நா. பார்த்தசாரதி

நா.பார்த்தசாரதி (டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்.[1]

பிறப்பு

தமிழ்நாடு, விருதுநகர் மாவட்டம் , சிவகாசி வட்டத்தில் உள்ள நரிக்குடி என்னும் சிற்றூரில் 1932 திசம்பர் 18 ஆம் நாள் பிறந்தார். முறையாகத் தமிழ் கற்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து படித்து பண்டிதர் பட்டம் பெற்றார். 1977 - 1979 ஆம் ஆண்டுகளில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் சேர்ந்து தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் முனைவர் தி. முத்துகண்ணப்பரை வழிகாட்டியாகக்கொண்டு பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும் என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்தார். 1987ஆம் ஆண்டில் ஆய்வேட்டை சமர்பித்தார். ஆனால் அப்பட்டத்தை வாங்காமலேயே மறைந்துவிட்டார்.[1]

பணி

பாரதியார் ஆசிரியராய் இருந்த மதுரை சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றினார். கல்கி இதழின் ஆசிரியர் சதாசிவத்தின் அழைப்பின் பேரில் அதன் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். .

1965 இல் கல்கி இதழில் இருந்து விலகி சொந்தமாக தீபம் என்ற மாத இதழை ஆரம்பித்தார். ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் இருந்து 23 ஆண்டுகள் அதை நடத்தினார்.

1979ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தினமணிக் கதிர் வார இதழுக்கும் கலைக்கதிர் இதழுக்கும் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினார்.[1]

வெளிநாட்டுப் பயணம்

நா.பா. ரஷ்யா, இங்கிலாந்து, போலந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, எகிப்து, குவைத் போன்ற பல நாடுகளுக்குச் சென்று வந்தார்.

விருதுகள்

  • சமுதாய வீதி என்னும் நெடுங்கதைக்காக சாகித்ய அகாதமி பரிசு
  • துளசி மாடம் என்னும் நெடுங்கதைக்காக ராஜா சர் அண்ணாமலை பரிசு
  • தமிழ்நாடு பரிசு
  • கம்பராமாயணத் தத்துவக் கடல்

அரசியல்

இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த காமராஜருக்கும் அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது இதனால் காங்கிரசு இரண்டாக உடைந்தது. பழம் தலைவர்கள் காமராஜர் தலைமையில் சிண்டிகேட் என்னும் ஸ்பாதன காங்கிரஸ் கட்சியில் இயங்கினர். நா. பார்த்தசாரதி அக்கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார். அக்கட்சியை ஆதரித்து பொதுக்கூட்டங்களில் சொற்பொழிவாற்றினார்.[1] அப்பொழுது, தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம் என்னும் சிற்றூரில் காவல்துறை சார்பு ஆய்வாளரால் தாக்கப்பட்டார். அந்நிகழ்வு அக்கால சட்டமன்றத்தில் விவாதப் பொருளாக மாறியது.

மறைவு

இதய நோய்க்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நா.பா. 1987 திசம்பர் 13ஆம் நாள் மரணமடைந்தார்.

நா.பார்த்தசாரதியின் படைப்புகள்

நெடுங்கதைகள்

  1. குறிஞ்சி மலர்
  2. பொன் விலங்கு
  3. நிசப்த சங்கீதம்
  4. கபாடபுரம்
  5. சாயங்கால மேகங்கள்
  6. மணிபல்லவம்
  7. ஆத்மாவின் ராகங்கள்
  8. ராணி மங்கம்மாள்
  9. சமுதாய வீதி
  10. துளசி மாடம்
  11. பாண்டிமாதேவி
  12. நித்திலவல்லி
  13. வஞ்சிமாநகரம்
  14. சத்தியவெள்ளம்
  15. வெற்றி முழக்கம்
  16. சுந்தரக்கனவுகள்
  17. நெஞ்சக்கனல்
  18. பிறந்த மண்
  19. நெற்றிக் கண்
  20. வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
  21. நிசப்த சங்கீதம்
  22. அநுக்கிரகா
  23. சுலபா
  24. முள்வேலிகள்
  25. புதுமுகம்
  26. மூலக்கனல்
  27. மலைச் சிகரம்
  28. பொய் முகங்கள்
  29. பூக்களை யாரும் மிதிக்கக் கூடாது
  30. கற்சுவர்கள்
  31. நினைவின் நிழல்கள்
  32. மூவரை வென்றான்
  33. நீல நயனங்கள்
  34. மனக் கண்
  35. கோபுர தீபம்
  36. அனிச்ச மலர்
  37. பட்டுப் பூச்சி
  38. மகாத்மாவைத் தேடி

