உரால் ஆறு
உரால் ஆறு (The Ural) (உருசியம்: Урал, pronounced [ʊˈraɫ]) or Jayıq/Zhayyq (பசுகிர மொழி: Яйыҡ, Yayıq, வார்ப்புரு:IPA-ba; கசாக்கு: Jai'yq, Жайық, جايىق, வார்ப்புரு:IPA-kk), known as Yaik (உருசியம்: Яик) 1775 ஆம் ஆண்டுக்கு முன்பாக, ஐரோவாசியாவில் உருசியா மற்றும் கசக்கஸ்தான் ஆகிய பகுதிகளுக்கு இடையே பாய்ந்த ஆறாகும். இந்த ஆறு தெற்கு உரால் மலைகளில் உருவாகி காசுப்பியன் கடலில் கலக்கிறது. 2428 கிலோமீட்டர்களுடன் (1509 மைல்கள்), ஐரோப்பாவில் வோல்கா ஆறு மற்றும் தன்யூப் ஆறுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது மிகப்பெரிய ஆறாக உள்ளது. ஆசியாவில் இது 18 ஆவது மிக நீளமான ஆறாக உள்ளது. காலகாலமாக இந்த ஆறு ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களின் இயற்கை எல்லையாகக் கருதப்படுகிறது.
உரால் ஆறு | |
---|---|
![]() | |
![]() | |
நீளம் | 2428 கிலோமீட்டர் |
உரால் நதி உரால் மலைகளில் உள்ள கிருக்லாயா மலையில் உற்பத்தியாகி தெற்காகப் பாய்கிறது. இந்த நதி வடக்கு நோக்கிப்பாயும் டோபோல் ஆற்றுக்கு இணையாகவும் மேக்னிடோகோர்ஸ்க் வழியாகவும் பாய்ந்து உரால் மலையின் தெற்கு முனையைச் சுற்றி மேற்காக ஓர்ஸ்க் வழியாகப் பாய்ந்து சுமார் 300 கிலோமீட்டர்கள் (190 மைல்கள்) பாய்ந்து ஓரென்பர்க்கை அடைகிறது. இங்கு அது சம்காரா ஆற்றுடன் இணைகிறது. ஓரென்பர்கிலிருந்து அது தொடர்ந்து மேற்கு நோக்கி பாய்ந்து, கசககஸ்தானிற்குள் பாய்கிறது. பின்னர், கசகஸ்தானில் உள்ள ஓரல் எனுமிடத்தில் தெற்காகத் திரும்பி, வளைந்து, நெளிந்து ஒரு பரந்த, திறந்த சமவெளியை அடைகிறது. பின்னர் அது காசுப்பியன் கடலை அடைவதற்கு முன்னதாக ஒரு சில மைல்கள் கீழே அடைராவ், எனுமிடத்தில் அது டெல்டாவை உருவாக்குகிறது. (46°53′N 51°37′E).
புவியியல்
உரால் ஆறு, உரால் மலைத்தொடரில், உச்சலின்ஸ்கைல் (பாஷ்கொர்டொஸ்தான்) பகுதியில் தெற்கு உராலில் கிருக்லயா மலையில் உற்பத்தியாகிறது.[1] இந்த ஆற்றின் சராசரி அகலமானது 60 மீ தல் 80 மீட்டர் வரை(200 முதல் 260 அடி) காணப்படுகிறது. இந்த ஆறு ஒரு மலையாற்று வகையைச் சார்ந்ததாக உள்ளது. பிறகு இந்த ஆறு யாக் சதுப்பு நிலத்தில் விழுகிறது. வெளியேறிய பிறகு, இது 5 கி.மீ (3 மைல்கள்) அளவிற்கு அகன்று விரிகிறது. வெர்க்னியுரால்ஸ்கிற்கும் கீழாக, இந்த ஆறானது, தனது இயல்பான சமவெளிப் பிரதேச ஆறாக, பயணிக்கிறது; அங்கு இந்த ஆறு செல்யாபின்ஸ்க் மற்றும் ஓரென்பர்க் ஓப்ளாஸ்ட் பகுதிகளுக்குள் நுழைகிறது. மேக்னிடோகோர்ஸ்க்கிலிருந்து ஓர்ஸ்க் வரை, இதன் கரைகளானவை செங்குத்தானவையாகவும், பாறைகள் நிறைந்ததாகவும், அடித்தளப் பகுதியில் பல பிளவுகளைக் கொண்டதாகவும் காணப்படுகிறது. ஓர்ஸ்க்கிற்குப் பிறகு, இந்த ஆறானது, திடுக்கிடும் வகையில், மேற்கு நோக்கித் திரும்பி, 45 கி,மீ (28 மைல்கள்) குபெர்லின்ஸ்க் மலைப்பகுதியில் உள்ள நீண்ட பள்ளத்தாக்கில் பாய்கிறது. கச்சகஸ்தானில் உள்ள ஓரலுக்குப் பிறகு, இந்த ஆறு வடக்கிலிருந்து தெற்காக மேற்கு கச்சகஸ்தான் மாகாணம் மற்றும் அடைராவு மாகாணம் வழியாகப் பாய்கிறது. இப்பகுதியில் இந்த ஆறு அகன்று பல ஏரிகளையும், தளப்பக்கங்களையும் உருவாக்குகிறது. இதன் முகத்துவாரப் பகுதிக்கு அருகில், இந்த ஆறு யைக் மற்றும் சோலோடி கிளைகளாகப் பிரிகிறது.[2][3] மேலும், சதுப்பு நிலங்களை உருவாக்குகிறது. யைக் கிளை நதியானது ஆழமில்லாததாகவும், கரைகளில் பெரும்பாலும் மரங்களேயில்லாமலும், மீன் வளம் நிறைந்ததாகவும் காணப்படுகிறது; ஆனால், சோலோடியோ ஆழம் நிறைந்ததாகவும், நீர் வழிப் போக்குவரத்திற்கு உகந்ததாகவும் காணப்படுகிறது.[4] உரால் ஆறு கண்கவர் மரம் போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது. இந்த வகையான சமவெளி இயல்பாக மெதுவாக ஓடக்கூடிய, அதிக வண்டல் படிவை ஏற்படுத்தக்கூடிய ஆறுகளால் ஏற்படுத்தப்படுகின்றது. இதன் பிறகு, இத்தகைய ஆறுகள் அமைதியான கடலுடன் கலக்கின்றன.[5]
மேற்கோள்கள்
- Ural River, Encyclopædia Britannica
- V. A. Balkov. Ural (in Russian). bashedu.ru
- "Ural River" (Russian). Great Soviet Encyclopedia.
- http://hibaratxt.narod.ru/put_kazahstan/index02.html
- https://earthobservatory.nasa.gov/IOTD/view.php?id=5551