1259
1259 (MCCLIX) பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: |
|
ஆண்டுகள்: |
1259 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1259 MCCLIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1290 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2012 |
அர்மீனிய நாட்காட்டி | 708 ԹՎ ՉԸ |
சீன நாட்காட்டி | 3955-3956 |
எபிரேய நாட்காட்டி | 5018-5019 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1314-1315 1181-1182 4360-4361 |
இரானிய நாட்காட்டி | 637-638 |
இசுலாமிய நாட்காட்டி | 656 – 658 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1509 |
யூலியன் நாட்காட்டி | 1259 MCCLIX |
கொரியன் நாட்காட்டி | 3592 |
நிகழ்வுகள்
ஐரோப்பா
- ஆங்கிலேயப் பிரபுக்களுக்கு மன்னராட்சியில் தகுந்த பிரதிநிதித்துவம் வழங்கக்கோரும் ஆக்சுபோர்டு நாடாளுமன்றத்தின் கோரிக்கையை இங்கிலாந்து மன்னர் மூன்றாம் என்றி ஏற்றுக் கொண்டார்.
- செப்டம்பர் – பெலகோனியா சமரில் நிக்கேயா இராச்சியம் அக்கேயாவை வென்றது. இவ்வெற்றியை அடுத்து 1261-இல் கான்ஸ்டண்டினோபில் மீண்டும் கைப்பற்றப்பட்டது.
- டிசம்பர் 4 – ஐரோப்பாவில் நோர்மண்டி உட்பட பிரான்சின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கு இங்கிலாந்து மன்னர் மூன்றாம் என்றி உரிமை கோருவதில்லை எனவும், பதிலாக பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் ஆங்கிலேயக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதவளிப்பதில்லை எனவும் இரு மன்னர்களுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டது.
- பல்காரியாவில் உள்ள பொயானா கோவிலில் புகழ்பெற்ற சுதை ஓவியங்கள் முழுமையாக்கப்பட்டன. இவை தற்போது யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களங்கள் ஆகும்.
- நோகாய் கான் லித்துவேனியா, போலந்து மீதான இரண்டாவது மங்கோலிய தங்க நாடோடிகளின் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினான்.
ஆசியா
- ஆகத்து 11 – சீனாவின் சோங்கிங் மாகாணத்தில் சொங் நகரம் ஒன்றில் தாக்குதல் நடத்தும் போது, மங்கோலிய ககான், மோங்கே கான் இறந்தார். இவரது இறப்பை அடுத்து, மங்கோலியப் பேரரசின் வாரிசுரிமைக்கு சர்ச்சை கிளம்பியது. அவரது இரு சகோதரர்களும் (அரிக் போகே, குப்லாய் கான்) தமது தனிப்பட்ட குறுல்த்தாய்க்களை ஏற்படுத்தி நான்கு ஆண்டுகள் உள்நாட்டுப் போருக்கு (1260 முதல் 1264 வரை) வழி வகுத்தனர்.
- காக்கத்திய இராச்சியத்தில் ருத்திரமாதேவியின் ஆட்சி ஆரம்பம்.
- தாய்லாந்தின் வடக்கே லெனத்தாய் இராச்சியத்தை மன்னர் மங்கிராய் உருவாக்கினார்.
- கொரியாவின் கொரியோ இராச்சியம் அதனை முற்றுகையிட்ட மங்கோலியப் படைகளிடம் சரணடைந்தது.
பிறப்புகள்
இறப்புகள்
- ஆகத்து 11 – மோங்கே கான், மங்கோலியப் பேரரசர்
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.