கோசி மண்டலம்

கோசி மண்டலம் (Koshi) (நேபாளி: कोशी अञ्चलகேட்க ) நேபாளத்தின் பதினான்கு மண்டலங்களில் ஒன்றாகும். நேபாளத்தின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள இம்மண்டலத்தின் நிர்வாகத் தலைமையிடமான விராட்நகர் பெரிய நகரம் ஆகும். இம்மண்டலத்தின் பிற நகரங்கள் இனரூவா, தரண், தன்குட்டா, இடாஹரி ஆகும்.

கோசி மண்டலத்தின் மாவட்டங்கள்

கோசி மண்டலத்தின் முக்கிய ஆறுகள் அருண் ஆறு, தாமர் ஆறு மற்றும் சப்த கோசி ஆறுகள் ஆகும். கோசி மண்டலத்தில் போஜ்பூர் மாவட்டம், தன்குட்டா மாவட்டம், மொரங் மாவட்டம், சங்குவாசபா மாவட்டம், சுன்சரி மாவட்டம் மற்றும் தேஹ்ரதும் மாவட்டம் என ஆறு மாவட்டங்கள் உள்ளது.

மக்கள் தொகையியல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கோசி மண்டலத்தின் மக்கள் தொகை 23,35,047 ஆகும். கோசி மண்டலத்தில் கிராதர்கள் லிம்பு மக்கள், இராய் பழங்குடி மக்கள், நேவார் மக்கள் வாழ்கின்றனர்.

இம்மண்டலத்தில் நேபாளி மொழி, மைதிலி மொழி, போஜ்புரி மொழி, தாரு மொழி, இராஜ்வன்சி மொழி, ராய் மொழி, தமாங் மொழி, மஹர் மொழி, குமால் மொழி, யக்கா மொழி, குலூங் மொழி, லிம்பு மொழி மற்றும் நேவாரி மொழிகள் பேசப்படுகிறது.

இம்மாவட்டத்தில் நெல், கோதுமை, சோளம், ஏலக்காய் விளைச்சல் நன்கு உள்ளது. அருண் ஆறு இம்மண்டலத்தின் குறுக்கே பாய்கிறது

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

புவியியல்

கோசி மண்டலத்தின் கீழ் பகுதி தராய் சமவெளியிலும், நடுப் பகுதி மலைபாங்கான குன்றுப் பகுதிகளிலும், மேல் பகுதி இமயமலைத் தொடர்களிலும் அமைந்துள்ளது. கோசி மண்டலம் கடல் மட்டத்திலிருந்து 160 மீட்டர் முதல் 7,000 மீட்டர் உயரத்தில் அமைந்தது. கோசி மண்டலத்தின் வடக்கில் திபெத் தன்னாட்சிப் பகுதியும், தெற்கில் இந்தியாவும் எல்லைகளாக உள்ளது. கோசி ஆறு இம்மண்டலத்தின் முக்கிய ஆறு ஆகும்.

தட்ப வெப்பம்

கோசி மண்டலத்தின் தட்ப வெப்பம் கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ்மலைத் தாழ்வாரத்திற்குரிய காலநிலை, துருவப் பகுதிப் பாலைவன காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் என ஏழு நிலைகளில் காணப்படுகிறது. [1]

சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்கள்

தரண் நகரத்தின் பிண்டேஸ்வரி கோயில், புத்த சுப்பா கோயில், பஞ்சகன்யா கோயில், விஷ்ணு பாதுகை கோயில்; விராட்நகரத்தின் காளி கோயில்; தன்குட்டா நகரத்தின் சிந்தாந்தேவி கோயில்; வேதேதர் நகரத்தின் நமஸ்தே ஜாரனா கோயில்; துனி பன் நகரத்தின் இராம்துனி கோயில், கோசி மண்டலத்தின் முக்கிய இந்துக் கோயில்கள் ஆகும்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system, Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:87-7903-210-9, http://curis.ku.dk/ws/files/20497354/de2_001.pdf, பார்த்த நாள்: Nov 22, 2013

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.