லிவீவ்

லிவீவ் (Lviv, உக்ரைனியன்: Львів L’viv; போலிய: Lwów, உருசியம்: Львов, L'vov; German: Lemberg) மேற்கு உக்ரைனில் உள்ள ஓர் நகரமாகும். உக்ரைனின் இன்றைய பண்பாட்டு மையங்களில் முக்கிய இடம் பெற்றுள்ள லிவீவ் வரலாற்றிலும் போலிய மற்றும் யூதர்களின் பண்பாட்டு மையமாக இருந்துள்ளது. இரண்டாம் உலகப் போர், பெரும் இன அழிப்பு மற்றும் அதைத் தொடர்ந்த 1944-46 ஆண்டின் போலிய இடம்பெயர்வுகள் வரையிலும் போலந்தியர்களும் யூதர்களுமே பெரும்பான்மையினராக இருந்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்காலக் கட்டிடங்களும் கற்கள் பதித்த சாலைகளும் உலகப்போரில் தப்பித்து பிந்தைய சோவியத் ஆட்சியிலும் சிதைவுறாது உள்ளது. லிவீவ் பல்கலைக்கழகமும் லிவீவ் பல்தொழில் கழகமும் உயர் கல்வி நிலையங்களாக விளங்குகின்றன. உலகத்தரம் வாய்ந்த பண்பாட்டு நிறுவனங்களாக சேர்ந்திசை இசைக்குழுவும் லிவீவ் ஓப்பரா மற்றும் பாலே தியேட்டரும் புகழ்பெற்றுள்ளன. ஓல்டு டவுன் எனப்படும் பண்டைய நகர்ப்பகுதி உலகப் பாரம்பரியக் களப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. செப்டம்பர் 2006இல் லிவீவ் தனது 750வது ஆண்டுநாளைக் கொண்டாடியது.

லிவீவ்
Львів
லிவீவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பழைய நகரத்தின் காட்சி

கொடி

சின்னம்

Logo
குறிக்கோளுரை: "Semper fidelis"
எப்போதும் விசுவாசம்

உக்ரைன் வரைபடத்தில் லிவீவ் சிவப்பு வண்ணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
நாடு உக்ரைன்
ஓப்லாஸ்து லிவீவ் ஓப்லாஸ்து
மாவட்டம்லிவீவ் நகர நகராட்சி
நிறுவப்பட்டது1256
மாக்டெபர்கு சட்டம்1353
அரசு
  மேயர்அன்ட்ரி சதோவி
பரப்பளவு
  நகரம்182.01
ஏற்றம்296
மக்கள்தொகை (2010)
  நகரம்760
  அடர்த்தி4,298
  பெருநகர்1,498
நேர வலயம்EET (ஒசநே+2)
  கோடை (பசேநே)EEST (ஒசநே+3)
அஞ்சல் குறி79000
தொலைபேசி குறியீடு+380 32(2)
வாகன எண்ணொட்டுBC (2004 முன்னால்: ТА,ТВ,ТН,ТС)
இணையதளம்http://lviv.travel/en/index (English)
http://www.city-adm.lviv.ua (Ukrainian)

யூஈஎஃப்ஏ யூரோ 2012 நடத்தப்படும் நான்கு உக்ரைனிய நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.

காட்சியகம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.