விராட்நகர்
விராட்நகர் (Biratnagar) (தேவநாகரி: विराटनगर) நேபாள நாட்டின் நான்கு மாநகராட்சிகளில் ஒன்றாகும்.[2] 40.108 சதுர மைல் (103.88km²) பரப்பளவு கொண்ட விராட்நகர், 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை அடிப்படையில் ஐந்தாம் இடத்திலும், மக்கள்தொகை அடர்த்தியில், காட்மாண்டிற்கு அடுத்து இரண்டாம் இடத்திலும் உள்ளது. விராட்நகரில் அதிக தொழிற்சாலைகள் செயல்படுவதால், இந்நகரை நேபாளத்தின் தொழில் தலைநகரம் எனப்பெயர் பெற்றுள்ளது. நேபாளத்தில் விராட்நகரின் புவியியல் 26°28'60"N 87°16'60"E பாகையில் அமைந்துள்ளது. [3]
விராட்நகர் बिराटनगर महानगरपालिका கோக்ரா (பழைய பெயர்) | |
---|---|
மாநகரம் | |
விராட்நகர் மாநகராட்சி | |
![]() விராட்நகரின் நுழைவு வாயில் | |
அடைபெயர்(கள்): நேபாளத்தின் தொழில் தலைநகரம் | |
![]() மொரங் மாவட்டத்தில் விராட்நகர் மாநகராட்சியின் அமைவிடம் | |
![]() ![]() விராட்நகர் | |
ஆள்கூறுகள்: 26°27′15″N 87°16′47″E | |
நாடு | ![]() |
வளர்ச்சி பிராந்தியம் | கிழக்கு வளர்ச்சி பிராந்தியம் |
மாநிலம் | மாநில எண் 1 |
மண்டலம் | கோசி |
மாவட்டம் | மொரங் |
Wards | 19 |
நாடாளுமன்றத் தொகுதிகள் | 3 |
வீடுகள் & வணிகா வளாகக் கட்டிடங்கள் | 45,131 |
நிறுவிய ஆண்டு | 1914 |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• Body | விராட்நகர் மாநகராட்சி |
• மேயர் | பீம் பிராச்சூலி (நேபாள காங்கிரஸ்) |
• துணை மேயர் | திருமதி கார்க்கி (நேபாள காங்கிரஸ்) |
பரப்பளவு எல்லைகள் : கிழக்கில் சிங்கியாகி கோலா, மேற்கில் கேசலியா கோலா, வடக்கில் புத்திகங்கா மற்றும் தெற்கில் ஜோக்பாணி, இந்தியா | |
• மொத்தம் | 103.88 |
ஏற்றம் | 80 |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2[1] |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | நேபாளி |
• வட்டார வழக்கு மொழிகள் | நேபாளி மொழி, மார்வாரி மொழி, மைதிலி மொழி, லிம்பு மொழி, தாரு மொழி மற்றும் கோச் மொழி |
நேர வலயம் | நேபாள சீர் நேரம் (ஒசநே+5:45) |
அஞ்சல் சுட்டு எண் | 56600, 56613, 56614 |
தொலைபேசி குறியீடு | 021 |
இளஞ்சூட்டு இடைவெப்ப மழைக்காலநிலை | மிதவெப்ப மண்டலம் |
இணையதளம் | biratnagar.gov.np biratnagarmun.gov.np |
Biratnagar was incorporated as District Headquarters by Col. Jit Bahadur Khatri. |
விராட்நகர் 22 மே 2017 அன்று மாநகராட்சியாக நேபாள அரசால் அறிவிக்கப்பட்டது.[4] தன்கிசுனுவாரி மற்றும் ஜெகதா பகுதிகளை விராட்நகருடன் இணைத்த பின்பு இதன் மக்கள் தொகை 2,40,000 ஆக உயர்ந்துள்ளது. [5]
விராட்நகரின் அமைவிடம்
கிழக்கு வளர்ச்சிப் பிராந்தியத்தில், நேபாள மாநில எண் 1ல், கோசி மண்டலத்தில் கிழக்கு தராய் பகுதியின் மொரங் மாவட்டத்தின் தலைமையிடமான விராட்நகர், நேபாளத்த்தின் தேசியத் தலைநகரம் காட்மாண்டுவிலிருந்து கிழக்கே 399 கிலோ மீட்டர் தொலவிலும், இந்தியாவின் பிகார் மாநில வடக்கு எல்லையிலிருந்து வடக்கே 6 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
வரலாறு
விராட்நகரின் பழைய பெயர் கோர்க்கா பஜார் ஆகும். 1914ல் கர்ணல் ஜித் பகதூர் கத்திரி எனும் மாவட்ட ஆளுநர், ரங்கோலில் இருந்த மாவட்டத் தலைமையகத்தை கோர்க்கா பஜாருக்கு மாற்றினார். [6] 1919ல் ராணா வம்சத்தை நிறுவிய நேபாள மன்னர் ஜங் பகதூர் ராணா, 1919ல் கோர்க்கா பஜார் நகரத்தின் பெயரை விராட்நகர் என்று மாற்றி, விராட்நகரில் ஒரு அரண்மனையை கட்டினார். [6]
மகாபாரத காலத்தில் விராட்நகரை தலைநகராகக் கொண்டு விராட மன்னர் ஆண்டார் என அறியப்படுகிறது.
