உருசியப் பேரரசு
உருசியப் பேரரசு (Russian Empire, Россійская Имперія, இன்றைய உருசியம்: Российская Империя) என்பது 1721 முதல் 1917 உருசியப் புரட்சி முடியும் வரை இருந்த நாடு. இது சாராட்சியை அடுத்து உருவாக்கப்பட்டது. உருசியப் பேரரசு பின்னர் சிறிது காலம் உருசியக் குடியரசாகி, பின்னர் சோவியத் ஒன்றியம் அமைக்கப்பட்டது. உலக வரலாற்றில் நிலப்பரப்பின் படி பிரித்தானியப் பேரரசு, மங்கோலியப் பேரரசு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய பேரரசாக இருந்தது. 1866 ஆம் ஆண்டில் கிழக்கு ஐரோப்பா முதல் ஆசியா ஊடாக வடக்கு அமெரிக்கா வரை பரந்திருந்தது.
உருசியப் பேரரசு Russian Empire Россійская Имперія | ||||||||||||||||||||
| ||||||||||||||||||||
| ||||||||||||||||||||
குறிக்கோள் ஸ் நாமி போக்! Съ нами Богъ! "கடவுள் எம்மிடம்!" | ||||||||||||||||||||
நாட்டுப்பண் எதுவுமில்லை பேரரசின் பண் போஷெ, த்சார்யா ஹ்ரானி! Божѣ, Царя храни! "மன்னரைக் கடவுள் காப்பாற்றுவார்!" | ||||||||||||||||||||
![]() உருசியப் பேரரசின் அமைவிடம் Asynchronous map of the Russian Empire[a]
உருசியப் பேரரசு
Spheres of influence
| ||||||||||||||||||||
தலைநகரம் | சென் பீட்டர்ஸ்பேர்க் (1721–1728) மாஸ்கோ (1728–1730) சென் பீட்டர்ஸ்பேர்க்[b] (1730–1917) | |||||||||||||||||||
மொழி(கள்) | அதிகாரபூர்வ மொழி: உருசியம் பிராந்திய மொழிகள்: பின்னிய மொழி, சுவீடிய மொழி, போலிய மொழி, இடாய்ச்சு மொழி, உருமானிய மொழி இரண்டாம் மொழி: பிரெஞ்சு மொழி | |||||||||||||||||||
சமயம் | அதிகாரபூர்ம சமயம்: உருசிய மரபுவழி திருச்சபை சிறுபான்மை சமயங்கள்: கத்தோலிக்க திருச்சபை, சீர்திருத்தத் திருச்சபை, யூதம், இசுலாம், பௌத்தம், அஞ்ஞானி | |||||||||||||||||||
அரசாங்கம் | முழுமையான முடியரசு (அரசருக்கு முழுமையான உரிமை) | |||||||||||||||||||
உருசியப் பேரரசர் | ||||||||||||||||||||
- | 1721–1725 | பீட்டர் I (முதலாம்) | ||||||||||||||||||
- | 1894–1917 | நிக்கலாசு II (கடைசி) | ||||||||||||||||||
அமைச்சரவைத் தலைவர் | ||||||||||||||||||||
- | 1905–1906 | செர்கே விட்டே (முதலாவது) | ||||||||||||||||||
- | 1917 | நிக்கொலாய் கோலித்சின் (கடைசி) | ||||||||||||||||||
சட்டசபை | ஆளும் செனட் | |||||||||||||||||||
- | Upper house | அரசுப் பேரவை | ||||||||||||||||||
- | Lower house | அரசு தூமா | ||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||
- | முதலாம் பீட்டர் முடியேற்றம் | 7 மே [யூ.நா. 27 ஏப்ரல்] 1682[c] | ||||||||||||||||||
- | பேரரசாக அறிவிப்பு | 22 அக்டோபர் [யூ.நா. 11 அக்டோபர்] 1721 1721 | ||||||||||||||||||
- | திசம்பர் கிளர்ச்சி | 26 திசம்பர் [யூ.நா. 14 திசம்பர்] 1825 | ||||||||||||||||||
