சூசைட் ஸ்க்வாட் (திரைப்படம்)

சூசைடு சுகுவாடு (ஆங்கிலம்: Suicide Squad, தமிழ்: தற்கொலைப்படை) 2016இல் வெளிவந்த அமெரிக்க சூப்பர்கீரோத் திரைப்படமாகும். இது அதே பெயரினால் வழங்கப்படும் இடீசீ (DC) சித்திரக்கதைக் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டது. இடேவிட்டு அயெரினால் எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில் வில் சிமித் (Will Smith), சரெட் இலெற்றோ (Jared Leto), மாகட்டு உறொபி (Margot Robbie), சோயல் கினமன் (Joel Kinnaman), சை கோற்னீ (Jai Courtney), காறா இடெலிவீன் (Cara Delevingne), வயோலா இடேவிசு (Viola Davis) ஆகியோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்புகள் ஏப்பிரல் 13, 2015இல் ஒன்ராறியோவின் (Ontario) தலைநகரான உரொறன்ரோவில் (Toronto) ஆரம்பமாயின.

சூசைடு சுகுவாடு
தற்கொலைப்படை
இயக்கம்இடேவிட்டு அயெர்
தயாரிப்புஇறிச்சாடு சக்கிள்
சாள்சு இறவன்
கொலின் வில்சன்
மூலக்கதைசோன் ஒசுரிறாண்டரின் (John Ostrander) "சூசைடு சுஃகுவாடு"
நடிப்புவில் சிமித்
சரெட் இலெற்றோ
மாகட்டு உறொபி
சோயல் கினமன்
சை கோற்னீ
காறா இடெலிவீன்
வயோலா இடேவிசு
ஒளிப்பதிவுஉறோமன் வாசியனோ (Roman Vasyanov)
கலையகம்இடீசீ மகிழ்கலையகம்
அற்லசு மகிழ்கலையகம்
விநியோகம்வோணர் சகோதரர் படங்கள்
வெளியீடுஆகத்து 5, 2016 (2016-08-05)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

இத்திரைப்படத்தை ஆகட்டு 5, 2016இல் வெளியானது.

நடிகர்கள்

  • வில் சிமித் - பிளாய்டு இலாவ்ரன்/ இடெட்சொற்று (Floyd Lawton/ Deadshot)
  • சரெட் இலெற்றோ - சோக்கர் (The Joker)
  • மாகட்டு உறொபி - காளீன் குயின்சல்/ காளீ குயீன் (Harleen Quinzel/ Harley Quinn)
  • சோயல் கினமன் - இறிக்கு பிளாக்கு (Rick Flag)
  • சை கோற்னீ - சியோர்சு "இடிகர்" கார்க்னசு/ கேப்டன் பூமராங்கு (George "Digger" Harkness/ Captain Boomarang)
  • காறா இடெலிவீன் - சூன் மூன்/ என்சான்ரசு (Joon Moone/ Enchantress)
  • வயோலா இடேவிசு - அமண்டா வோலர் (Amanda Waller)
  • அடிவாலே அகினோயே-அக்பாசி (Adewale Akinnuoye-Agbaje) - வெய்லன் சோன்சு/ கில்லர் கிராக்கு (Waylon Jones/ Killer Croc)
  • கேரன் புகுகாரா (Karen Fukuhara) - தட்சு இயமசீரோ/ கரானா (Tatsu Yamashiro/ Katana)
  • அடம் பீச்சு (Adam Beach) - கிறித்தோபர் வெயிசு/ சிலிப்நொட் (Christopher Weiss/ Slipknot)
  • சே கெணாந்தசு (Jay Hernandez) - சேரோ சன்ரானா/ எல் டயாப்லோ (Chato Santana/ El Diablo)
  • இசுகொற்று ஈசுற்றுவூட்டு (Scott Eastwood)
  • சிம் பரக்கு (Jim Parrack)
  • ஈசாக்கு "ஐக்கு" பேரின்கோல்ற்சு (Isaac "Ike" Barinholtz"
  • கொமன் (Common)
  • அலெக்சு மெரசு (Alex Meraz)
  • இடேவிட்டு காபர் (David Harbour)
  • இறேமண்டு ஒலுபவாலே (Raymond Olubawale)

உருவாக்கம்

பெப்ரவரி 2009இல் சசுரின் மாக்சுவின் (Justin Marks) எழுத்து மற்றும் இடான் இலின் (Dan Lin), கொலின் வில்சன் (Colin Wilson), சாள்சு இறவன் (Charles Roven) ஆகியோரது தயாரிப்பில் வோணர் சகோதரர்கள் நிறுவனம் சூசைடு சுகுவாடு திரைப்படத்தின் ஆக்கப் பணிகளைத் தொடங்கியது. தொடர்ந்து செப்டம்பர் 2014இல் இடேவிட்டு அயெரிடம் படத்தை இயக்கம் பணி கையளிக்கப்பட்டது. பல்வேறு சூசைடு சுகுவாடு அங்கத்தவர்கள் இப்படத்தில் தோன்றுவதால், அக்டோபர் 2014இல் அயெர், எம்பயர் ஒன்லைன்-உடனான பெட்டியில் "அது பல கதாபாத்திரங்கள் நிறைந்த படம்" என்று குறிப்பிட்டிருந்தார். இட்டீசியின் மிகையான கதாபாத்திரங்களின் எண்ணிக்கையை இவர் இங்கு மேற்கோள் கட்டியிருந்தார். மார்ச்சு 28, 2015இல், சூசைடு சுகுவாடு அங்கத்தவர்களின் புகலிடமான "ஆக்கம் அசைலம்" (Arkham Asylum) இப்படத்தில் தோன்றும் என அயர் கூறியிருந்தார்.

