பாறை

பாறை (rock or stone) என்பது கனிமங்கள் அல்லது கனிமப்போலிகளின் சேர்க்கையினால் இயற்கையாக உருவாவது ஆகும்[1].
பாறைகள் மனித வரலாற்றுடன் தொடர்ந்து இணைந்திருக்கும் ஒன்றாகும். மனிதர்கள் ஆரம்பத்தில் வேட்டைக்கும், பாதுகாப்பிற்கும் தேவையான கருவிகளை பாறைகளிலிருந்து பெற்றுக் கொண்டனர். பின்னர் வாழ்விடங்களை அமைத்துக்கொள்ள கட்டடத்திற்குத் தேவையான பொருளாகவும், நினைவுச் சின்னங்களை அமைப்பதற்குத் தேவையான பொருளாகவும் பயன்படுத்தினர். புவியோட்டின் அமைப்பு, இயல்பு மற்றும் கூர்ப்பு போன்றவற்றை காலவோட்டத்தினூடாகக் கட்டுப்படுத்தி வரும் செயல்முறை, வானிலையாலழிதல் செயல்முறை, தாவரத் தொகுதியின் உருவாக்கம் போன்றவற்றின் ஒன்றிணைந்த விளைவுகளால், தற்போது நாம் காணும் நிலத்தோற்றத்தைப் பாறைகள் உருவாக்கியுள்ளன. அத்துடன் பாறைகளில் காணப்படும் கனிமங்கள், உலோகங்கள் மனித நாகரீகத்தின் செழிப்பிற்கும், பண்பாட்டுச் சிறப்பிற்கும் மிக முக்கியமான ஒன்றாக இருந்து வந்திருக்கிறது.[2]
பாறைகள், அவற்றில் அடங்கியுள்ள கனிமங்கள், வேதியியல் சேர்க்கை, பரப்புத் தோற்றம் (texture), அவை உருவாகும் முறை என்பவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.[3] பாறைகள் பொதுவாக மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை, தீப்பாறைகள், படிவுப் பாறைகள், மற்றும் உருமாறிய பாறைகள் என்பனவாகும்.[4]

அமெரிக்காவின் கொலராடோ ஸ்பிரிங்ஸில் கடவுள்களின் தோட்டத்தில் (Garden of the Gods) உள்ள சமநிலைப்பாறை

தீப்பாறைகள் கற்குழம்பிலிருந்து உருவாகின்றன. இவை, பாதாளப் பாறை, எரிமலைப்பாறை என இரண்டு பிரிவுகளாக அமைகின்றன. பூமியின் மையப் பகுதியிலிருந்து உருகிய கற்குழம்பு மேல் நோக்கித் தள்ளப்பட்டு, பூமியின் மேலோட்டுப் பகுதியிலுள்ள இடைவெளிகளில் தங்கி அங்கேயே மெதுவாகக் குளிர்ந்து படிவமாகும் போது பாதாளப் பாறைகள் உருவாகின்றன. எரிமலைப் பாறைகள், புவி மேற்பரப்பை அடையும் எரிமலைக் குழம்புகளில் இருந்து அல்லது ஆங்காங்கே நிகழும் வெளித்தள்ளல்களில் இருந்து உருவாகின்றன.[5]

பாறைத் துகள்கள், கரிமப்பொருள் துணிக்கைகள், வேதிப்பொருள் வீழ்படிவுகள் (chemical precipitates) என்பவை படிப்படியாக ஓரிடத்தில் சேர்ந்து, பின்னர் அழுத்தப்படுவதன் மூலம் ஒன்று சேர்ந்து உருவாவதே படிவுப் பாறைகள் எனப்படுகின்றன. இவை, சிறப்பாக, காபனேற்றுகள் அதிகமுள்ள படிவுப் பாறைகள், புவி மேற்பரப்பிலோ அல்லது அதற்கு அருகாமையிலோ உருவாகக்கூடும்.[6]