சிறுகதைகள்

  1. நா.பா.வின் சிறுகதைகள்
  2. தமிழ் இலக்கியக் கதைகள்

கவிதைகள்

  1. மணிவண்ணன் கவிதைகள்

கட்டுரைகள்

  1. மொழியின் வழியே

தலையங்கங்கள்

  1. மணிவண்ணன் தலையங்கங்கள் (தொகுத்தவர்: கமலம் சங்கர்)

கேள்வி பதில்கள்

  1. மணிவண்ணன் பதில்கள் (தொகுத்தவர்: கமலம் சங்கர்)

பயணக்கட்டுரைகள்

  1. புதுஉலகம் கண்டேன்
  2. ஏழுநாடுகளில் எட்டு வாரங்கள்

நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

  1.  மணிபல்லவம் (சரித்திர நாவல்)-1
  2.  மணிபல்லவம் (சரித்திர நாவல்)-2
  3.  மணிபல்லவம் (சரித்திர நாவல்)-3
  4.  மணிபல்லவம் (சரித்திர நாவல்)-4
  5.  மணிபல்லவம் (சரித்திர நாவல்)-5
  6.  ஆத்மாவின் ராகங்கள்
  7.  Aatmana Aalap-(GUJARATHI)
  8.  JINDAGINA RANGA ANEKA-(GUJARATHI)
  9.  குறிஞ்சி மலர்
  10.  மகாபாரதம் அறத்தின் குரல்
  11.  மூலக்கனல்
  12.  முள்வேலிகள் (சிறுநாவல்)
  13.  நா.பார்த்தசாரதி-சிறுகதைகள்-1
  14.  நா.பார்த்தசாரதி-சிறுகதைகள்-2
  15.  நெஞ்சக்கனல்
  16.  நெற்றிக்கண்
  17.  நிசப்த சங்கீதம்
  18.  நித்திலவல்லி
  19.  பாண்டிமாதேவி (சரித்திர நாவல்)
  20.  பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்
  21.  பொன்விலங்கு
  22.  சத்திய வெள்ளம்
  23.  வஞ்சிமா நகரம் (சரித்திர நாவல்)
  24.  மூவரை வென்றான்
  25.  மொழியின் வழியே
  26.  பிறந்த மண்
  27.  பொய்முகங்கள்
  28.  புதிய பார்வை
  29.  புறநானூற்றுச் சிறுகதைகள்
  30.  இராணி மங்கம்மாள் (சரித்திர நாவல்)
  31.  சமுதாய வீதி
  32.  சாயங்கால மேகங்கள்
  33.  சிந்தனை மேடை
  34.  சுலபா
  35.  SWAPN-SURAKHI - GUJARATI (KURIJJIMALAR)
  36.  தமிழ் இலக்கியக் கதைகள்
  37.  திறனாய்வுச் செல்வம்
  38.  THITHALI
  39.  துளசிமாடம்
  40.  TULSI CHAURA
  41.  வெற்றி முழக்கம்
  42.  YEH GALI BIKAU NAHIN
  43.  அனிச்ச மலர்
  44.  அநுக்கிரகா
  45.  பூமியின் புன்னகை
  46.  புத்த ஞாயிறு
  47.  சிந்தனைவளம்
  48.  தீபம்
  49.  கலித்தொகை பரிபாடல் காட்சிகள்
  50.  கபாடபுரம்
  51.  கற்சுவர்கள்[2]

சான்றடைவு

  1. திருப்பூர் கிருஷ்ணன், நா.பா. என்றொரு தீபம்.., தினமணி தமிழ்மணி, 2011 மார்ச் 6
  2. "திரு.நா.பார்த்தசாரதிஅவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்". தமிழ் இணையப் பல்கலைக்கழகம். பார்த்த நாள் 15 நவம்பர் 2013.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.