- | நிலக்கிழாரியம் இல்லாதொழிப்பு | 3 மார்ச்சு [யூ.நா. 19 பெப்ரவரி] 1861 | ||||||||||||||||||
- | உருசியப் புரட்சி, 1905 | சனவரி-திசம்பர் 1905 | ||||||||||||||||||
- | அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படல் | 23 ஏப்ரல் [யூ.நா. 6 மே] 1906 | ||||||||||||||||||
- | பெப்ரவரி புரட்சி | 15 மார்ச் [யூ.நா. 2 மார்ச்] 1917 1917 | ||||||||||||||||||
- | அக்டோபர் புரட்சி | 7 நவம்பர் [யூ.நா. 25 அக்டோபர்] 1917 | ||||||||||||||||||
பரப்பளவு | ||||||||||||||||||||
- | 1866 | 2,37,00,000 km² (91,50,621 sq mi) | ||||||||||||||||||
- | 1916 | 2,17,99,825 km² (84,16,959 sq mi) | ||||||||||||||||||
மக்கள்தொகை | ||||||||||||||||||||
- | 1897 est. | 12,56,40,021 | ||||||||||||||||||
நாணயம் | ரூபிள் | |||||||||||||||||||
| ||||||||||||||||||||
தற்போதைய பகுதிகள் | Countries today
| |||||||||||||||||||
a. ^ 1866 இல் அலாஸ்கா அமெரிக்காவுக்கு விற்கப்பட்டது, ஆனால் பட்டும், கார்ஸ், பாமிர் மலைகள், திரான்ஸ்காஸ்பியா ஆகியன வாங்கப்பட்டன. b. ^ 1914 இல் பெத்ரோகிராத் எனப் பெயர் மாற்றம் பெற்றது. c. ^ பெப்ரவரி புரட்சி முடியும் வரை யூலியன் நாட்காட்டியையே பயன்படுத்தியது. |
19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருசியக் குடியரசு வடக்கே ஆர்க்டிக் பெருங்கடல் முதல், தெற்கே கருங்கடல் வரை, மேற்கே பால்ட்டிக் கடல் முதல் பசிபிக் பெருங்கடல் வரை, கிழக்கே வடக்கு அமெரிக்கா வரை பரந்திருந்தது. 1897 ஆம் ஆண்டில் 125.6 மில்லியன் மக்கள் இப்பேரரசில் வசித்தனர். இது சிங் சீனா, மற்றும் பிரித்தானியப் பேரரசுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாகத் திகழ்ந்தது. அனைத்து பேரரசுகளைப் போலவே, பொருளாதாரம், இனம், சமயம் பேன்றவற்றில் பலவகையினைக்கொண்ட நாடு இதுவாகும். உருசியப் புரட்சி, 1905 வரை இது உருசிய பேரரசரால் ஆளப்பட்ட ஒரு முடியாட்சியாகவே இருந்தது. இதன் பின் இது அரசியல்சட்ட முடியாட்சியானது/ எனினும், இதன் அரசருக்கு அரசியலில் பலம் குறையவில்லை. முதல் உலகப் போரில் இன்நாட்டின் பங்கேற்பின் விளைவாக நிகழ்ந்த 1917இன் பெப்ரவரிப் புரட்சி, இப்பேரரசின் முடிவாக அமைந்தது.
எல்லைகள்

ஐரோப்பிய ரஷ்ய எல்லைகள் பின்லாந்து, மற்றும் போலந்தின் சில பகுதிகளை விடுத்து இயற்கையான கிழக்கு ஐரோப்பிய சமவெளியினை எல்லையாகக் கொண்டிருந்தது. இதன் வடக்கு திசையில் ஆர்க்டிக் பெருங்கடல் உள்ளது. வியாகெக், கொல்குயுவ் மற்றும் நோவாயா செமல்யா ஆகியத்தீவுகள் இதன் எல்லைக்குள் இருந்தன, ஆயினும் காரா கடல் சைபீரியாவுக்கு சொந்தமானதாக இருந்தது. இதன் கிழக்கில் ஆசிய கண்டத்தில் உரால் மலைகள், உரால் ஆறு மற்றும் காசுப்பியன் கடலால் பிறிக்கப்பட்டு அடஹ்ற்க்கப்பால் சைபீரியா இருந்தது.
