இந்திய மலைப்பாதை தொடருந்துகள்

இந்தியாவின் மலைப்பாதைத் தொடருந்துகள் என்பவை பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவின் மலைப் பகுதிகளில் கட்டப்பட்ட ஐந்து தொடருந்துப் பாதைகளைக் குறிக்கும். இந்தியாவில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலிருந்து இன்றுவரை இவை இயக்கப்படுகின்றன. 2005 முதல் இந்தியன் இரயில்வே இயக்கும் காஷ்மீர் ரயில்வேயும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு மலைத் தொடருந்துகளில் டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே [1881],கால்கா-ஷிம்லா இரயில்வே [1898],காங்க்ரா பள்ளத்தாக்கு இரயில்வே [1924],மற்றும் காஷ்மீர் ரயில்வே [2005] ஆகிய நான்கும் வட இந்தியாவில் கரடுமுரடான இமயமலைப் பகுதிகளில் அமைந்துள்ளன. மற்ற இரண்டும் தென்னிந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மலை இரயில் பாதை மற்றும் மகாராஷ்டிராவின் மாதெரன் மலை இரயில்பாதை ஆகியவையாகும். டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே, நீலகிரி மலை ரயில் மற்றும் கால்கா-ஷிம்லா இரயில்வே எனக்கூட்டாக "இந்தியாவின் மலைத் தொடருந்துகள் " என்ற பெயரில்யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[1][2][3] இவை உலக அளவில் அறிவிக்கப்பட்ட அகல மற்றும் குறுகிய இருபது தொடருந்துப் பாதைகளில் ஐந்தாகும்.[4]

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
இந்திய மலைப்பாதை தொடருந்துகள்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
டார்ஜிலிங் இமாலய இரயில் பாதை

வகைபண்பாடு
ஒப்பளவுii, iv
உசாத்துணை944
UNESCO regionஆசியா-பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1999 (23rd தொடர்)
விரிவாக்கம்1999 Darjeeling Himalayan Railway; 2005 Kalka–Shimla Railway; 2008 நீலகிரி மலை இரயில் பாதை

இந்த மலைப்பாதை தொடருந்துகள் இன்றும் நல்ல நிலையில் இயங்குவதுடன் அடிவாரத்தில் உள்ள முக்கிய இடங்களைத் தொடர்புப்படுத்துகின்றன. சிறந்த பொறியியல்தொழினுட்பம் மற்றும் கட்டுமானத்திற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக நிற்கின்றன.[1][2][3]

வரலாறு

1844 ல் என்ற பிரித்தானிய இந்தியாவின் ஆளுநரான சர் ஜான் லாரன்ஸ் என்பவரால் இந்தியாவில் மலைகளில் மலைப்பாதைத் தொடருந்துகள் அமைக்கும் பணி தொடங்கியது.[5] குறிப்பாக இமயமலை மற்றும் இந்தியாவின் மற்ற மலைத்தொடர்களில் பிரித்தானியர்களின் காலனியாதிக்கக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகவும் படைத் தளத்தை அமைக்க வேண்டியும் இந்தியாவின் முக்கியமான மலைப்பகுதிகளில் தொடருந்துப் பாதைகள் அமைக்கப்பட்டன. இதற்காக டார்ஜிலிங், சிம்லா, காங்ரா பள்ளத்தாக்கு, உதகமண்டலம், மாதெரன் மலை ஆகிய பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.[2][6][7]

இந்தியாவின் ஐந்து மலைப்பாதைத் தொடருந்துகள்

Nameநீளம் கி. மீட்டரில்கட்டப்பட்ட ஆண்டுவகைபாதை அளவு
டார்ஜிலிங்- இமாலயன் தொடருந்து மலைப்பாதை88 கி. மீ1881குறுகிய பாதை610 மிமீ (2 அடி) 
நீலகிரி மலைத் தொடருந்து46 கி. மீ1908மீட்டர் பாதை1,000 மிமீ (3 அடி 3 38 அங்)
கல்கா- சிம்லா தொடருந்து மலைப்பாதை96 கி. மீ1903[[Bosnian gauge762 மிமீ (2 அடி 6 அங்)
மாதெரன் மலைத் தொடருந்து20. கி. மீ1907குறுகிய பாதை610 மிமீ (2 அடி) 
காங்ரா பள்ளத்தாக்குத் தொடருந்து164. கி. மீ1929Bosnian gauge762 மிமீ (2 அடி 6 அங்)