தீப்பாறைகள், படிவுப் பாறைகள் அல்லது ஏற்கனவே உருவான உருமாறிய பாறைகள், அவை உருவானபோது இருந்ததிலும் வேறான வெப்பநிலை, அழுத்தச் சூழ்நிலைகள் என்பவற்றில் உருவாவனவே உருமாறிய பாறைகள் எனப்படுகின்றன. இதற்கு வேண்டிய வெப்பநிலையும், அழுத்தமும் புவி மேற்பரப்பில் காணப்படுவதிலும் அதிகமாக இருக்கவேண்டும். இது பாறைகளில் உள்ள கனிமங்கள் வேறு கனிம வகைகளாக அல்லது வேறு வடிவிலமைந்த அதே கனிமமாக உருமாறுவதற்கு (எகா: மீள்படிகமாதல் (recrystallisation) ஏற்ற அளவில் அமைய வேண்டும்.[7]

ஒரு பாறை வகை இன்னொரு பாறை வகையாகத் தொடர்ச்சியான முறையில் மாறிக்கொண்டிருக்கும் தோற்றப்பாட்டை, நிலவியலாளர்கள், பாறை வட்டம் எனும் நிலவியல் மாதிரி மூலமாக விளக்குகிறார்கள். கற்கோளம் (lithosphere) உள்ளிட்ட புவியோடு (Earth's crust) பாறைகளினால் உருவானதே. பாறைகள் பற்றிய ஆய்வு பாறையியல் (Petrology) எனப்படுகின்றது.

பாறை வகைப்பாடுகள்

வெளியரும்புப்பாறை- ஒரோசி ,கோஸ்ட்டா ரிக்கா

ஒரு கரைசல் மட்டத்தில், பாறைகள் தாதுக்கள் தானியங்களை உருவாக்குகின்றன, இது ஒரு ஒழுங்கான முறையில் நடைபெறும் ஒரு இரசாயன கலவையிலிருந்து உருவான ஒரேவிதமான திடப்பொருள்களாகும். பாறைகளை உருவாக்கும் மொத்த கனிமங்கள் இரசாயன பிணைப்புகள் மூலம் ஒன்றாக நடைபெறுகின்றன. பாறைகளில் உள்ள தாது வகைகள் பாறை உருவான விதத்தில் தீர்மானிக்கப்படுகிறது. பெரும்பாலான பாறைகள் சிலிக்காவை (SiO2) கொண்டுள்ளன. சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவற்றின் கூட்டுக்கலவைகள் 74.3% புவியின் மேலோட்டை உருவாக்ககின்றன. இந்த பொருள் பாறை மற்ற சேர்மங்கள் கொண்ட படிகங்கள் உருவாக்குகிறது. பாறை மற்றும் கனிமங்களில் சிலிக்காவின் விகிதம் அவற்றின் பெயர் மற்றும் பண்புகளை நிர்ணயிப்பதில் முக்கிய காரணியாகும்

புவியியல் ரீதியாக பாறைகளானது அவற்றிலுள்ள தாதுக்கள் மற்றும் வேதிய கட்டுமானம்,ஊடுருவுதிறன் அங்கக துகளமைப்பு ஆகிய பண்புகளைக் கொண்டு வகைப்படுத்தப் படுகின்றன.இந்த இயற்பியல் பண்புகள் பாறைகள் உருவாகிய செயல்முறைகளின் இறுதி விளைவு ஆகும்.பாறை வட்டம் எனப்படும் நிலவியல் மாதிரியில் விவரிக்கப்பட்டுள்ளபடி காலப்போக்கில், பாறைகள் ஒரு வகையிலிருந்து மற்றொரு வகையாக மாறும். இந்த நிகழ்வுகள் மூலம் மூன்று பொதுவான பாறைகள் உருவாக்கப்படுகின்றன அவை தீப்பாறைகள், படிமப் பாறைகள் மற்றும் உருமாறிய பாறைகளாகும்.

மூன்று வகையான பாறைகளும் பல குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. எனினும், கூட்டுப் பாறைகள் இடையே எவ்வித குறிப்பிடத்தக்க வலையறைகள் இல்லை. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தரத்திலிருந்தும் ஒன்றுக்கொன்று கடந்து செல்வதால், ஒரு குறிப்பிட்ட பாறையின் தனித்துவமான கட்டமைப்புகள் படிப்படியாக வேறொரு பாறையுடன் இணைந்துள்ளது. எனவே,பாறை பெயரிடலை நிறுவுவதில் வரையறுக்கப்பட்ட வரையறைகள் சீரான தொடர்ச்சியில் அதிகமான அல்லது குறைவான இயல்புகளைக் கொண்டு அறியப்படுகின்றன.