4 மார்ச் 1947 அன்று, ராணா வம்ச நேபாள ஆட்சியாளர்களுக்கு எதிராக, கிரிஜா பிரசாத் கொய்ராலா மற்றும் விஸ்வேஷ்வர் பிரசாத் கொய்ராலா ஆகியோர்களின் தலைமையில் முதன் முதலாக விராட்நகர் சணல் தொழிற்சாலைகளி தொழிலாளர்கள் போராட்டத்தை துவக்கினர். பின்னர் இப்போராட்டாம் நாடு முழுவதும் பரவியதால், ராண வம்ச மன்னர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
மக்கள் தொகை பரம்பல்
2011 நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மொரங் மாவட்டத்தின் தலைமையிடமாக விராட்நகரின் மக்கள் தொகை 2,14,663 ஆகும்.[7] விராட்நகரத்தின் பெரும்பாலான மக்கள் செத்திரி மற்றும் பிராமணர்கள் ஆவார். இந்து சமயம் பெரும்பாலான மக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. பிற சமயங்களாக இசுலாம், கிறித்தவம், சமணம் உள்ளது. விராட்நகரில் நேபாள மொழி மற்றும் மைதிலி மொழி அதிக மக்களால் பேசப்படுகிறது. ஆங்கில மொழியும் பேசப்படுகிறது.
பொருளாதாரம்
கிழக்கு நேபாளத்தில் விராட்நகர் பொருளாதார மையமாக விளங்குகிறது. நேபாளத்தில் சணல் தொழிற்சாலைகள் முதன்முதலாக விராட்நகரில் துவக்கப்பட்டது. தற்போது விராட்நகரில் 6,000 தொழிற்சாலைகள் உள்ளது. மேலும் இந்தியா - நேபாளத்தை இணைக்கும் பாதையில் விராட்நகர் அமைந்துள்ளதால், இந்நகரம் வணிகம் மற்றும் போக்குவரத்தில் முக்கிய மையமாக உள்ளது.
கல்வி
நேபாள கிழக்கு வளர்ச்சி பிராந்தியத்தில், விராட்நகரில் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அதிகம் கொண்டது. இங்குள்ள கல்வி நிலையங்களில் படிப்புகள் ஆங்கில மொழியில் கற்றுத் தரப்படுகிறது. தேசியத் தலைநகரம் காத்மாண்டிற்கு அடுத்து, விராட்நகரில் எண்பது பள்ளிகளும், இருபத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகளும், 21 மருத்துவமனைகளும் உள்ளது.
தட்ப வெப்பம்
பதிவான தட்ப வெப்பத்தின் அடிப்படையில், விராட்நகராத்தின் அதிகபட்ச வெப்பம் 14 ஏப்ரல் 1992 அன்று 43 பாகை செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 1 பாகை செல்சியசாக டிசம்பர், 1970 மற்றும் சனவரி 1971ல் பதிவாகியுள்ளது.[8]விராட்நகர் இளஞ்சூட்டு இடைவெப்ப மழைக்காலநிலை பகுதியில் அமைந்துள்ளது.