டார்லிஜிங் இமாலயன் தொடருந்து

Left: An excursion train (actually empty carriages returning to Siliguri) on the upper part of Batasia Loop. The Himalayan mountains (including Kanchenjunga) form the background. Right: The Loop Line on Darjeeling Himalayan Railway, 1921

மேற்குவங்க மாநிலம் சிலிகுரி- டார்ஜிலிங் மலைப்பாதையில் இந்த தொடருந்து இயக்கப்படுகிறது.[6] இது அழகாக, பொம்மைபோல் இருப்பதால் இருப்பதால் 'டாய் டிரெய்ன்' என்றும் அழைக்கிறார்கள். இமயமலை அடிவாரத்தில் உள்ள சிலிகுரியில் புறப்பட்டு கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,200 மீட்டர் உயரத்தில் 86 கி. மீ பயணத்தில் டார்ஜிலிங்கை அடைகிறது. குட்டி குட்டி பெட்டிகளை பழைமை வாய்ந்த நீராவிப் பொறி இழுத்துச் செல்கிறது[8][9]. இந்த ரயில்பாதை 1879 - 1881ம் ஆண்டுகளில் அமைக்கப்பட்டு, தொடருந்துப் போக்குவரத்து தொடங்கியது.[8][10] இது முதலில் சரக்குப் போக்குவரத்துக்காக அமைக்கப்பட்டு, இரண்டாம் உலகப்போரின் போது சிப்பாய்களையும் ஆயுதங்களையும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகே பயணிகள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.[8][10][11]

Panoramic view of Darjeeling Himalayan Railway station at Darjeeling

சிறப்புக்குரிய டார்ஜிலிங் இமாலயன் தொடருந்து மலைப் பாதை 1999-ம் ஆண்டில் யுனெஸ்கோவால் இந்தியாவின் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட 2வது தொடருந்துப் பாதை ஆகும்.[1] முதல்தொடருந்துப் பாதை ஆஸ்திரியாவின் ஸெம்மரிங் ரயில் ஆகும்.

நீலகிரி மலைத் தொடருந்து

An excited crowd receives the Nilgiri Mountain Train at Ooty station
Nilgiri Mountain Railway between Mettupalayam and Ootacamund
The unique rack and pinion rack system

தமிழகத்தில் கோயம்புத்தூர் அருகே மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலைப்பாதையில் நீலகிரி மலைத் தொடருந்து இயக்கப்படுகிறது. 1845 ஆம் ஆண்டில் தொடருந்து மலைப்பாதை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1899 ஆம் ஆண்டில் போக்குவரத்து தொடங்கியது. மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே மிகவும் சரிவான பாதை என்பதால் தண்டவாளத்தின் நடுவே பல்சக்கரம் அமைத்துள்ளனர்.[12] பல்சக்கரங்களைப் பற்றிக்கொண்டே ரயில் இயங்குகிறது.[12]

மேட்டுப்பாளையம் - குன்னூர் வரை நீராவிப்பொறியும் பின்னர் டீசல் இயந்திரப் பொறியும் பயன்படுத்தப்படுகிறது. பயணதூரம் 46கி.மீ.தான் என்றாலும் பயணநேரம் சுமார் ஐந்தரைமணி நேரமாகும். வழியில் 208 வளைவுகள், 16 குகைகள், 250 பாலங்கள் உள்ளன.[2][13][14] எங்கு திரும்பினும் பசுமை, நீரோடை, காட்டு மிருகங்கள் என இயற்கை மனதைத் தாலாட்டும் நீலகிரி மலைரயில் 2005 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

கல்கா- சிம்லா மலைத் தொடருந்து

Shivalik Deluxe Express in Taradevi Station.
A typical passenger train on one of the line's big bridges

