உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு

உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு (Nicholas II of Russia, உருசியம்: Николай II, Николай Александрович Романов, நிக்கொலாய் அலெக்சாந்திரொவிச் ரொமானொவ், மே 18 [யூ.நா. மே 6] 1868ஜூலை 17 [யூ.நா. ஜூலை 4] 1918) உருசியப் பேரரசின் கடைசி மன்னனும், போலந்தின் மன்னரும்[1] பின்லாந்தின் இளவரசரும் ஆவார்.

இரண்டாம் நிக்கலாஸ்
Nicholas II
உருசியப் பேரரசன்
ஆட்சிநவம்பர் 1, 1894 மார்ச் 15, 1917
முடிசூட்டு விழாமே 26 [யூ.நா. மே 14] 1896
முன்னிருந்தவர்மூன்றாம் அலெக்சாந்தர்
பின்வந்தவர்பதவி ஒழிக்கப்பட்டது.
வாரிசு(கள்)ஒல்கா நிக்கலாயெவ்னா
தத்தியானா நிக்கலாயெவ்னா
மரீயா நிக்கலாயெவ்னா
அனஸ்தேசியா நிக்கலாயெவ்னா
அலெக்சி நிக்கலாயெவிச்
மரபுரொமானொவ் மரபு
தந்தைமூன்றாம் அலெக்சாந்தர்
தாய்மரீயா பியோதரொவ்னா (டென்மார்க்)

இரண்டாம் நிக்கலாசு 1894 ஆம் ஆண்டில் இருந்து 1917 இல் பதவியில் இருந்து அகற்றப்படும் வரையில் உருசியப் பேரரசின் மன்னனாக இருந்தார். முதலாம் உலகப் போரில் உருசிய இராணுவத்தைக் கொண்டு நடத்தினார்.[2] ஆனாலும் நாட்டில் இடம்பெற்ற அரசியல் மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல், இவரது ஆட்சி உருசியப் புரட்சியை அடுத்து முடிவுக்கு வந்தது. இவரும் இவரது குடும்பமும் கைது செய்யப்பட்டு முதலில் அலெக்சாண்டர் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டனர். பின்னர் டோபோல்ஸ்க் என்ற இடத்தில் ஆளுநர் மாளிகையிலும் கடைசியாக எக்கத்தரின்பூர்க் என்ற இடத்திலும் சிறை வைக்கப்பட்டனர்.

படுகொலை

ரஷ்யாவின் கடைசி மன்னர் இரண்டாம் நிக்கலாஸ் குடும்பம்

1918 ஜூலை 16-17களில் நிக்கலாஸ், மனைவி, மற்றும் ஐந்து பிள்ளைகள் உட்பட முழுக் குடும்பமும் போல்ஷெவிக்குகளால் கொல்லப்பட்டனர். 2000 ஆகத்து 15 இல் உருசியப் மரபுவழித் திருச்சபை இவர்களைப் புனிதர்களாக அறிவித்தது.[3][4]

நிக்கலாசின் குடும்பம்

  • அலெக்சான்ட்ரா ஃபியோதரொவ்னா, அரசி (1872-1918, அகவை 46)
  • ஒல்கா நிக்கலாயெவ்னா, இளவரசி (1895-1918, அகவை 23)
  • தத்தியானா நிக்கலாயெவ்னா, இளவரசி (1897-1918, அகவை 21)
  • மரீயா நிக்கலாயெவ்னா, இளவரசி (1899-1918, அகவை 19)
  • அனஸ்தாசியா நிக்கலாயெவ்னா, இளவரசி (1901-1918, அகவை 17)
  • அலெக்சி நிக்கலாயெவ், இளவரசன் (1904-1918, அகவை 14)

மேற்கோள்கள்

  1. 1831 இல் உருசிய மன்னர்கள் போலந்தின் முடியாட்சியில் இருந்து அகற்றப்பட்டாலும், அவர்கள் மிக விரைவில் போலந்தைக் கைப்பற்றி உருசியாவின் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர்.
  2. Urlanis, Boris (2003). Wars and Population. University Press of the Pacific. ISBN 1410209458
  3. New York Times (2000) Nicholas II And Family Canonized For Passion
  4. A Reader's Guide to Orthodox Icons The Icons that Canonized the Holy Royal Martyrs

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.