கண்டி தேசிய நூதனசாலை
கண்டி தேசிய அருங்காட்சியகம் அல்லது கண்டி தேசிய நூதனசாலை (National Museum of Kandy) இலங்கையின் மத்திய மலைநாட்டில் உள்ள கண்டி நகரில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் கண்டியின் இறுதி மன்னனான ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் அரச மாளிகையுடன் சேர்ந்து அமைந்துள்ளது. அரச மாளிகையுடனேயே புகழ் பூத்த பௌத்த வணக்கத்தலமான தலதா மாளிகையும் உள்ளது. 1946 ஆம் ஆண்டில் ஓர் அருங்காட்டியகமாக பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது.
![]() National Museum in Kandy | |
நிறுவப்பட்டது | 1942 |
---|---|
அமைவிடம் | கண்டி, இலங்கை |
வகை | வரலாறு |
கண்டி இராச்சியக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், ஆபரணங்கள், கருவிகள் போன்றவையும் பிரித்தானிய ஆட்சிக்காலத்தின் எச்சங்களான சில பொருட்களும் இங்கு வைத்துப் பேணப்படுகின்றது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.