நடிப்புத் தெரிவுகள்

அக்டோபர் 2014இல் வோணர் சகோதரர்கள் நிறுவனம் இறயன் கோசுலிங்கு (Ryan Gosling), உரொம் காடி (Tom Hardy), மாகொட்டு உறொபி மற்றும் வில் சிமித்துக்கு இதில் நடிப்பதற்கான வாய்ப்பை அளித்திருந்தது.உடனடியாகவே உரொம் காடியும் வில் சிமித்தும் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதாக அறிவிக்கப்பட்டதுட்டன், மாகொட்டு உறொபியும் இதற்காக இடிரீம்வேக்சிடமிருந்து கோசுற்று இன் த செல் (DreamWork 's Ghost in the Shell) படத்தின் நடிப்பிலிருந்து விலகினார். நவம்பரில் த இறப்-ஆனது (TheWrap) இறயன் கோசுலிங்குக்குப் பதிலாக, சரெட்டு இலெற்றோவை சோக்கராக நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாகக் கூறியது. நவம்பர் இறுதியில் மாகட்டு உறொபி காளீன் குயின்சலாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 2014இல் வில் சிமித், செரட்டு இலெற்றொ, மாகட்டு உறோபி, சை கோற்ணி, காரா இடெலிவீன் ஆகியோர் முறையே தங்கள் கைச்சாத்திட்ட இடெட்சொற்று, இறிக்கு பிளாக்கு, சோக்கர், காளீ குயீன், கேப்டன் பூமராங்கு, என்சாண்டிரசு ஆகிய பாத்திரங்களில் நடிப்பதாக வோணர் சகோதரர்கள் நிறுவனம் உறுதிப்படுத்தியது. அத்துடன் அமண்டா வோலர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக வயோலா இடேவிசு, ஒக்ரேவியா இசுபென்சர் (Octavia Spencer) மற்றும் ஓப்றா வின்ப்ரே-ஐக் (Oprah Winfrey) கவனத்தில் கொண்டது. நடிகர் தெரிவுகளைத் தொடர்ந்து சித்திரக்கதை எழுத்தாளர் சோன் ஒசுரிராண்டரிடம் (John Ostrander) (சூசைடு சுகுவாடு குழுவினை நவீனமயப்படுத்திய எழுத்தாளர்) காமிக் புக் ரிசோர்சசு (சித்திரக்கதை வளங்கள்) இணையத்தளம் நடாத்திய பேட்டியில் "நடிப்புத்தெரிவுகள் பற்றி எனக்குப் பிரச்சினை ஏதும் இல்லை. என்னைக் கவரும் விடயம் எதுவெனில், மிகச்சிறந்த நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டமையே" என்று கூறினார்.

சனவரி 2015இல் நடைபெற்ற ஒரு பேட்டியின் பொது, இடேவிசு "அமண்டா வோலர் கதாபாத்திரம் எனைப் பிரமிக்கவைக்கிறது" என்று கூறி, அமண்டா வோலராக நடிக்க விருப்புத் தெரிவித்தார். இதற்கிடையே, இரெவனன்று திரைப்படத்தில் நடிப்பதற்காக உரொம் காடி தனது தனக்களிக்கப்பட்ட இறிக்கு பிளாக்கு கதாபாத்திரத்தை விட்டுச்சென்றார். பிறகு சேக்கு சிலென்காலுக்கு இப்பத்திரம் அளிக்கப்பட்டபோதிலும் அவரால்athu நிராகரிக்கப்பட்டது. 87வது அகாதமி விருதுகளில் தான் அமண்டா வோலராக நடிப்பத இடேவிசு அறிவித்தார். மார்ச்சு 2015இல் குத்துச்சண்டை வீரர் இறேமண்டு ஒலுபவாலே ஒரு அறிவிக்கப்படாத கதாபாத்திரத்துக்காகத் தெரிவு செய்யப்பட்டதுடன், இசுகொற்று ஈசுற்றுவூடு தானும் நடிக்கவுள்ளதாகத் தனது உருவிற்றர் தளத்தில் அறிவித்திருந்தார். மார்ச்சு 31இல் அடவாலே அகினோயே- அக்பாசி, கேரன் புக்காரா ஆகியோர் முறையே கில்லர் கிராக், கரானா ஆகிய கதாபாத்திரங்களுக்கு உறுதிசெய்யப்பட்டனர். ஏப்பிரல் 2015இல் அடம் பீச்சு, ஐக் பேறின்கோல்ற்சு மற்றும் சிம் பெராக் ஆகியோரும் நடிப்புக்குழுவில் இணைந்தனர்.

படப்பிடிப்பு

ஒன்ராறியோவின் தலைநகரான உரொரன்ரோவிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏப்பிரல் நடுப்பகுதி தொடக்கம் 2015 ஆகட்டு இறுதிவரையும் படம்பிடிக்கத் திட்டமிடப்பட்டது. டிசம்பர் 1, 2014இல் "த கொலிவூடு இரிப்போற்றர்" , பெப்ரவரியில் படப்பிடிப்பு முன்னேற்பாடுகளைத் தொடங்குவதற்காகப் பைன்வூடு ரொரன்ரோ சுரூடியோவில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், படப்பிடிப்புகள் ஏப்பிரல் நடுப்பகுதியிலிருந்து செப்டம்பர் வரை நடைபெறுமெனத் தெரிவித்தது.

வெளியீடு

சூசைடு சுகுவாடு திரைப்படத்தை ஆகட்டு 5, 2016இல் வெளியானது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.