சூப்பர் மேன் (2013 திரைப்படம்)
சூப்பர் மேன் (மேன் ஒப் ஸ்டீல்) இது ஒரு 2013ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். சூப்பர் மேன் திரைப்படங்களின் வரிசையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் மேன் (மேன் ஆஃப் ஸ்டீல்) எனும் பெயரில் இப்படம் வெளியானது.. உலகம் முழுவதும் 30000 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியானது.
சூப்பர் மேன் (மேன் ஆஃப் ஸ்டீல்) | |
---|---|
![]() திற்றிகால் ரிலீஸ் போஸ்டர் | |
இயக்கம் | ஸாக் ஸ்னைடர் |
தயாரிப்பு | கிறிஸ்டோபர் நோலன் சார்லஸ் ரோவேன் எம்மா தாமஸ் டெபோரா ஸ்னைடர் |
திரைக்கதை | டேவிட் எஸ்.கொயர் |
இசை | ஹான்ஸ் சிம்மர் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | அமீர் மோக்ரி |
ஓட்டம் | 143 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா, ஐக்கிய ராஜ்யம் |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $225 மில்லியன் |
மொத்த வருவாய் | $662,845,518 |
இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜேக் ஸ்னைடர் அவார். இத்திரைப்படம் 1276 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைபடத்தின் முப்பரிமாணப் பதிப்பு 2013, ஜூன் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 180 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. இயக்குனர் இராம.நாராயணனி, ஸ்ரீ தேனாண்டால் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தினை வெளிவிட்டது.
கதை சுருக்கம்
உலகத்தைப் போலவே கிரிப்டான் கிரகத்திலும் மனிதர்கள் வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் மனிதர்களை விட புத்திசாலிகள். நவீன தொழில்நுட்பங்கள் மூலம் அவர்கள் தங்களை சுற்றியுள்ள கிரகங்களை அடிமைப்படுத்துகிறார்கள். செயற்கையாக இனப்பெருக்கம் செய்பவர்களாக இருக்கிறார்கள். முதன் முறையாக அந்த கிரகத்தின் முக்கிய பதவியில் இருப்பவர் இயற்கையாக ஒரு வாரிசை உருவாக்குகிறார்.
அந்த கிரகம் அழியத் தொடங்கும்போது தன் குழந்தையை, பறக்கும் கப்பலில் வைத்து பூமிக்கு அனுப்புகிறார். இங்கு வரும் குழந்தை ஒரு விவசாயி வீட்டில் வளர்கிறது. அபூர்வ சக்திகள் நிறைந்த அக் குழந்தையை தன் சக்தியை வெளிப்படுத்தாமலேயே வளர்க்கிறார். அபார சக்தி மிக்கவன், வேற்று கிரகத்தைச் சேர்ந்தவன் என்று தெரிந்தால் உலகம் அவனை ஏற்றுக் கொள்ளாது என்று நினைக்கிறார். கிரிப்டான் கிரகத் தளபதி, அந்த கிரக மக்களை வேறுகிரகத்தில் குடியமர்த்த திட்டமிட்டு சூப்பர்மேனைத் தேடி பூமிக்கு வருகிறார். கிளார்க், எப்படி அந்த வில்லனை வென்று சூப்பர் மேனாக உருவாகிறான் என்பதுதான் மீதி திரைப்படம்.
நடிகர்கள்
- ஹென்றி கவில்
- ஏமி ஆடம்சு
- மைக்கேல் ஷானோன்
- டயான் லேன்
- கெவின் காஸ்ட்னர்
- லாரன்ஸ் பிஷ்பர்ன்
- கிறிஸ்டோபர் மேலோனி
- ரசல் குரோவ்
நடிப்பு
ஹென்றி கவில் கதாநாயகனாக நடித்துள்ளார். அமெரிக்க நடிகையும், பாடகியுமான ஏமி ஆடம்சு கதாநாயகியாக நடித்துள்ளார்.
வெளியீடு
இத்திரைபடத்தின் 3டி பதிப்பு 2013,ஜூன் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 180 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. இயக்குனர் இராம.நாராயணனி, ஸ்ரீ தேனாண்டால் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தினை வெளிவிட்டது.
தயாரிப்பு
இத்திரைப்படம் 1276 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Man of Steel
- அழுகிய தக்காளிகளில் Man of Steel
- பாக்சு ஆபிசு மோசோவில் Man of Steel