ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம்

ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (Union of European Football Associations, French: Union des Associations Européennes de Football,[3] பரவலான இதன் சுருக்கம் யூஈஎஃப்ஏ ) ஐரோப்பாவில் கால் பந்தாட்டத்திற்கான நிருவாக அமைப்பாகும். 53 தேசிய கால்பந்து சங்கங்கள் இதில் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பு ஐரோப்பாவின் தேசிய கால்பந்து சங்கங்களின் சார்பாக பன்னாட்டு விளையாட்டு அமைப்புகளில் சயல்படுகிறது. தவிர, தேசிய சங்கபோட்டிகளை நடத்துவதையும், பரிசுத்தொகைகள், ஊடக உரிமங்கள் மற்றும் பிற விதிமுறைகளைக் கட்டுப்படுத்துகிறது.

ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்
சுருக்கம்யூஈஎஃப்ஏ
குறிக்கோள் உரைகால்பந்து குறித்த அக்கறை கொள்கிறோம்
உருவாக்கம்15 சூன் 1954 (1954-06-15)
வகைவிளையாட்டு அமைப்பு
தலைமையகம் நியோன், சுவிட்சர்லாந்து
ஆள்கூறுகள்46.371009°N 6.23103°E / 46.371009; 6.23103
சேவைப் பகுதிஐரோப்பா
உறுப்பினர்கள்
53 உறுப்பினர் சங்கங்கள்
ஆட்சி மொழி
ஆங்கிலம், பிரான்சியம், இடாய்ச்சு
தலைவர்
மிசேல் பிளாட்டினி[1]
துணைத் தலைவர்
செனெசு இர்சிக் [1]
பொதுச் செயலாளர்
கியான்னி இன்பான்டினோ [2]
கௌரவத் தலைவர்
லென்னர்ட் யோகன்சன் [1]
மைய்ய அமைப்பு
யூஈஎஃப்ஏ காங்கிரசு
தாய் அமைப்புஃபிஃபா
வலைத்தளம்www.UEFA.com

யூஈஃப்ஏ 1954ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் துவங்கியது. எப்பெ சுவார்ட்சு முதல் தலைவராகவும் ஆன்றி டிலௌனய் முதல் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினர். தற்போதையத் தலைவராக பிரான்சின் புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டாளர் மிசேல் பிளாட்டினி பொறுப்பாற்றுகிறார். தற்போது இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் நியோன் நகரில் உள்ளது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. http://www.uefa.com/uefa/aboutuefa/organisation/executivecommittee/index.html
  2. http://www.uefa.com/uefa/aboutuefa/organisation/generalsecretary/index.html
  3. "History – Overview". uefa.com. UEFA. பார்த்த நாள் 15 March 2010.)

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.