தி அவேஞ்சர்ஸ்
தி அவேஞ்சர்ஸ் (The Avengers (2012 film) இது 2012ம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்கா நாட்டு அதி நாயகர்கள் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை மார்வெல் ஸ்டுடியோ தயாரிக்க, வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்ஸர் என்ற நிறுவனம் மூலம் மே 4, 2012 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது.
தி அவேஞ்சர்ஸ்(Prince PL) | |
---|---|
![]() திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி | |
இயக்கம் | ஜோஸ் வேடன் |
தயாரிப்பு | கேவின் பிகே |
மூலக்கதை | அவென்ஜர்ஸ் (காமிக்ஸ்)
ஸ்டான் லீ ஜா கிர்பி |
திரைக்கதை | ஜோஸ் வேடன் |
இசை | ஆலன் சில்வெஸ்டரி |
நடிப்பு | ராபர்ட் டவுனி ஜூனியர் கிறிஸ் இவான்ஸ் மார்க் ருஃப்பால்லோ கிறிஸ் ஹோம்ஸ்வோர்த் ஸ்கார்லெட் ஜோஹன்சன் ஜெர்மி ரேன்நேர் Tom Hiddleston கிளார்க் கிரெக் Cobie ஸ்முல்டேர்ஸ் ஸ்டெல்லான் ஸ்கார்ஸ்கர்ட்டின் சாமுவேல் எல். ஜாக்சன் |
படத்தொகுப்பு | ஜெப்ரி ஃபோர்டு Lisa Lassek |
கலையகம் | மார்வெல் ஸ்டுடியோ |
வெளியீடு | 2012-4-11 |
ஓட்டம் | 142 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $220 மில்லியன் |
மொத்த வருவாய் | $1,518,594,910 |
இது மாவல் திரைப் பிரபஞ்சத்தின் ஆறாவது திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஜோஸ் வேடன் என்பவர் எழுதி மற்றும் இயக்க, ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் இவான்ஸ், மார்க் ருஃப்பால்லோ, கிறிஸ் ஹோம்ஸ்வோர்த், ஸ்கார்லெட் ஜோஹான்சன் மற்றும் ஜெரமி ரெனர் ஆகியோர் அவேஞ்சர்ஸ் என்ற குழுவில் என்ற முதன்மை காதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் டாம் ஹிடில்ஸ்டன், கிளார்க் க்ரேக், கோபி ஸ்மல்டேர்ஸ், ஸ்டெல்லான் ஸ்கார்ஸ்கர்ட்டின் மற்றும் சாமுவேல் எல். ஜாக்சன் ஆகியோர் துணைக்கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இத்திரைப்படம் மார்வெல் வரைகதையில் வெளியான அயன் மேன், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், தோர் போன்ற சூப்பர் ஹீரோ படங்களின் ஹீரோக்கள் அனைவரும் ஒன்றினைந்து எஸ்.எச்.ஐ.எல்.டி. (S.H.I.L.D) எனப்படும் சர்வதேச அமைதி காக்கும் நிறுவனத்தின் தலைவரான நிக் ப்யூரியுடன் இணைந்து நம் உலகம் எதிர் கொள்ளவுள்ள மிகப் பெரிய ஆபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவதே இதன் கதை. இதன் அடுத்தடுத்த பாகங்கள் அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் 2018ஆம் ஆண்டும் மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் 2019ஆம் ஆண்டும் வெளியானது.
கதைச் சுருக்கம்
தோரின் (Thor) சகோதரனா லோகி (Loki) தோரை வீழ்த்தி பிரபஞ்சத்தின் தலைவனாக ஆசைப்பட்டு பல கொடுஞ் செயல்களை செய்கின்றான். பூமிக்கு வரும் லோகி எஸ்.எச்.ஐ.இ.எல்.டி. (S.H.I.E.L.D) குழுவின் பாதுகாப்பில் இருக்கும் பிரபஞ்சத்தை இணைத்து பாலத்தை உருவாக்க வல்ல சக்திகள் உள்ள விண்வெளி கல் அடங்கிய 'டெசராக்ட்டை' கவர்ந்து சென்று விடுகின்றான். இவனின் திண்டம் நிறைவேறினால் பூமிக்கு வேற்று கிரக படைகள் ஊடுருவக்கூடும் ஆபத்தை அறிந்த எஸ்.எச்.ஐ.இ.எல்.டி. (S.H.I.E.L.D) குழுவின் இயக்குனர் நிக் ப்யூரி பூமியிலுள்ள ஆறு அதி நாயகர்கள் அடங்கிய குழுவான அவேஞ்சர்ஸை உருவாக்குகிறார்.
