டாம் ஹாலண்ட்

தாமஸ் ஸ்டான்லி ஹாலண்ட் (Thomas Stanley Holland, பிறப்பு: 1 சூன் 1996) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் இங்கிலாந்தில் உள்ள பிரிட் என்ற பள்ளியில் பட்டம் பெற்றார். இவர் 2016ஆம் ஆண்டு முதல் கேப்டன் அமெரிக்கா: சிவில் வார், ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங் (2017), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம், ஸ்பைடர் மேன்: பார் பிரம் ஹோம் (2019) போன்ற திரைப்படங்களில் மாவல் திரைப் பிரபஞ்சம் கதாபாத்திரமான ஸ்பைடர் மேன் (சிலந்தி மனிதன்) என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் எல்லோராலும் அறியப்படும் நடிகர் ஆனார். 2017 ஆம் ஆண்டில் BAFTA ரைசிங் ஸ்டார் விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாம் ஹாலண்ட்
பிறப்புதாமஸ் ஸ்டான்லி ஹாலண்ட்
1 சூன் 1996 (1996-06-01)
லண்டன், இங்கிலாந்து
கல்விபிரிட் பள்ளி
பணி
  • நடிகர்
  • நடனம் ஆடுபவர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2008–இன்று வரை

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

ஹொலண்ட் 1 சூன் 1996 ஆம் ஆண்டு கிங்ஸ்டன் உப்பின் தேம்ஸ, லண்டனில் பிறந்தார்.[1] இவரின் தாயார் நிகோலா எலிசபெத் ஒரு புகைப்பட கலைஞர் மற்றும் தந்தை டோமினிக் ஹாலந்து ஒரு நகைச்சுவை யாளர் மற்றும் ஆசிரியர். இவருக்கு மூன்று சகோதரர்கள் உண்டு. இவரின் தந்தை வழி தாத்தா, பாட்டியினர் மாண் தீவு மற்றும் அயர்லாந்து நாட்டை சேர்த்தவர்கள்.[2][3]

ஹொலண்ட் தனது ஆரம்ப பள்ளி படிப்பை விம்பிள்டன், லண்டனில் உள்ள டான்ஹெட் என்ற ரோமன் கத்தோலிக்க பள்ளியில் படித்தார்.[4] அதைத் தொடர்ந்து விம்பிள்டன் உள்ள விம்பிள்டன் கல்லூரியில் 2012 ஆம் ஆண்டு வரையும் கல்வி பயின்றார். தனது பள்ளி காலத்தில் நடனம் மீது ஆர்வம் கொண்ட ஹொலண்ட் வருங்காலத்தில் ஒரு நடனம் ஆடுபவராய் வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். விம்பிள்டன் கல்லூரியின் பின்னர் அவர் கலை மற்றும் தொழில்நுட்பத்திற்கான பட்டத்தை BRIT பள்ளியில் பெற்றார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.