இமயமலை அடிவாரத்தில் உள்ள சிம்லா மற்றும் கல்கா ஆகிய இரு நகரங்களுக்கிடையே இம்மலைப்பாதை தொடருந்து அமைக்கப்பட்டுள்ளது. இமாசலப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் சிம்லா.[2][15] கல்கா நகரத்தில் இருந்து சிம்லாவுக்கு ரயில்பாதை அமைக்கப்பட்டதன் பின்னணி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவை ஆண்டுவந்த ஆங்கிலேயர் சிம்லாவில் நிலவும் குளிர் தட்ப வெப்பநிலை காரணமாக பிரித்தானிய இந்தியாவின் கோடைக்கால தலைநகராக சிம்லாவை மாற்றிக்கொண்டனர்.[2][15][16] படைத் தலைமை அலுவலகத்தையும் சிம்லாவில் அமைத்தனர். இதற்காக போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போதுதான் கல்கா- சிம்லா ரயில்பாதை அமைக்கப்பட்டது. 1903 ஆம் ஆண்டு முதல் ரயில்போக்குவரத்து தொடங்கியது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,076 மீட்டர் உயரத்தில் உள்ள சிம்லாவுக்கு தொடருந்தில் செல்வது சுகமான அனுபவமாகும். கல்கா - சிம்லா மலைப்பாதைத் தொடருந்து 2008 ஆம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.[1]

மாதெரன் மலைத் தொடருந்து

காசுமீர் மலைத் தொடருந்து

மேற்கோள்கள்

  1. "Mountain Railways of India". World Heritage:UNESCO. பார்த்த நாள் 2010-02-19.
  2. Kohli, M.S.; Ashwani Lohani (2004). Mountains of India: Tourism, Adventure, Pilgrimage. Indus Publishing. பக். 97–106. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7387-135-3. http://books.google.co.in/books?id=GIs4zv17HHwC&pg=PA97&dq=mountain+railways+of+india&cd=5#v=onepage&q=mountain%20railways%20of%20india&f=false. பார்த்த நாள்: 2010-02-20.
  3. "Luxury Trains of India". பார்த்த நாள் 2010-02-20.
  4. Abram, David (2003). Rough guide to India. Rough Guides. பக். 479. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-84353-089-9. http://books.google.co.in/books?id=kAMik_6LbwUC&pg=PA479&dq=mountain+railways+of+india&lr=&cd=73#v=onepage&q=mountain%20railways%20of%20india&f=false. பார்த்த நாள்: 2010-02-20.
  5. "Steam in History". The Indian Railways fan Club (IRFCA). பார்த்த நாள் 2010-04-03.
  6. "Mountain Railways of India – Chugging and romancing the hills". பார்த்த நாள் 2010-02-20.
  7. Srinivasan, Rupa; Manish Tiwari and Sandeep Silas (2006). Our Indian Railway: themes in India's Railway history. Foundation Books. பக். xxxiv-xxxv. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7596-330-1. http://books.google.co.in/books?id=O2-eHnajWxIC&pg=PR34&dq=mountain+railways+of+india&lr=&cd=78#v=onepage&q=mountain%20railways%20of%20india&f=false. பார்த்த நாள்: 2010-02-21.
  8. Whittle, Paul; Terry Martin. "A Brief History of the DHR". History and A Trip Up the Line. Darjeeling Himalayan Railway Society. பார்த்த நாள் 2007-02-24.
  9. "History of Darjeeling Himalayan Railway". பார்த்த நாள் 2010-04-03.
  10. "DHr History". Darjeeling.net. பார்த்த நாள் 2010-02-19.
  11. "The Loop, Agony Point, Darjeeling [Hill Railway]". British Library Online Gallery. பார்த்த நாள் 2010-02-21.
  12. Kholi p.104
  13. Krishnan, Govind. V.M. NMR Nilgiri Mountain Railway:From Life Line to Oblivion. Paypall. http://www.krishnantech.net/nmr/.
  14. "Cultural Sites inscribed on UNESCO’s World heriatge List". India-Mountains railways of India. World Heritage List;UNESCO (2005=06-15).
  15. "HP declares Kalka-Shimla railway as 'heritage' property". The Hindu (2010-02-21). பார்த்த நாள் 2010-02-19.
  16. Singh, Jagmeet (2002-06-15). "Man behind Barog tunnel lies forgotten". feature. The Tribune of India. பார்த்த நாள் 2010-02-19.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.