உக்ரைன் தேசிய காற்பந்து அணி
உக்ரைன் தேசிய காற்பந்து அணி (Ukraine national football team, உக்ரைனியன்: Збірна України з футболу) என்பது உக்ரைனின் தேசிய காற்பந்து அணியாகும். இது உக்ரைன் காற்பந்துக் கூட்டமைப்பினால் நிருவகிக்கப்படுகிறது. 1992 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்ற பின்னர் உக்ரைன் தனது முதலாவது பன்னாட்டுப் கால்பந்து போட்டியை 1992 ஏப்ரல் 29 அன்று அங்கேரிக்கு எதிராக விளையாடியது. 2006 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் உக்ரைன் அணி காலிறுதிக்குத் தகுதி பெற்று விளையாடியது. இதுவே அவ்வணி விளையாடிய முதலாவது முக்கிய வாகையாளர் போட்டித் தொடராகும்.[1] யூரோ 2012 போட்டியை நடத்திய நாடு என்ற வகையில் உக்ரைன் இப்போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றது.[1] நான்கு ஆண்டுகளின் பின்னர், உக்ரைன் மீண்டும் யூரோ 2016 போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றது.
கூட்டமைப்பு | உக்ரைன் காற்பந்து கூட்டமைப்பு | ||
---|---|---|---|
கண்ட கூட்டமைப்பு | பீஃபா (ஐரோப்பா) | ||
தன்னக விளையாட்டரங்கம் | ஒலிம்பிக் அரங்கு, கீவ் | ||
பீஃபா குறியீடு | UKR | ||
பீஃபா தரவரிசை | 19 ![]() | ||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 11 (பெப்ரவரி 2007) | ||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 132 (செப்டம்பர் 1993) | ||
எலோ தரவரிசை | 16 (9 செப்டம்பர் 2015) | ||
அதிகபட்ச எலோ | 14 (நவம்பர் 2010) | ||
குறைந்தபட்ச எலோ | 69 (29 மார்ச் 1995) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
![]() ![]() | |||
பெருத்த வெற்றி | |||
![]() ![]() (லிவீவ், உக்ரைன்; 6 செப்டம்பர் 2013) | |||
பெருத்த தோல்வி | |||
![]() ![]() (சாகிரேப், குரோவாசியா; 25 மார்ச் 1995) ![]() ![]() (லைப்சிக், ஜெர்மனி; 14 சூன் 2006) ![]() ![]() (பிராகா, செக் குடியரசு; 6 செப்டம்பர் 2011) | |||
உலகக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 1 (முதற்தடவையாக 2006 இல்) | ||
சிறந்த முடிவு | காலிறுதிகள் (2006) | ||
ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி | |||
பங்கேற்புகள் | 2 (முதற்தடவையாக 2012 இல்) | ||
சிறந்த முடிவு | குழுநிலை (2012) |
உக்ரைன் தேசிய அணி கீவ் நகரில் உள்ள ஒலிம்பிக் அரங்கில் தனது உள்ளக விளையாட்டுகளை விளையாடுகிறது.[2]
மேற்கோள்கள்
- Ukraine determine own future, ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம்
- NSK Olimpiysky, Ukrainian Soccer Portal
வெளி இணைப்புகள்
- Ukraine at the Euro 2016. FFU special website.
- Ukrainian page on FIFA's website (include upcoming fixtures)
- Official website of the Ukrainian Football Federation
- Ukrainian Football
- Soccerway.com
- www.allplayers.in.ua
- Ukrainian Soccer History website (உக்ரைனிய மொழி)
- RSSSF archive of most capped players and highest goalscorers
- Media library (forum-style) of Ukrainian National Football Team
- ELO ratings
- List of Ukrainian international players perished in car crashes
- Ukraine Football International website
- Complete List of Teams and Results