ககான்

க கான் அல்லது ககான் (மொங்கோலியம்: хаан; மங்கோலிய எழுத்துமுறை: ᠬᠠᠭᠠᠨ, கயன்; [1]) என்பதற்கு மங்கோலிய மொழியில் பேரரசர் என்று பொருளாகும். சமமான பெண்பால் பட்டம் கதுன் ஆகும். கான்களின் கான் எனவும் இதனை மொழிபெயர்க்கலாம். இதற்கு மன்னாதி மன்னன் என்று பொருளாகும். மங்கோலியப் பேரரசின் பிரிவு காரணமாக, யுவான் வம்சத்தின் பேரரசர்கள் ககான் பட்டத்தைப் பயன்படுத்தினர். ககான் மற்றும் கான் துருக்கியில் பயன்படுத்தப்படும் பொதுவான துருக்கிய பெயர்கள் ஆகும்.

க கான்
பழைய துருக்கியம்
இலத்தீன் எழுத்துக்கள்:kaɣan
துருக்கியம்
இலத்தீன் எழுத்துக்கள்:kağan
இலத்தீன் எழுத்துக்கள்:hakan
காசாக்கு
சிரில்லிக் எழுத்துமுறை:қаған
இலத்தீன் எழுத்துக்கள்:qağan
உருசியம்
சிரில்லிக் எழுத்துமுறை:каган
இலத்தீன் எழுத்துக்கள்:kagan
மொங்கோலியம்
சிரில்லிக் எழுத்துமுறை:хаан
ஒலிபெயர்ப்பு:khaan
மொங்கோலியம்:ᠬᠠᠭᠠᠨ
ஒலிபெயர்ப்பு:qagan, khagan
அங்கேரியம்
இலத்தீன் எழுத்துக்கள்:kagán
சீனம்
எளிய சீனம்:可汗
ஹன்யு பின்யின் :kèhán
பாரசீகம்
பாரசீக எழுத்துக்கள்:خاقان
கொரியம்
ஹங்குல்/ஹன்ஜா:가한/可汗
கொரியத்தின் திருத்தப்பட்ட ரோமானியப்பதம்:gahan
மெக்கேன் ரீசுவேர்:kahan

கிரேட் கான் (அல்லது கிரான்ட் கான்) என்பது மங்கோலிய மொழியின் எக்கே ககான் (பெரிய பேரரசர் அல்லது Их Хаан) என்பதன் மொழிபெயர்ப்பாகும்.

தோற்றம்

இப்பட்டமானது 283 மற்றும் 289க்கு இடைப்பட்ட ஒரு உரையில் முதன்முதலில் காணப்படுகிறது. சியான்பே தலைவன் டுயுஹுன் தனது இளைய தத்துச் சகோதரன் முரோங் ஹுயியிடம் இருந்து தப்ப முயற்சிக்கிறான். அவன் தனது பாதையை லியாவோடோங் தீபகற்பத்திலிருந்து ஓர்டோஸ் பாலைவனத்தின் பகுதிகளில் முடிக்கிறான். அப்போது பேசும்போது யினலோவ் என்கிற முரோங்கின் தளபதி ஒருவன் முரோங்கை கெஹான் (சீனம்: 可寒, பிறகு சீனம்: 可汗) என்கிறான். சில ஆதாரங்கள் 3ம் நூற்றாண்டில் சிங்கை ஏரியின் அருகில் வசித்த டுயுஹுனும் இப்பட்டத்தைப் பயன்படுத்தி இருக்கலாம் என்கின்றன.[2]

ரோவுரன் ககானேடு (330–555) மக்களே தங்களது பேரரசர்களுக்கு ககான் மற்றும் கான் ஆகிய பட்டங்களைப் பயன்படுத்திய முதல் மக்களாவர். அதற்கு முன்னர் சியோங்னுவின் சன்யு பட்டத்தை அவர்கள் பயன்படுத்தி வந்தனர். கிரவுசட் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் அது துருக்கிய மக்கள் என்று கருதுகின்றனர்.[3] ரோவுரன்கள் மங்கோலியர்களுக்கு மூதாதையர்களாகக் கருதப்படுகின்றனர்.[4][5][6]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. alternatively spelled Kağan, Kagan, Khaghan, Kha-khan, Xagahn, Qaghan, Chagan, Қан, or Kha'an
  2. Zhou 1985, p. 3-6
  3. Grousset (1970), pp. 61, 585, n. 92.
  4. Art, Iranian-Bulletin of the Asia Institute, volume 17, p. 122
  5. Nihon Gakushiin-Proceedings of the Japan Academy, volume 2, p. 241
  6. Teikoku Gakushiin (Japan)-Proceedings of the Imperial Academy, volume 2, p. 241
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.