கார்பன் நான்கையோடைடு

கார்பன் நான்கையோடைடு (Carbon tetraiodide) என்பது CI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட நான்கு ஆலோ மீத்தேன் வகை வேதியியல் சேர்மமாகும். பிரகாசமான சிவப்பு நிறம் கொண்ட இச்சேர்மம் வண்ணமயமான மீத்தேன் வழிப்பொருட்களுக்கு சிறந்த உதாரணமாகக் கருதப்படுகிறது. இதர மீத்தேன் வழிப்பொருட்கள் மிகக்குறைவான எடைஅளவு கார்பனை பெற்றிருந்தாலும் இச்சேர்மம் சற்றுக் கூடுதலாக 2% கார்பனின் எடையைப் பெற்றுள்ளது.

கார்பன் நான்கையோடைடு
Ball and stick model of carbon tetraiodide
Spacefill model of carbon tetraiodide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நான்கையோடோமீத்தேன்[1]
இனங்காட்டிகள்
507-25-5 N
Beilstein Reference
1733108
ChemSpider 10055 Y
EC number 208-068-5
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10487
வே.ந.வி.ப எண் FG4960000
பண்புகள்
CI4
வாய்ப்பாட்டு எடை 519.63 g·mol−1
தோற்றம் அடர் கருநீலப் படிகங்கள்
அடர்த்தி 4.32 கி மி.லி −1
கட்டமைப்பு
படிக அமைப்பு நான்முகம்
மூலக்கூறு வடிவம்
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0 D
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
384.0–400.4 கி.கி.யூ மோல்−1
Std enthalpy of
combustion
ΔcHo298
−794.4–−778.4 கி.கி.யூ மோல்−1
வெப்பக் கொண்மை, C 0.500 யூ கி−1 கி−1
தீங்குகள்
GHS pictograms
GHS signal word WARNING
H315, H319, H335
P261, P305+351+338
ஈயூ வகைப்பாடு Xi
R-சொற்றொடர்கள் R36/37/38
S-சொற்றொடர்கள் S26, S36
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இது: Y/N?)
Infobox references

இந்த நான்முகி மூலக்கூறின் தோற்றத்தில் 2.12 ± 0.02 Å.[2] என்ற இடைவெளி தொலைவுடன் C-I பிணைப்புகள் உள்ளன. குறுகிய அயோடின் – அயோடின் 3.459 ± 0.03 Å பிணைப்புகளால் இம்மூலக்கூறு சற்று நெரிசலாகக் காணப்படுகிறது. இதன்காரணமாகவே வெப்பத்திலும் ஒளியிலும் இச்சேர்மம் நிலைப்புத்தன்மை இன்றி காணப்பட வாய்ப்பு ஏற்படுகிறது. அனேகமாக இதே காரணத்தினாலேயே அறு அயோடோ ஈத்தேன் அறியப்படாமல் இருக்கலாம்.

கார்பன் நான்கையோடைடு நான்முக படிகவமைப்பில் (a 6.409, c 9.558 (.10−1 நானோ மீட்டர்)[3].படிகமாகிறது.

சமச்சீராக நான்முக மூலக்கூறுகள் பதிலீடு செய்யப்பட்டிருப்பதால் இருமுனைத் திருப்புத்திறன் இங்கு சுழியாக உள்ளது.

பண்புகள்

தண்ணீருடன் CI4 வினைபுரிந்து அயோடோஃபார்ம் மற்றும் அயோடின் ஆகியனவற்றைத் தருகிறது. மற்றபடி இச்சேர்மம் முனைவற்ற கரிமக் கரைப்பான்களில் கரைகிறது. வெப்பம் மற்றும் ஒளியால் சிதைவடைந்து நான்கையோடோ எத்திலீனாக I2C=CI2 மாறுகிறது.

தயாரிப்பு

அலுமினியம் முக்குளோரைடு வினையூக்கியாகச் செயலாற்றி அறை வெப்பநிலையில் ஆலசன் பரிமாற்ற தொகுப்பு வினையின் மூலமாக கார்பன் நான்கையோடைடு தயாரிக்கப்படுகிறது. விளைபொருளான கரைசலில் இருந்து இது படிகமாகிறது:[4]

CCl4 + 4 EtI → CI4 + 4 EtCl.

பயன்கள்

காரத்துடன் கார்பன் நான்கையோடைடு வினைபுரிந்து அயோடினேற்றம் செய்யும் வினையாக்கியாக இது பயன்படுகிறது[5]. கீட்டோன்களை PPh3 மற்றும் CI4 ஆகியனவற்றுடன் சேர்ந்து 1,1- ஈரயோடோயீத்தீனாக மாற்றுகிறது. அப்பெல் வினையின் வினைவழி முறையைப் போல ஆல்ககால், அயோடைடு மாற்றம் நிகழ்கிறது. அப்பெல் வினையில் ஆல்ககாலில் இருந்து குளோரினை உருவாக்க கார்பன்நாற்குளோரைடு பயன்படுத்தப்படுகிறது.

பாதுகாப்பு

கார்பன் நான்கையோடைடை 0 °செ இல் சேமித்து வைக்க வேண்டுமென்று தயாரிப்பாளர்கள் பரிந்துரைக்கின்றனர். எரிச்சல் உண்டாக்கும் தன்மை இதற்கு உண்டு. இதனுடைய உயிர் போக்கும் அளவு (LD50) 178 மி.கி.கி.கி−1. ஆகும். பொதுவாக பெர்ராலசனேற்ற கரிமச் சேர்மங்கள் நச்சுகளாகக் கருதப்படுகின்றன. ஆனால், பெர்புளோரோ ஆல்க்கேன் மட்டும் சற்று விதிவிலக்காகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. "Tetraiodomethane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information (27 March 2005). பார்த்த நாள் 29 February 2012.
  2. Finbak, Chr.; Hassel, O. "Kristallstruktur und Molekülbau von CI4 und CBr4" Zeitschrift für Physikalische Chemie (1937), volume B36, page 301-8
  3. Pohl, S. "Die Kristallstruktur von CI4" Zeitschrift für Kristallographie (1982), volume 159, page 211-216 http://www.oldenbourg-link.com/doi/abs/10.1524/zkri.1982.159.1-4.211
  4. McArthur, R. E.; Simons, J. H., “Carbon Tetraiodide” Inorganic Syntheses 1950, volume III, 37–39
  5. P. R. Schreiner, A. A. Fokin, “Carbon Tetraiodide” in Encyclopedia of Reagents for Organic Synthesis (Ed: L. Paquette) 2005; John Wiley & Sons, Ltd

உசாத்துணை

Sorros, H., Hinkam J. B., “The Redistribution Reaction. XI. Application to the Preparation of Carbon Tetraiodide and Related Halides” Journal of the American Chemical Society 1945, 67, 1643. DOI.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.