தீப்பாறை

தீப்பாறையின் அமைப்பு

தீப்பாறை (Igneous Rock) 'இக்னீயஸ்' என்ற சொல் "தீ" என்று பொருள்படும் இலத்தீன் மொழியில் இருந்து பெறப்பட்டதாகும். தீப்பாறை என்பது மிக அதிக வெப்பத்தையுடைய திரவ நிலையிலுள்ள பாறைக்குழம்பு (மாக்மா-Magma) மற்றும் எரிமலைக்குழம்பு (லாவா-Lava) ஆகியவை குளிர்ந்து உருவானதாகும். தீப்பாறைகளே முதன் முதலில் தோன்றியவை ஆகும். இது புவி மேற்பரப்புக்கு மேலே அல்லது அதற்குக் கீழே இடம்பெறலாம். ஏற்கனவே புவியோட்டில் அல்லது மூடகத்தில் (mantle) உள்ள பாறைகள், பகுதியாக உருகுவதன் மூலமும் பாறைக் குழம்பு உருவாகக்கூடும். இவ்வாறு பாறைகள் உருகுவது, கீழ்க் காண்பவற்றுள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வழிமுறைகள் மூலம் நடைபெறக் கூடும்.

  1. வெப்பநிலை ஏற்றம்
  2. அழுத்த இறக்கம்
  3. சேர்மான மாற்றம்

புவி ஓட்டில் கானப்படும் பாறைகளில் 64.7% சதவீதம் தீப்பாறை வகையைச் சேர்ந்தவை.தீப்பறைகளில் 66 சதவீதம் பசால்ட் மற்றும் கப்ரா உள்ளன. 16 % கிரானைட் என்றறியப்படும் கருங்கல்பாறைகளும்.17% படிகக்கற்பாறைகளும் உள்ளன. 0.6 சதவிதம் சயனைட்கள் மற்றும் 0.3 சதவிதம் கிரானோடயரைட்டுகள் மட்டுமே தீப்பாறைகளில் உள்ளன.கடலடி மேற்பரப்பு 99 சதவிகிதம் பசால்டின் குழுக்கட்டுமான தீப்பாறைகள் ஆகும். கிரானைட்கள் மற்றும் ஒத்த பாறைகள், மெட்டா கிரானிடோடிஸ் என்று அழைக்கப்படும், கான்டினென்டல் மேலோடு மிகவும் உருவாக்கப்படுகின்றன.பசால்ட், கிரானைட் போன்ற 700 க்கு மேற்பட்ட வகையான தீப்பாறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை புவியோட்டுக்குக் கீழுள்ள பகுதிகளிலேயே உருவாகின்றன

தீப்பாறை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

  1. உந்துப்பாறை அல்லது பாதாளப்பாறை
  2. தலையீடு பாறை

உந்துப்பாறை

உந்துப்பாறை அல்லது பாதாளப்பாறை என்பது புவியோட்டில் உந்துதலின் காரணமாக பாறைக்குழம்பு (Magma) மேலெழும்பி மெதுவாக குளிர்ந்து படிகமாக மாறுவதால் உருவாகிறது. இவை எரிமலைத் தீவுகளில் உருவாகின்றன. பெருங்கடல் ஓட்டின் பெரும்பகுதி குறிப்பாக, மதிய அட்லாண்டிக் தொடர், பசால்ட் பாறையினால் ஆனவை.ஹவாய் மற்றும் ஐஸ்லாந்து போன்ற பல எரிமலைத் தீவுகள் பசால்ட் (பாசாற்றுக்கல்) பாறைகளால் ஆனவையே.

தலையீடு பாறை

தலையீடு பாறை மேற்பரப்பை அடையும் மாக்மாவின் விளைவாக எரிமலை அல்லது துண்டு துண்டாக வெளியேற்றப் படுவதால் உருவாகிறது. எடுத்துக்காட்டு- ப்யூமிஸ் அல்லது பசால்ட்.பாறைக்குழம்பின் ஏராளமான ரசாயன மற்றும் குளிரூட்டும் வீதம் பொதுவாக போவெனின் எதிர்வினைத் தொடரை உருவாக்குகிறது. இந்த அளவில் முக்கிய எரிமலை பாறைகள் காணப்படுகின்றன. பெரும்பாலான தீப்பாறைகள் இவ்வகையான அளவுகளிலேயே காணப்படுகின்றன.