தெற்கில் கருங்கடல் இருந்தது. மேற்கில் போதனியா வலைகுடாவும், கோலா மூவலந்தீவும், பால்டிக் கடலில் ஒரு பகுதியும் அதனையடுத்து தன்யூப் ஆறும் இருந்தது. இதனையடுத்து போலந்தின் சில பகுதிகளும், உருமேனியா மற்றும் ஆசுதிரியாவின் சிலப்பகுதிகளும் இதன் கட்டுப்பாட்டில் இந்தன.
நிலவியல் அமைப்பு
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பேரரசின் அளவு சுமார் 22,400,000 சதுர கிலோமீட்டர்கள் (8,600,000 sq mi). இது பூமியின் நிலப்பகுதியில் கிட்டத்தட்ட ஆறில் ஒரு பகுதியாகும். இந்த அளவோடு அக்காலத்தில் ஒப்பிடக்கூடிய ஒரே பேரரசு பிரித்தானியப் பேரரசு மட்டுமே. எனினும், இந்த காலத்தில், பெரும்பாலான மக்கள் ஐரோப்பிய ரஷ்யாவில் வாழ்ந்து வந்தனர். 100க்கும் மேற்பட்ட வெவ்வேறு இனக் குழுக்கள் இங்கே வழ்ந்தனர். அவர்களில் சுமார் 45% ரஷ்ய இனமாவர்.
சமயம்
உருசியப் பேரரசின் அதிகாரப்பூர்வ சமயமாக உருசியப் மரபுவழி திருச்சபை விளங்கியது. இதன் தலைவராக உருசிய பேரரசரே இருந்தார். இவரே பதவிகளுக்கான நபர்களை நியமிக்கவோ அல்லது நியமன பரிந்துரைகளை நிராகரிக்கவோ செய்தாலும், இறையியல், மறையுண்மைகளைப்பொருத்தவரை எவ்வித அதிகாரமும் இல்லை. இதகையவற்றை புனிதப் பேரவை (Holy Synod) கையாண்டது. எணினும் இப்பேரவையின் மேற்பார்வையாளர் அரச ஆலோசனைக்குழுவின் உறுப்பினர்களுல் ஒருவராக இதுப்பது மரபு. இம்மேற்பார்வையாளருக்கும் திருச்சபையில் அதிக செல்வாக்கு இருந்தது.
அனைத்து மதங்களும் சிதந்திரமாக பின்பற்ற மக்களுக்கு உரிமையளிக்கப்பட்டாலும், யூதர்கள் மீது சில கட்டுப்பாடுகள் இருந்தன.
1905இல் வெளியிடப்பட்ட 1897ஆம் ஆண்டு உருசியப் பேரரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கைகளின் அடிப்படையில் உருசியப் பேரரசு முழுவதும் உள்ள பல்வேறு சமயத்தவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:
சமயம் | எண்ணிக்கை[1] |
---|---|
உருசிய மரபுவழி சபை | 87,123,604 |
இசுலாம் | 13,906,972 |
கத்தோலிக்க சபை | 11,467,994 |
யூதம் | 5,215,805 |
லூதரனியம் | 3,572,653 |
பழம் நம்பிகையாளர்கள் (Old Believers) | 2,204,596 |
அர்மேனிய திருத்தூதர்கள் சபை | 1,179,241 |
பௌத்தம் | 433,863 |
கிறித்தவர்கள் அல்லாத பிற சமயத்தினர் | 285,321 |
சீரமைப்பு சபை (Reformed church) | 85,400 |
Mennonites | 66,564 |
அர்மேனிய கத்தோலிக்க சபை | 38,840 |
பாப்திஸ்து சபையினர் | 38,139 |
காராயிட் யூதம் | 12,894 |
ஆங்கிலிக்கம் | 4,183 |
பிற கிறித்தவ பிரிவுகள் | 3,952 |
உருசிய மரபுவழி சபையின் தலைவர்களாக தலைமை ஆயர்கள் மூன்றுபேரும் (சென் பீட்டர்ஸ்பேர்க், மாஸ்கோ, கீவ்), 14 பேராயர்களும், 50 ஆயர்களும் இருந்ததனர். இவர்கள் அனைவரும் மடத்தில் வாழ்ந்த துறவிகளாக (monastic celibate clergy) இருந்தனர்.
வெளி இணைப்புகள்
- Russian Empire: All about Russian Empire and Russia (Russian).
- The New Student's Reference Work/Russia, Empire of
- Maps of the Russian Empire 1795-1914