ஸ்பைடர் மேன்: பார் பிரம் ஹோம்
ஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம் அல்லது சிலந்தி மனிதன்: வீட்டிலிருந்து வெகுதூரம் (Spider-Man: Far From Home) என்பது 2019ஆம் ஆண்டு திரைக்கு வர விருக்கும் அமெரிக்க நாட்டு சூப்பர் ஹீரோஸ் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை மார்வெல் வரைகதை கதாபாத்திரமான ஸ்பைடர் மேன் என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோ நிறுவனங்கள் தயாரிக்க சோனி பிக்சர்ஸ் மோஷன் பிக்சர் குரூப் என்ற நிறுவனத்தின் மூலம் விநியோகம் செய்கின்றது. இந் திரைப்படம் 2017ஆம் ஆண்டு வெளியான ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இருபத்தி மூன்றாவது திரைப்படமும் ஆகும்.
ஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம் | |
---|---|
இயக்கம் | ஜோன் வாட்ஸ் |
தயாரிப்பு |
|
கதை |
|
மூலக்கதை | ஸ்பைடர் மேன் ஸ்டான் லீ ஸ்டீவ் டிட்கோ |
இசை | மைக்கேல் ஜெய்சினோ |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | மத்தேயு ஜே. லாய்ட் |
கலையகம் |
|
விநியோகம் | சோனி பிக்சர்ஸ் மோஷன் பிக்சர் குரூப் |
வெளியீடு | சூலை 2, 2019 (அமெரிக்க ஐக்கிய நாடு) |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
இந்த திரைப்படத்திற்கு கிறிஸ் மெக்கேனா மற்றும் எரிக் சோமர்ஸ் என்பவர்கள் கதை எழுத, ஜோன் வாட்ஸ் என்பவர் இயக்கியுள்ளார். டாம் ஹாலண்ட், சாமுவேல் எல். ஜாக்சன், ஸிந்தியா, கோபி ஸ்மல்டேர்ஸ், ஜோன் ஃபெவ்ரோ, ஜே. பி. ஸ்மூவே, ஜேக்கப் பாட்டலன், மார்டின் ஸ்டார், மரிசா டோமீய், ஜாகே கிலென்ஹால் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
தனது பள்ளி மாணவர்களுடன் ஐரோப்பாவிற் கு சுற்றுப்பயணம் மேட்கொள்ளும் பார்க்கர் அங்கு வரும் பிரச்சனைகளை எப்படி எதிர் கொண்டான் என்பது தான் இத் திரைப்படத்தின் கதை. இந்த திரைப்பட ம் சூலை 2, 2019 அமெரிக்காவில் முப்பரிமாணம் மற்றும் ஐமேக்ஸ் தொழிநுட்பத்தில் வெளியாவுள்ளது.
நடிகர்கள்
- டாம் ஹாலண்ட் - பீட்டர் பார்கர் & ஸ்பைடர் மேன்
- அவெஞ்சர்ஸ் குழுவின் இளம் சூப்பர் ஹீரோ. இவருக்கு சிலந்தி மூலம் சக்தி கிடைத்தது.
- சாமுவேல் எல். ஜாக்சன் - நிக் ப்யூரி
- எஸ்.எச்.ஐ.எல்.டி. (S.H.I.L.D) குழுவின் முன்னாள் தலைவர். இவர் பார்கருக்கு ஒரு வளர்ப்பு தந்தை மாதிரி.
- ஸிந்தியா - மிக்கெல்லா
- பார்கருடன் ஒன்றாக படிப்பவர் மற்றும் அவரின் தோழி. இவரின் கதாபாத்திரம் பார்கருடன் காதல் ஏட்படுவது போன்று அமைந்துள்ளது.
- கோபி ஸ்மல்டேர்ஸ் - மரியா ஹில்
- எஸ்.எச்.ஐ.எல்.டி. (S.H.I.L.D) குழுவின் சிறப்பு பயிற்சி பெற்ற முன்னாள் உறுப்பினர். நிக் ப்யூரியுடன் ஒன்றாக வேலை செய்பவர்.
- ஜோன் ஃபெவ்ரோ - ஹரோல்ட் "ஹேப்பி" ஹோகன்
- ஸ்டார்க் இன்டஸ்ட்ரீஸ் மெய்க்காப்பாள ர் மற்றும் முன்னாள் கார் ஓட்டுநர், டோனி ஸ்டார்க்குக்கு பிறகு பார்கரின் காவலர். டோனியின் நம்பிக்கைக்குரிய நண்பன்.
- ஜே. பி. ஸ்மூவே - மிஸ்டர் டெல்
- பார்கரின் ஆசிரியரும் மற்றும் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் செல்வதற்கான ஒழுங்கலர்.
- ஜேக்கப் பாட்டலன் - நெட்
- பார்கரின் முதல் நண்பன்.
- மார்டின் ஸ்டார் - ஹாரிங்டன்
- மரிசா டோமீய் - மே பார்கர்
- பார்கரின் அத்தை.
- ஜாகே கிலென்ஹால்