பேட்மேன் எதிர் சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ்
வௌவால் மனிதனும் மாமனிதனும்: நீதியின் விடியல் (ஆங்கிலம்: Batman v Superman: Dawn of Justice) 2016 இல் திரைக்கு வரவிருக்கும் அமெரிக்க மீநாயகத்திரைப்படமாகும். இது இடீசி சித்திரக்கதை கதாபத்திரங்களான பேட்மேன் மற்றும் சூப்பர்மேன் ஆகியோரை மையமாகக் கொண்டுள்ளதுடன் இடீசி பகிர்பிரபஞ்சத் திரைப்படங்களின் வரிசையில் இரண்டாவதாக வெளிவருகின்றது. சாக்கு சினைடரின் (Zack Snyder) இயக்கத்தில் கிறிசு இரேறியோ (Chris Terrio) மற்றும் இடேவிட்டு எசு. கோயரின் (David S. Goyer) திரைக்கதையில் வெளியான இப்படத்தில் பென் அஃப்ளெக்கு, கென்றி கவில், ஏமி அடம்சு, செசி ஐசின்பேக், இடயன் லேன், இலாரன்சு ஃபிசுபேண், செரேமி அயேண்சு, காலி கன்ரர், கல் கடட்டு ஆகியோர் நடித்துள்ளனர். பேட்மேன் மற்றும் சூப்பர்மேன் கதாப்பாத்திரங்கள் ஒன்றாக திரையில் தோன்றும் (அசைவூட்டத் திரைப்படம் அல்லாத) முதல் திரைப்படம் இதுவாகும்.
வௌவால் மனிதனும் மாமனிதனும்:நீதியின் விடியல் Batman v Superman: Dawn of Justice | |
---|---|
![]() திரைப்படத்தின் அதிகாரப்பூர்வச் சின்னம் | |
இயக்கம் | சாக்கு சினைடர் |
தயாரிப்பு | சாள்சு றோவன் இடிபரா சினைடர் |
மூலக்கதை | இடீசி சித்திரக்கதையில் தோன்றும் கதாபாத்திரங்கள் |
திரைக்கதை | கிறிசு இரேறியோ டேவிட் கோயர் |
இசை | கான்சு சிம்மர் |
நடிப்பு | பென் அஃப்ளெக்கு கென்றி கவில் ஏமி அடம்சு செசி ஐசின்பேக் இடயன் லேன் இலாரன்சு ஃபிசுபேண் செரேமி அயேண்சு காலி கன்ரர் கல் கடட்டு |
ஒளிப்பதிவு | இலாரி ஃபாங்கு |
படத்தொகுப்பு | இடேவிட்டு பிரெனர் |
கலையகம் | இடீசீ மகிழ்கலையகம், அட்லசு மகிழ்கலையகம், இரற்பெக்கு மகிழ்கலையகம், குறூவல் அன்டு அணியூசுவல் திரைக்கலையகம் |
விநியோகம் | வார்னர் சகோதரர்கள் |
வெளியீடு | மார்ச்சு 25, 2016 (ஐக்கிய அமெரிக்கா) |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $200+ மில்லியன்கள் |
2013இல் மாமனிதன்: இரும்பு நெஞ்சம் (ஆங்கிலம்: Man of Steel) திரைப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து சான் இடியாகோ சித்திரக்கதை மாநாட்டில் (ஆங்கிலம்: San Diego Comic Con) இத்திரைப்படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டது. சூன் 2013இல் சினைடர் மற்றும் கோயரின் பங்களிப்புடன், அக்தோபர் 2013இல் தயாரிப்புப் பணிகள் ஆரம்பமாயின. மே 2014இல் தொடங்கப்பட்ட படப்பிடிப்புகள் டெற்றொயிற்று, மிச்சிகனிலும் மேலதிகமாக சிகாகோ மற்றும் இல்லினோயியில் நடைபெற்று இடிசம்பர் 2014இல் முடிவடைந்தன.
இத்திரைப்படம் மார்ச் 25, 2016இல் ஐக்கிய அமெரிக்காவின் இருபரிமாண(2D), முப்பரிமாண (3D) மற்றும் ஐமேக்சு திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர்கள்
- பென் அஃப்ளெக்கு (Ben Affleck) - புறூசு வெய்ன்/ வௌவால் மனிதன் (Bruce Wayne/ Batman):
பணக்கார தொழிலதிபரும் இரகசியமாக வௌவால் மனிதன் எனும் பெயரில் கோதம் நகரில் குற்றங்களை களைவதுமான கதாபாத்திரம்.
- கென்றி கவில் (Henry Cavill) - கிளார்க் கென்ட்/ மாமனிதன் (Clark Kent/ Superman):
தனது பெற்றோரால் கிரிப்புரன் எனும் கிரகத்தின் அழிவினின்று தப்பிக்கப் பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டவரும், இந்நாளில் "டெய்லி பிளானெட்" (Daily Planet) நாளிதளின் நிருபராகவும் தனது மீஆற்றலால் "மெற்றோபலிசு" (Metropolis) நகரின் பாதுகாவலனாகவுமுள்ள கதாபாத்திரம்.