தலையீடு பாறை வகைகள்

  1. இடைப்பாறை(DYKE),
  2. சமகிடைப்பாறை (SILL),
  3. கும்மட்டப்பாறை (LACCOLITH),
  4. நீள்வரிப்பாறை(BATHOLITH)
  5. எரிமலைக் குழாய் (VOLCANIC PIPE).

படிவுப் பாறைகள்

வட இந்தியாவில் உள்ள படிமப்பாறை
இந்தியாவின் கர்நாடக மாநில கொரமன்டல் கடற்கறையில் கானப்படும் படிவப்பாறைகள்
இரும்பு ஆக்ஸைடு பினைப்புள்ள படிவுப்பாறை

ஒவ்வொரு நாளும் காற்று, வெப்பமநிலை, நீர் மற்றும் பனிக்கட்டிகளால் பாறைகள் சிதைக்கப்படுகின்றன, சிதைந்த பாறைத் துகள்கள் ஆற்று நீரில்கலக்கின்றன. ஆறு அத்துகள்களை ஆற்றின் கரைகளிலும் ஏரி, கடல் போன்றவற்றின் முகத்துவாரங்களிலும் படிய வைக்கிறது இவ்வாறு ஏதாவது ஓரிடத்தில் நிலைபெறுகின்ற பொருள்களே படிவுகள் எனப்படுகின்றன. முதலில் படிவுகள் மிருதுவாகவும் தளர்வாகவும் இருக்கும் இவை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்குகளாகப் படிய்வைக்கப்படுகின்றன. மேலடுக்கின் சுமையினால் கீழடுக்கிலுள்ள பொருள்களும் அழுத்தப்படும். அதே நேரத்தில் பாறைகளின் தாதுக்களும் நீரில் கரைந்து அதுகள்களைச் சுற்றித் தங்குகின்றன. தாதுக்களின் கரைசல் படிவப்பொருள்களை ஒன்றோடொன்று உறுதியாகப் பிணைக்கிறது. இதனால் மிருதுவான படிவுகள் திடமானதாக மாறுகிற்து இவ்வாறு மாறிய படிவுகளே இறுதியாகப் படிவுப்பாறையாக மாறுகிறது. சமதளப் படிவாதல் முறையில் (Sedimentation பாறைத் துகள்கள்,நீரில் படியும் கரிமச்சேர்மத் துணுக்குகள், வேதிப்பொருள் வீழ்படிவுகள் (chemical precipitates) என்பவை படிப்படியாக ஏதெனும் ஓரிடத்தில் சேர்ந்து, பின்னர் அழுத்தப்படுவதன் மூலம் ஒன்று சேர்ந்து உருவாவதே படிவுப் பாறைகள் எனப்படுகின்றன. இவை, சிறப்பாக, கார்பனேற்றுகள் அதிகமுள்ள படிவுப் பாறைகள், புவி மேற்பரப்பிலோ அல்லது அதற்கு அருகாமையிலோ உருவாகக்கூடும்.புவியின் மேலோட்டில் காணப்படும் பாறைகளின் கண அளவைப் பொறுத்தவரையில் படிவுப்பாறைகள் 5 விழுக்காடே ஆகும், எனினும் நிலப்பரப்பில் ஏறத்தாழ 75 விழுக்காடு படிவுப்பாறையே ஆகும். படிவ பாறைகள் பற்றிய அறிவு கட்டிடப் பொறியியல் துறையில் சாலைகள், வீடுகள் , சுரங்கங்கள் , கால்வாய்கள் போன்றவற்றை கட்ட மிகவும் உதவிகரமாக உள்ளது.மேலும் படிவு பாறைகள் நிலக்கரி, படிம எரிபொருட்கள்,நீர்,தாதுக்கள் போன்ற இயற்கை வளங்களின் முக்கியமான ஆதாரங்களாக திகழ்கிறது.மேலும் இப்பாறைகள் பற்றிய ஆய்வு செடிமென்டாலாஜி என்று அழைக்கப்படுகிறது இது புவியியல் மற்றும் புவியியல் இயற்பியலை உள்ளடக்கியது. படிவுப் பாறைகள் அவற்றை உருவாக்கிய படிவுகளின் மூலங்களையொட்டி வகைப்படுத்தப்படுகின்றன. இப் படிவுகளின் மூலங்கள் பின்வருவனவற்றில் ஒன்றாக இருக்கலாம்.

