தேசிய இயற்கை வரலாறு நூதனசாலை, கொழும்பு

தேசிய இயற்கை வரலாறு நூதனசாலை அல்லது தேசிய இயற்கை வரலாறு அருங்காட்சியகம் என்பது இலங்கையின் இயற்கை மரபுரிமை பற்றிய விடயங்களைக கொண்டுள்ள நூதனசாலை ஆகும். இது கொழும்பு தேசிய நூதனசாலைக்கு மிக அண்மையில் அமைந்துள்ளது. இந்நூதனசாலை செப்டம்பர் 23, 1986 அன்று உருவாக்கப்பட்டது. இது ஒன்றே இயற்கை வரலாறு, இயற்கை மரபுரிமை ஆகியவற்றை பிரநிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கையிலுள்ள ஒரே நூதனசாலை ஆகவுள்ளது.[1]

தேசிய இயற்கை வரலாறு நூதனசாலை
தேசிய இயற்கை விஞ்ஞான நூதனசாலையின் முன்புறம்
நிறுவப்பட்டது1986
அமைவிடம்கொழும்பு, இலங்கை
வகைஇயற்கை வரலாறு
வலைத்தளம்Department of National Museums website

தேசிய இயற்கை விஞ்ஞான நூதனசாலை அரிதான, ஆபத்துக்குட்பட்ட இலங்கைக்குரிய இயற்கை மரபுரிமை தாவரங்கள், விலங்கின அகணிய உயிரி போன்றவற்றை காட்சிப்படுத்துகிறது. 5,000 இற்கு மேற்பட்ட பாலூட்டிகளின் மாதிரிகள், சுராசிக் கால உள்ளூர் படிமங்கள், பல வகையான புவியியற் பாறைகள் என்பனவும் உள்ளன.[2]

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

  1. "National Museum of Natural History". Department of National Museums. பார்த்த நாள் 21 சூலை 2015.
  2. "Our proud heritage". The Sunday Observer (Sri Lanka). பார்த்த நாள் 21 சூலை 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.