ஸ், AD 1707-1752 , R. S. சங்வனால் எழுதப்பட்டது. பிரகதி பப்ளிகேசனால் வெளியிடப்பட்டது, 2006.

குறிப்புகள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.