ஷசாம்! (திரைப்படம்)
ஷசாம்! (Shazam!) என்பது 2019ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு சூப்பர் ஹீரோஸ் திரைப்படமாகும். இந்த திரைப்படம் டீ சி காமிக்சு கதாபாத்திரமான கேப்டன் மார்வெல் என்று அழைக்கப்படும் ஷசாம் என்ற அதிசக்திவாய்ந்த கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சாச்சரி லீவி, மார்க் ஸ்ட்ரோங், ஆஷெர் ஏஞ்சல், ஜேக் டிலான் கிரேஸர், டிஜிமோன் ஹவுன்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை நியூ லைன் சினிமா தயாரிக்க, வார்னர் புரோஸ்.பிக்ஸர் என்ற நிறுவனத்தின் மூலம் ஏப்ரல் 5, 2019ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது.
ஷசாம்! | |
---|---|
[[File:![]() | |
இயக்கம் | டேவிட் எஃப் சான்ட்பெர்க் |
தயாரிப்பு | பீட்டர் சப்ரன் |
மூலக்கதை | டீ சி காமிக்சு |
திரைக்கதை | ஹென்றி கேடன் |
இசை | பெஞ்சமின் வால்ஃபிஷ் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | மேக்ஸிம் அலெக்சாண்ரே |
படத்தொகுப்பு | மைக்கேல் அல்லர் |
கலையகம் |
|
விநியோகம் | வார்னர் புரோஸ். |
வெளியீடு | மார்ச்சு 15, 2019 (தொராண்டோ) ஏப்ரல் 5, 2019 (அமெரிக்கா) |
ஓட்டம் | 132 நிமிடங்கள்[2] |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $80–100 மில்லியன்[3] |
மொத்த வருவாய் | $347.2 மில்லியன்[4] |
சிறுவயதில் பெற்றோரால் கைவிடப்படும் பில்லி, தந்தையால் வெறுக்கப்படும் வில்லன் இருவருக்கும் இடையே நடக்கும் கதை. அதில் மாந்திரீகம், பாசம், நகைச்சுவை சண்டை என அனைத்தும் கலந்த கலவையாக ஷசாமை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் டேவிட் எஃப் சான்ட்பெர்க். இவ் திரைப்படம் வெளியாக உலகளவிய ரீதியாக $347 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்தது. 2019ஆம் ஆண்டு வெளியான அதிக வசூல் செய்த திரைப்படத்தில் இந்த திரைப்படத்திற்கு 6வது இடம் கிடைத்தது.
கதைச் சுருக்கம்
மாந்திரீக உலகத்தின் கடைசி மந்திரவாதி 7 தீய சக்திகளை அடக்கி அதனை காத்து வருகிறார். தனது வயது முதிர்ச்சியின் காரணமாக அந்த தீய சக்திகளை பாதுகாக்க நல்ல எண்ணமுள்ள சாம்பியன் ஒருவனை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். பலரை சோதனைக்கு உட்படுத்தியும் சோதனையில் எவரும் தேர்ந்து எடுக்க முடியவில்லை. முதியவரான ஷாசாமின் சக்தியை அபகரிக்க துடிக்கும் ஒரு தீயசக்தி. ஒரு கட்டத்தில் தீய சக்திகளை கட்டுப்படுத்த வேறு வழியில்லாமல் பரீட்சை ஏதுமின்றி பில்லி என்ற சிறுவன் ஒருவனை சாம்பியனாக தேர்ந்தெடுக்கிறார். அவர் ஷசாம் என்று அழைக்கப்படுகிறார். கடைசியில், ஷசாமுக்கும், தீய சக்திகளுக்கும் இடையே நடக்கும் சண்டை என்னவானது என்பதே ஷசாமின் கதை.
நடிகர்கள்
- ஆஷெர் ஏஞ்சல் - வில்லியம் "பில்லி" பேட்சன் / ஷசாம்
- சாச்சரி லீவி - வில்லியம் "பில்லி" பேட்சன் / ஷசாம்
- மார்க் ஸ்ட்ரோங் - டாக்டர் சிவனா
- ஜேக் டிலான் கிரேஸர் - பிரடெரிக் "ஃப்ரெடி" ஃப்ரீமேன்
- டிஜிமோன் ஹவுன்சு - ஷசாம்
- ஃபெய்தே ஹெர்மன் - டெய்லா டட்லி
- கிரேஸ் ஃபுல்டன் - மேரி ப்ரோம்ஃபீல்டு
- இயன் சென் - யூஜின் சோய்
மேற்கோள்கள்
- "Film - Mad Ghost Productions". Mad Ghost Productions (சூன் 11, 2018). மூல முகவரியிலிருந்து சூன் 14, 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் சூன் 12, 2018.
- "Shazam! (12A)". British Board of Film Classification. பார்த்த நாள் மார்ச்சு 25, 2019.
- Fuster, Jeremy (ஏப்ரல் 7, 2019). "‘Shazam!’ Surges to $53 Million Box Office Opening". பார்த்த நாள் ஏப்ரல் 20, 2019.
- "Shazam! (2019)". பாக்சு ஆபிசு மோசோ. பார்த்த நாள் மே 3, 2019.