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
உயர் சராசரி °C (°F) | 22.7 (72.9) |
26.1 (79) |
30.9 (87.6) |
33.9 (93) |
33.3 (91.9) |
32.9 (91.2) |
32.1 (89.8) |
32.5 (90.5) |
32.1 (89.8) |
31.6 (88.9) |
29.3 (84.7) |
25.4 (77.7) |
30.2 (86.4) |
தினசரி சராசரி °C (°F) | 15.8 (60.4) |
18.6 (65.5) |
23.3 (73.9) |
27.1 (80.8) |
28.3 (82.9) |
29.0 (84.2) |
28.8 (83.8) |
29.2 (84.6) |
28.4 (83.1) |
26.4 (79.5) |
22.3 (72.1) |
18.0 (64.4) |
24.6 (76.3) |
தாழ் சராசரி °C (°F) | 9.0 (48.2) |
11.1 (52) |
15.6 (60.1) |
20.4 (68.7) |
23.3 (73.9) |
25.2 (77.4) |
25.6 (78.1) |
25.8 (78.4) |
24.7 (76.5) |
21.1 (70) |
15.3 (59.5) |
10.5 (50.9) |
19.0 (66.2) |
பொழிவு mm (inches) | 11.7 (0.461) |
13.2 (0.52) |
13.2 (0.52) |
53.1 (2.091) |
186.0 (7.323) |
302.4 (11.906) |
530.8 (20.898) |
378.3 (14.894) |
298.8 (11.764) |
91.8 (3.614) |
5.9 (0.232) |
6.6 (0.26) |
1,891.8 (74.48) |
ஆதாரம்: Department of Hydrology and Meteorology (Nepal)[9] |
போக்குவரத்து வசதிகள்
வானூர்திகள்
விராட்நகர் வானூர்தி நிலையம், நேபாளத்தின் தலைநகரான காட்மாண்டு மற்றும் கிழக்கு நேபாளத்தின் அனைத்து நகரங்களையும் இணைக்கும் வானூர்திகள் பறக்கிறது.
சாலை வசதிகள்
நேபாளத் தலைநகரம் காட்மாண்டை இணைக்கும் 500 கிலோ மீட்டர் சாலை உள்ளது. தரண், இடாரி, தன்குட்டா போன்ற நேபாளத்தின் கிழக்கு மாவட்டங்களை இணைக்கும் சாலைகள் விராட்நகரிலிருந்து செல்கிறது. நேபாளப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் விராட்நகரிலிருந்து அனைத்து கிழக்கு நேபாள மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது.
எல்லைப்புறச் சாலை
விராட்நகரிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் நேபாள-இந்தியா எல்லைப்புறச் சாலையில் சுங்கச் சாவடி அமைந்துள்ளது. இந்தியர்கள் மற்றும் நேபாளிகள் கடவுச் சீட்டு மற்றும் விசா இன்றி எல்லைச் சாவடியை கடக்கும் சலுகை பெற்றவர்கள் ஆவார். நேபாள-இந்தியா எல்லைப்புறத்தில் விராட்நகருக்கு அருகில், இந்திய மாவட்டமான அரரியா மாவட்டத்தின் ஜோக்பானி ஊரில் அமைந்த தொடருந்து நிலையம், கொல்கத்தா, புதுதில்லி போன்ற பெருநகரங்களை இணைக்கிறது.
உள்ளூர் போக்குவரத்து வசதிகள்

மிதிவண்டி, ரிக்சா, ஆட்டோ ரிக்சா, வாடகை வண்டிகள் உள்ளூர் போக்குவரத்திற்கு அதிகம் பயன்பாட்டில் உள்ளது.
புகழ் பெற்றவர்கள்
நேபாள பிரதம அமைச்சரகள்
நேபாள நாட்டின் ஐந்து பிரதம அமைச்சர்களை விராட்நகர் வழங்கியுள்ளது. அவர்கள் முறையே:
- மாத்திரிக பிரசாத் கொய்ராலா
- விஸ்வேஷ்வர் பிரசாத் கொய்ராலா
- மன்மோகன் அதிகாரி
- கிரிஜா பிரசாத் கொய்ராலா
- சுசில் கொய்ராலா
பிறர்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- "National Population Census 2011". மூல முகவரியிலிருந்து 24 January 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 6 November 2012.
- "विराटनगर महानगरपालिका | नेपाल सरकार".
- Location of Biratnagar - Falling Rain Genomics
- "Archived copy". மூல முகவரியிலிருந்து 2017-05-22 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2017-06-01.
- Dambar Krishna Shrestha & Kamal Rimal. "१०० वर्षको विराटनगर, मणि खोज्दै (Biratnagar Turns 100, Seeking Glory)". Himal Khabar. Himal Media. பார்த்த நாள் 26 December 2013.
- "National Population Census 2011"
- "Archived copy". மூல முகவரியிலிருந்து 2016-03-04 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-02-27.
- "Normals from 1981-2010". Department of Hydrology and Meteorology (Nepal). பார்த்த நாள் 20 October 2012.