- ஏமி அடம்சு (Amy Adams) - லோயிசு லேன் (Lois Lane):
கிளார்க் கென்டின் தோழியான மற்றுமொரு "டெய்லி பிளானெட்" நிருபர்.
- செசி ஐசின்பேக் (Jesse Eisenberg) - இலெக்சு லூதோர் (Lex Luthor)
அறிவாற்றல், செல்வம், பதவி யாவும் கொண்டிருப்பதால் பூவுலகில் சூப்பர்மேனின் வலிமைக்கு சவாலாக விளங்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய மனிதர்களில் ஒருவராகவுள்ளார்.
- இடயன் லேன் (Diane Lane) - மார்த்தா கென்ற் (Martha Kent):
கிளார்க் கென்டின் வளர்ப்புத் தாய்.
- இலாரன்சு ஃபிசுபேண் (Laurence Fishburne) - பெரி வைற் (Perry White):
"டெய்லி பிளானெட்" பத்திரிகையின் ஆசிரியர்.
- செரேமி அயேண்சு (Jeremy Irons) - ஆல்பிரட் பெனிவேத் (Alfred Pennyworth):
ப்றூசு வெய்னின் நம்பிக்கைக்குரிய உதவியாளரும், நண்பரும் வழிகாட்டியுமாவார்.
- காலி கன்ரர் (Holly Hunter)
- கல் கடட் (Gal Gadot) - டயானா ப்றின்சு/ வொண்டர் வுமன் (Diana Prince/ Wonder Woman):
அமேசானிய இளவரசியும் சியுசு (Zeus) தெய்வத்தின் மகளும், சிறுதெய்வமும் ஆவார்.
இரோ ஒகமோட்டோ (Tao Okamoto) லெக்ஸ் லூதோரின் உதவியாளரான மேசி கிறேவ்சு-ஆக நடிக்கிறார். இறே ஃபிசெர் (Ray Fisher) மற்றும் சேசன் மொமோவா (Jason Momoa) முறையே விக்ரெர் சுரோன்/சைபோக் (Victor Stone/ Cyborg) மற்றும் ஆதர் கறி/ அகுவாமேன்-ஆக (Arthur Curry/ Aquaman) சிறுபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேன் ஒஃப் சுடீலில் தளபதி கேரி ஃபாரிசு-ஆக (Carrie Farris) நடித்த கிறிசுடீனா றென் (Chrintina Wren), இதிலும் அப்பாத்திரத்தைத் தொடர்கிறார். சுகூற் மெக்னெய்றி (Scoot McNairy), கலன் மல்வீ (Callan Mulvey), சீனா மலோன் (Jena Malone) ஆகியோர் இன்னமும் பெயர் வெளிவிடப்படாத கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். அதிகார சபை அங்கத்தவரான பற்றிக் இலீகி-யும் (Patrick Leahy) ஒரு பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
தயாரிப்பு
வளர்ச்சி
"...மேன் ஒஃப் சுடீல் திரைப்படத்தின் வேலைகள் முடிவடைந்தபிறகு நாங்கள் அடுத்த படம் பற்றிப் பேசுகையில், நான் சூப்பர்மேன் பேட்மேனை எதிர்கொள்வது போன்ற கதையமைப்பு நன்றாக இருக்குமென்று கூறினேன்...நீங்கள் ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் இருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் "சாடு"இன் (Zod) வலிமைக்கு நிகரான ஆனால் பூமியைச்சேர்ந்த ஒருவர் சூப்பர்மேனை எதிர்கொள்ளவேண்டுமாயின், யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?...ஆனால் பேட்மேனைக் கொண்டுவருவதற்காக மேன் ஒஃப் ஸ்டீலை நான் நாசப்படுத்தவில்லை. எனினும் யோசித்துப் பார்க்கையில், சூப்பர்மேனை எதிர்க்க பேட்மேனைத் திரைக்குக் கொண்டுவருவது இன்றியமையாததாகிறது." —பேட்மேன் இப்படத்தில் தோன்றுவது பற்றி சாக்கு சினைடர் கூறியது |
வார்னர் சகோதர்கள் நிறுவனத்தின் கண்காணிப்பின் கீழ் ஜூன் 2013இல் இயக்குனர் சாக்கு சினைடரும் திரைக்கதை எழுத்தாளர் டேவிட் எசு. கோயரும் மேன் ஒஃப் சுடீலின் அடுத்த பாகத்தை உருவாக்கும் பணிக்குத் திரும்புவதாக அறிவிக்கப்பட்டதுடன் திரைப்படமானது 2014இல் வெளிவருவதாகக் கருதப்பட்டது. சூலை 2013இல் சேன் டியாகோ காமிக் கான்-இல் படம் 2015இல் வருவதாகவும், பேட்மேன் மற்றும் சூப்பர்மேனின் முதல் திரைச்சந்திப்பாக இது இருக்குமெனவும் சினைடர் உறுதிப்படுத்தினார். கிறிசுதோபர் நோலன் நிர்வாகத் தயாரிப்பாளராக இருப்பதுடன், சினைடர் மற்றும் கோயர் இருவரும் சேர்ந்து படத்தின் கதையை எழுதுகின்றனர்.