கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2
கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 என்பது 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த அமெரிக்க சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். இது மார்வெல் காமிக்ஸின் கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி குழுவை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்.இது மார்வெல் ஸ்டுடியோஸால் தயாரிக்கப்பட்டு வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் மூலம் விநியோகிக்கப்பட்டது. இது கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி திரைப்படத்தின் தொடர்ச்சியாகும்.இது மார்வெல் சினிமா யுனிவர்ஸின் (MCU) பதினைந்தாவது படமாகும். இப்படத்தை ஜேம்ஸ் கன் என்பவர் எழுதி இயக்கப்பட்டது. கிறிஸ் பிராட், ஜோ சால்ட்னா, டேவ் பாடிஸ்டா, வின் டீசல், பிராட்லி கூப்பர், மைக்கேல் ரூக்கர், கரேன் கில்லான், போம் க்ளெமென்ட்டிப், எலிசபெத் டெபிக்கி, கிறிஸ் சல்லிவன், சீன் கன், சில்வெஸ்டர் ஸ்டலோன், மற்றும் கர்ட் ரஸ்ஸல் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
வரவேற்பு
திரைப்பட வருவாய்
கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 அமெரிக்கா மற்றும் கனடாவில் 389.8 மில்லியன் டாலர் மற்றும் மற்ற நாடுகளில் 473.9 மில்லியன் டாலர்கள் என உலகளவில் மொத்தம் 863.8 மில்லியன் டாலர் வருவாயை ஈட்டியது. இப்படம் வெளிவந்த நான்காம் வாரத்திற்குப் பிறகு மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் வெளியிட்டில் ஐந்தாவது அதிக வருவாய் ஈட்டிய படமாக இது ஆனது. [1] [2]
குறிப்புகள்
- Tartaglione, Nancy (June 4, 2017). "'Wonder Woman' Lassos $122.5M Offshore, $223M Global Debut – International Box Office". Deadline Hollywood. Archived from the original on June 5, 2017. Retrieved June 5, 2017.
- D'Alessandro, Anthony (March 20, 2018). "No. 9 'Guardians of the Galaxy Vol. 2' Box Office Profits – 2017 Most Valuable Blockbuster Tournament". Deadline Hollywood. Archived from the original on March 21, 2018. Retrieved March 20, 2018.
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2
- கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 ஆல் ரோவியில்
- [https://web.archive.org/web/20171215053140/http://www.waltdisneystudiosawards.com/media/scripts/GotG2.pdf ஸ்கிரிப்ட