அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்

அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆப் அல்ட்ரான் (Avengers: Age of Ultron) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஆங்கில சூப்பர் ஹீரோஸ் திரைப்படமாகும். இந்த திரைப்படம் 2012ம் ஆண்டு வெளியான தி அவேஞ்சர்ஸ் என்ற திரைப்படத்தின் 2ம் பாகம் ஆகும். இந்த திரைப்படத்தை மார்வெல் ஸ்டுடியோ தயாரித்தது. மேலும் இதனை வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்த திரைப்படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் இவான்ஸ், மார்க் ருஃப்பால்லோ, கிறிஸ் ஹோம்ஸ்வோர்த், ஸ்கார்லெட் ஜோஹான்சன், ஜெர்மி ரேன்நேர், சாமுவேல் எல். ஜாக்சன், ஆரோன் டெய்லர்-ஜோன்சன், எலிசபெத் ஓல்சன், பவுல் பெட்டனி, தோமஸ் கிரெட்ச்மன், ஜேம்ஸ் சப்டர், கோபி ஸ்மல்டேர்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் மே 1ம் திகதி 2015ம் ஆண்டு வெளியானது.

அவெஞ்சர்ஸ் ஏஜ் ஆஃப் அல்ட்ரான் தலைப்பு பதாகை
அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன்
இயக்கம்ஜோஸ் வேடன்
தயாரிப்புகேவின் பேகே
மூலக்கதைஅவேஞ்சர்ஸ் (சித்திரக்கதை)
ஸ்டான் லீ
ஜா கிர்பி
திரைக்கதைஜோஸ் வேடன்
நடிப்புராபர்ட் டவுனி ஜூனியர்
கிறிஸ் இவான்ஸ்
மார்க் ருஃப்பால்லோ
கிறிஸ் ஹோம்ஸ்வோர்த்
ஸ்கார்லெட் ஜோஹான்சன்
ஜெர்மி ரேன்நேர்
சாமுவேல் எல். ஜாக்சன்
ஆரோன் டெய்லர்-ஜோன்சன்,
எலிசபெத் ஓல்சன்
ஜேம்ஸ் சப்டர்
பவுல் பெட்டனி
தோமஸ் கிரெட்ச்மன்
கோபி ஸ்மல்டேர்ஸ்
ஒளிப்பதிவுபேன் டேவிஸ்
கலையகம்மார்வெல் ஸ்டுடியோ
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 13, 2015 (2015-04-13)(டால்பி திரையரங்கு)
மே 1, 2015(அமெரிக்க ஐக்கிய நாடு)
ஓட்டம்141 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$444-495.2 மில்லியன்1
மொத்த வருவாய்$1.405 மில்லியன்[1]

இந்த திரைப்படத்திற்கு 2015ஆம் ஆண்டு வசூல் ரீதியாக ஐந்தாவது இடம். இதன் அடுத்தடுத்த பாகங்கள் அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் 2018ஆம் ஆண்டும் மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் 2019ஆம் ஆண்டும் வெளியானது.

கதைச் சுருக்கம்

இந்த உலகத்தை வேற்றுகிரகவாசிகளிடமிருந்து காப்பதற்காக டோனி ஸ்டார் அல்ட்ரான் எனப்படும் ஒரு ரோபோவை உருவாக்குகிறார். அனால் அவர் உருவாக்கிய ரோபோக்கள் மனிதர்களுக்கு எதிராய் திரும்புகின்றது. பூமியின் அழிவுக்குக் காரணமாக இருப்பது மனித இனமே என நினைக்கும் அல்ட்ரான், மனிதர்களை பூமியில் இருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கிறது. இயந்திரங்களிடமிருந்து மனிதர்களை எப்படி சூப்பர் ஹீரோஸ் காப்பாற்றுகிறார்கள் என்பது தான் கதை.

நடிகர்கள்

தமிழில்

இந்தியாவில் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மே 1ம் திகதி 2015ம் ஆண்டு 3டி மற்றும் ஐமேக்ஸ் 3டியிலும் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

அடுத்த பாகம்

இந்த திரைப்படத்தின் அடுத்த 3 ம் பாகம் அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் ஏப்ரல் 24, 2018 ஆம் ஆண்டு வெளிவந்தது

மேற்கோள்கள்

  1. "Avengers: Age of Ultron (2015)". பாக்சு ஆபிசு மோசோ. பார்த்த நாள் July 12, 2015.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.