காட்பாடி சந்திப்பு தொடருந்து நிலையம்
வேலூர் காட்பாடி சந்திப்பு இரயில் நிலையம்(Katpadi Junction) வேலூர் நகரிலுள்ள இரயில் நிலையம் ஆகும். இது சென்னை - பெங்களூரு மற்றும் விழுப்புரம் - திருவண்ணாமலை - திருப்பதி வழித்தடங்களில் அமைந்துள்ளது. இது தெற்கு ரயில்வேயில் சுத்தமாகவும் பராமரிக்கப்படும் இரயில் நிலையத்தில் ஒன்றாகும், மேலும் தமிழ்நாட்டில் உள்ள 20 க்கும் மேற்பட்ட வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்களில் காட்பாடி இரயில் நிலையமும் ஒன்றாகும். இது கடலூர் - திருவண்ணாமலை - சித்தூர் நெடுஞ்சாலை ஆந்திரப் பிரதேசத்தை இணைக்கும் சித்தூர் நெடுஞ்சாலையில் நகரின் வடக்கு இறுதியில் அமைந்துள்ளது.
Vellore Katpadi Junction வேலூர் காட்பாடி சந்திப்பு | |
---|---|
நகரமிடை இரயில், பிராந்திய இரயில், சாதாரண இரயில் & சரக்கு இரயில் | |
![]() நடைமேடை 3 & 4 தோற்றம் | |
இடம் | கடலூர்- திருவண்ணாமலை - வேலூர்- சித்தூர் நெடுஞ்சாலை, காட்பாடி, வேலூர், தமிழ்நாடு இந்தியா |
அமைவு | 12°58′20″N 79°8′18″E |
உயரம் | 213 மீட்டர்கள் (699 ft) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | தென்னக இரயில்வே |
தடங்கள் | சென்னை சென்ட்ரல்-பெங்களூர் நகர் தொடரினைப்பு கூடூர்-காட்பாடி கிளை, திருப்பதி - திருவண்ணாமலை - விழுப்புரம் தொடரிணைப்பு |
நடைமேடை | 5 |
இருப்புப் பாதைகள் | 9 |
இணைப்புக்கள் | ![]() |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | At Grade |
தரிப்பிடம் | ஆம் |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | ஆம் |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | KPD |
பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே |
மின்சாரமயம் | ஆம் |
அமைவிடம் | |
![]() ![]() Vellore Katpadi Junction Location within தமிழ் நாடு |

இட அமைப்பு
இந்த நிலையத்தில் 5 நடைமேடைகள் உள்ளன உள்ளன. இதில் 4 மற்றும் 5 நடைமேடைகள் வழியாக முதன்மையாக வேலூர் கண்டோன்மென்ட் இரயில் நிலையம் வழியாக தெற்கு தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கும், ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கும் இயக்கப்படும் ரயில்கள் நின்று செல்கின்றன. ஒவ்வொரு நாளும் 150 க்கும் அதிகமான பயணிகள் ரயில்கள் (இருபுறமும்) வேலூர்-காட்பாடி சந்திப்பு வழியாக செல்கின்றன.தளமேடை 1 முதல் 3வரை, சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் மற்றும் கேரள மாநிலங்களுக்கான பயணிகள் ரயில்கள் முதன்மையாக இயக்கப்படுகின்றன. [1][2]
வசதிகள்
- ஐ.ஆர்.சி.டி.சி மூலம் பராமரிக்கப்படும் உணவுத் தளம் 1 மற்றும் 2 தளங்களில் அமைந்துள்ளது.
- தளமேடை 1, 2 மற்றும் 3 தளங்களில் ஆவின் பால் சாவடி, காபி ஷாப்பிங், ஹோட்டல், புக் ஸ்டால் மற்றும் பழ ஸ்டால்கள் வரை புதுப்பித்தல் கடைகளும் உள்ளன.
- கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் தளமேடை 1, 2, 3 மற்றும் 5 ஆகிய இடங்களில் கிடைக்கின்றன.
- ஏடிஎம் முக்கிய நுழைவாயிலில் அமைந்துள்ளது.
- டிஜிட்டல் போர்டு தளமேடை 1 மற்றும் 2 ஆகிய இடங்களில் வந்து செல்லும் தொடருந்துகளின் பெட்டிகளின் எண்ணிக்கை மற்றும் இட அமைப்பு உடன் காட்டுகிறது.
- பார்சல் முன்பதிவு அலுவலகம், ரயில்வே அஞ்சல் சேவை (ஆர்.எம்.எஸ்) ஆகியவை இருக்கின்றன. உயரக மற்றும் ஸ்லீப்பர் வகுப்பு பயணிகள் காத்திருக்கும் அறைகள் தளமேடை 1, 2 மற்றும் 3ல் கிடைக்கின்றன.
- பெண்களுக்கான தனி காத்திருக்கும் மண்டபம்.
- இந்த நிலையத்தில் நடைமுறையில் முன்பதிவற்ற பயணிகளுக்கான ஐந்து நுழைவுச்சீட்டு சேவை முகப்புகள் உள்ளன. நீண்ட தொலைவு ரயில்களுக்கான ஏழு முன்பதிவு சேவைமுகப்புகள் (கவுன்டர்கள்) தனி கட்டிடத்தில், ரயில் நிலையத்தில் முதன்மை நுழைவாயிலில் அமைந்துள்ளது.
- இரயில்வே காவல் நிலையம் (RPF) தளமேடை எண்.1 இல் அமைந்துள்ளது.
- பயணிகளின் பாதுகாப்புக்கு, தெற்கு ரயில்வே எல்லா தளங்களிலும் கேமராக்களை நிறுவியுள்ளது. [6]
- தளமேடை 1 இல் ஒரு CMC மருத்துவமனை உதவி மையம் செயல்படுகிறது.[3]
போக்குவரத்து
காட்பாடி நிலையத்திலிருந்து 5 முதல் 6 கிலோமீட்டர் தொலைவில் பேருந்து நிலையம் உள்ளது. இரயில் நிலையத்திற்கு வெளியே ரயில் நிலையத்தை இணைக்கும் பஸ் வசதிகள் கிடைக்கின்றன. டாக்சிகள் மற்றும் ஆட்டோ போன்ற மற்ற போக்குவரத்து முறைகள் நகரத்தினை இணைக்கின்றன.
ரயில் பயணிகள்
சென்னை சென்ட்ரல் முதல் காட்பாடி சந்திக்கு தினமும் சராசரியாக முன்பதிவு செய்யாத 2,280 பயணிகள் வேலூருக்கு வருகை தருகின்றனர்.
சான்றுகள்
- "KPD / Katpadi to VLR / Vellore Cantt. - 14 Trains - India Rail Info - A Busy Junction for Travellers & Rail Enthusiasts". India Rail Info. பார்த்த நாள் 2014-03-08.
- "MSB/Chennai Beach (8) Railway Station - Today's Train Arrival Timings - India Rail Info - A Busy Junction for Travellers & Rail Enthusiasts". India Rail Info (2012-01-14). பார்த்த நாள் 2014-03-08.
- "Yeshwantpur, Bangalore Cantonment to have food plazas soon - The Times of India". Articles.timesofindia.indiatimes.com (2010-02-16). பார்த்த நாள் 2014-03-08.