1-டெக்கேனால்

1-டெக்கேனால் (1- Decanol ) என்பது பத்து கார்பன்களைக் கொண்ட சங்கிலியால் ஆன ஓரு கொழுப்பு ஆல்ககால் ஆகும். இதனுடைய சுருங்கிய மூலக்கூறு வாய்பாடு C10H21OH . நிறமற்ற பாகுநிலையில் உள்ள வலுவான நெடியுடைய இத்திரவம்[2] நீரில் கரையாது. 20 பாகை செல்சியசு வெப்பநிலையில் நீருக்கு எதிரான இதனுடைய இடைமுக இழுவிசையின் அளவு 8.97 மில்லிநியூட்டன் / மீட்டர் ( mN/m ) ஆகும்.

1-டெக்கேனால்[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டெக்கேன்-1-ஆல்
வேறு பெயர்கள்
டெக்கைல் ஆல்ககால்
n-டெக்கைல் ஆல்ககால்
காப்ரிக் ஆல்ககால்
இனங்காட்டிகள்
112-30-1 Y
ChEBI CHEBI:28903 Y
ChEMBL ChEMBL25363 Y
ChemSpider 7882 Y
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C01633 Y
பப்கெம் 8174
UNII 89V4LX791F Y
பண்புகள்
C10H22O
வாய்ப்பாட்டு எடை 158.28 g/mol
தோற்றம் பாகுநிலை திரவம்
அடர்த்தி 0.8297 g/cm³
உருகுநிலை
கொதிநிலை 232.9 °C (451.2 °F; 506.0 K)
கரையாது
பிசுக்குமை 12.048 mPa.s (@ 25 °C)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Oxford MSDS
தீப்பற்றும் வெப்பநிலை 108 °C (226 °F; 381 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இது: Y/N?)
Infobox references

பயன்கள்

நெகிழியாக்கிகள், உயவுப் பொருட்கள், மேற்பரப்பிகள், கரைப்பான்கள் தயாரிப்பில் டெக்கெனால் பயன்படுத்தப்படுகிறது.

தீங்குகள்

தோல் மற்றும் கண்களில் டெக்கேனால் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இது கண்களில் தெளிக்கப்பட்டால் கண்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும். இதனை உள்ளிழுத்தலும் உட்கொள்ளுதலும் உடலுக்கு தீங்கை விளைவிக்கும். சுற்றுச்சூழலுக்கும் டெக்கேனால் கெடுதல் செய்கிறது.

மேற்கோள்கள்

  1. Merck Index, 12th Edition, 2911.
  2. ICSC
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.