இந்நாயகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து லோகி உருவாக்கிய இணைப்பின் மூலம் நியூயார்க் நகரத்திற்க்குள் வெளிவந்த மிக வலிமையுள்ள விண் கப்பல்கள் மற்றும் வாகனங்களையும் உடைய வேற்றுக் கிரக எதிரிகளை எதிர்த்து காப்பாற்றுகின்றனர். இறுதியில் லோகி கைது செய்யப்பட்டு ஆஸ்கார்டில் (தோரின் கிரகம்) சிறை வைக்கப்படுகிறார்.
நடிகர்கள்

- ராபர்ட் டவுனி ஜூனியர் - டோனி ஸ்டார்க் & அயன் மேன்
- இரும்புக் கவசங்களை உடையவனும் கணினித் திரையினால் எதிர்களைத் திட்டமிட்டு தாக்கக் கூடிய துவக்குகளை உடையவனும் ஆனவன் அயன் மேன்.
- கிறிஸ் எவன்ஸ் - ஸ்டீவ் ரோஜர்ஸ் & கேப்டன் அமெரிக்கா
- விசேசமான வல்லமையை ஊட்டக் கூடிய தசைகளைப் படைத்தவனும் சிறந்த போர்த் திட்டங்களைத் தீட்ட வல்லவனும் ஆனவன் கேப்டன் அமெரிக்கா. இவனின் ஆயுதம் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத வட்டமான போர்க் கவசம் ஆகும்.
- மார்க் ருஃப்பால்லோ - வைத்தியர். ப்ரூஸ் பேனர் & ஹல்க்
- எவராலும் எளிதில் அசைக்க முடியாத மிகப் பெரிய தசை வலிமையை உடையவனும் எதிரிகளைக் கொசுவைப் போல் அடித்து நாசம் செய்ய வல்லவனும் ஆனவன் ஹல்க்.
- கிறிஸ் ஹோம்ஸ்வோர்த் - தோர்
- லோக்கியின் அண்ணனும் இடிகளின் வல்லமையை ஈர்த்து எதிர்களைத் தாக்க வல்ல சக்தி படைத்தவன்; இடி மின்னலை கடத்தும் தன்மை கொண்ட சுத்தியை உடையவனுமானவன் தோர். இந்த சுத்தியை வேறு எவராலும் தூக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஸ்கார்லெட் ஜோஹான்சன் - நடாஷா & பிளாக் விடோ
- மிகச் சிறந்த சண்டைப் பயிற்சியும் உளவுத் திறனும் பெற்ற பெண்; பிளாக் விடோ.
- ஜெர்மி ரேன்நேர் - கிளின்ட் பர்டன்
- மிகச்சிறந்த வெடிக்கத்தக்க கூரையுடைய வில் அம்பு வீரன்' ஹோக்கை.
- டாம் ஹிடில்ஸ்டன் - லோகி
- பனி அரக்கர்களின் வாரிசும், தோரின் சகோதரன். இவனின் சக்தி மாய மந்திரம் மற்றும் ஒரு கை கோல்.
- சாமுவேல் எல். ஜாக்சன் - நிக் ப்யூரி
- ஷீல்டு இயக்கத்தின் இயக்குநர், அவெஞ்சர்சின் ஒருங்கிணைப்பாளர்.
- கிளார்க் க்ரேக் - பில் கொல்சன்
- ஷீல்டு உறுப்பினர் (ஏஜென்ட்டு)
- கோபி ஸ்மல்டேர்ஸ் - மரியா ஹில்
- ஸ்டெல்லான் ஸ்கார்ஸ்கர்ட்டின் - எரிக் செல்விக்