1-அன்டெக்கேனால்

1-அன்டெக்கேனால் ( Undecanol ) என்பது பதினொன்று கார்பன்களைக் கொண்ட சங்கிலியால் ஆன ஓரு கொழுப்பு ஆல்ககால் ஆகும். இதனுடைய சுருங்கிய மூலக்கூறு வாய்பாடு C11H24O.இது அண்டெக்கேனால் அல்லது அன்டெக்கேன் –1- ஆல், அன்டெக்கைல் ஆல்ககால், என்டிகேனால் என்றும் அழைக்கப்படுகிறது. நிறமற்ற இத்திரவம் நீரில் கரையாது. இதனுடைய உருகுநிலை 19 பாகை செல்சியசு மற்றும் இதனுடைய கொதிநிலை 243 பாகை செல்சியசு ஆகும்.

1-அன்டெக்கேனால்[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அன்டெக்கேன்-1-ஆல்
வேறு பெயர்கள்
அன்டெக்கேனால், 1-அன்டெக்கேனால், அன்டெக்கைல் ஆல்ககால், 1-என்டெக்கேனால்
இனங்காட்டிகள்
112-42-5 Y
ChEMBL ChEMBL444525 N
ChemSpider 7892 N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8184
UNII 06MJ0P28T3 N
பண்புகள்
C11H24O
வாய்ப்பாட்டு எடை 172.31 g/mol
தோற்றம் நிறமற்ற திரவம்
அடர்த்தி 0.8298 g/mL
உருகுநிலை
கொதிநிலை 243 °C (469 °F; 516 K)
கரையாது
எத்தனால் and இருஈத்தைல் ஈதர்-இல் கரைதிறன் கரையும்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை >82 °C
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இது: Y/N?)
Infobox references

தயாரிப்பும் பயன்களும்

எலுமிச்சை பூவின் வாசமும் கொழுப்புச் சுவையும் கொண்ட இச்சேர்மம் உணவுப்பொருள்களில் சுவையூட்டும் பொருட்களாகவும் பயன்படுகிறது. பொதுவாக அன்டெக்கேனால் இதனையொத்த அன்டெக்கேனால்டிகைடை ஒடுக்கம் செய்து தயாரிக்கப்படுகிறது.

இயற்கையில் அன்டெக்கேனால்

ஆப்பிள், வாழைப்பழம், வெண்ணெய், முட்டை மற்றும் சமைத்த பன்றி இறைச்சி போன்ற பல உணவுப்பொருட்களில் அன்டெக்கேனால் காணப்படுகிறது.

தீங்குகள்

தோல், கண்கள், மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளில் அன்டெக்கேனால் எரிச்சலை ஏற்படுத்துகிறது. தீங்கு விளைவிப்பதில் அன்டெக்கேனால் எத்தனாலுக்கு நிகராக விளங்குகிறது.

மேற்கோள்கள்

  1. CRC Handbook of Chemistry and Physics, 60th Edition, 1980

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.