உடைவுப் பாறை (clastic rock): இப்பாறைகள் ஏற்கனவே உள்ள பாறைகளில் இருந்து பின்வரும் முறைகளில் உடைந்து உருவாகின்றன.

  1. இருந்த இடத்திலேயே தேய்வடைதல்.
  2. நீர், காற்று முதலியவற்றால் அரிக்கப்பட்டு அவற்றுடன் தொங்கல் நிலையில் எடுத்துச் செல்லப்பட்டபின் வேறிடங்களில் படிதல்.
  3. உயிரியச் (biogenic) செயற்பாடு
  4. கரைசல்களிலிருந்து வீழ்படிதல்.

இப் படிவுகள் பின்னர் அழுத்தப்பட்டுப் பாறையாதல் (lithification) வழிமுறை மூலம் பாறைகளாக மாறுகின்றன.

உருமாறிய பாறைகள்

ஒருவகைக் கருங்கற்பாறை
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகர் அருகே உள்ள உருமாறிய பாறைக்கற் சுரங்கம்

உருமாறிய பாறை என்பது பாறைகளின் ஒரு வகையாகும்.இது முதல்நிலைப்பாறை (protolith) எனப்படும் ஏற்கனவே உள்ள பாறைகள் வளருருமாற்றம் (metamorphism) என்னும் செயற்பாட்டின் மூலம் மாற்றம் அடைவதால் உருவாகின்றது. முதல்நிலைப்பாறை 150 பாகை செல்சியசுக்கு மேற்பட்ட வெப்பநிலையிலும், உயர்ந்த அழுத்தநிலையிலும் இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுகிறது. முதல்நிலைப்பாறை படிவுப் பாறையாகவோ, தீப்பாறையாகவோ அல்லது இன்னொரு பழைய உருமாறிய பாறையாகவோ இருக்கலாம். புவியோட்டின் பெரும்பகுதியை உருவாக்குபவை உருமாறிய பாறைகளே. இவை அவற்றின் மேற்பரப்புத் தன்மை, வேதியியல் மற்றும் கனிமச் சேர்மானங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. இவை அடுக்குப்பாறைகள் எனவும் அழைக்கப்படும்.

மனிதப் பயன்பாடு

மங்கோலிய நாட்டின் ஒவூ என்ற இடத்தில் பாறைத் திருவிழா
யுரேனியச் சுரங்கம்

பாறைகளின் பயன்பாடானது கலாச்சார மற்றும் தொழில்நுட்ப மனித இனத்தின் மிது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.2.5 மில்லியன் ஆண்டகளுக்கு முன்பிருந்தே மனித இனமும் மனித இன முன்னோடிகளான ஹோமினிட்டுகளும் (Hominid) பாறைகளை பயன்படுத்தி வந்துள்ளனர்[8] .பழமையான மற்றும் தொடர்ச்சியான தொழில்நுட்பங்கள் கற்பாறைத் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கியப்பங்காற்றுகின்றன.பாறைச் சுரங்கங்களிலிருந்து பெறப்படும் பாறைகளில் குறிப்பிட்தக்க விகிதங்களில் குறிப்பிடத்தக்க இடங்களில் பெறப்படும் உலோகத் தாதுக்கள் மனித மேம்பாட்டின் காரணிகளாக அமைகின்றன.

by:-injas

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. Rock or Mineral?
  2. Roberts, Dar. "Rocks and classifications". Department of Geography, University of California, Santa Barbara. பார்த்த நாள் 15 மே 2017.
  3. Chapter 5: Minerals, Rocks & Rock Forming Processes
  4. "INTRODUCTION TO TYPES AND CLASSIFICATION OF ROCKS". os.is/gogn/unu-gtp-sc (ஆங்கிலம்) (© Nov. 2-24, 2014.). பார்த்த நாள் 2016-11-17.
  5. IGNEOUS ROCKS: HOW ARE THEY FORMED?
  6. Sedimentary rock
  7. Metamorphism of Rocks: Definition, Process & Influencing Factors
  8. William Haviland, Dana Walrath, Harald Prins, Bunny McBride, Evolution and Prehistory: The Human Challenge, p. 166
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.