ரிஞ்சின்பால் கான்
ரிஞ்சின்பால் (மொங்கோலியம்: Ринчинбал; ரிஞ்சின்பால்; திபெத்தியத்தில் ரின் ஷென் திபல்), நிங்சோங் (யுவானின் நிங்சோங் பேரரசர், சீனம்: 元寧宗, மே 1, 1326 – திசம்பர் 14, 1332) என்கிற கோயில் பெயராலும் அழைக்கப்படுகிற இவர், யுவான் வம்சத்தின் பேரரசராக சிறிது காலம் பதவி வகித்த குசாலாவின் மகன் ஆவார். இவர் மிகக் குறுகிய காலமே ஆட்சி செய்த மங்கோலிய பேரரசர் ஆவார். சீனாவின் பேரரசர் தவிர, இவர் மங்கோலியப் பேரரசு அல்லது மங்கோலியர்களின் 14வது மாபெரும் கான் ஆகக் கருதப்படுகிறார். இருப்பினும் மங்கோலியப் பேரரசின் பிரிவு காரணமாக பெயரளவில் மட்டுமே இவர் பேரரசராக இருந்தார்.
ரிஞ்சின்பால் யுவானின் நிங்சோங் பேரரசர் | |
---|---|
மங்கோலியப் பேரரசின் 14வது ககான் (பேரரசின் பிரிவு காரணமாக பெயரளவில் மட்டுமே) யுவான் வம்சத்தின் 10வது பேரரசர் சீனாவின் பேரரசர் | |
![]() | |
ரிஞ்சின்பால் கான் உருவப்படம், யுவானின் நிங்சோங் பேரரசர் | |
ஆட்சிக்காலம் | அக்டோபர் 23, 1332 – திசம்பர் 14, 1332 |
முடிசூடல் | அக்டோபர் 23, 1332 |
முன்னையவர் | ஜயாது கான் |
பின்னையவர் | உகான்டு கான் |
மனைவி | தலியேதேமிசி |
முழுப்பெயர் | |
மொங்கோலியம்: ᠷᠢᠨᠴᠢᠨᠪᠠᠯ சீனம்: 懿璘质班 ரிஞ்சின்பால் | |
ஊழிப் நாட்கள் | |
சிசுன் (至順) 1332 | |
மறைவுக்குப் பின் சூட்டப்பட்ட பெயர் | |
பேரரசர் சோங்செங் சி சியாவோ (冲聖嗣孝皇帝) | |
கோயிலில் சூட்டப்பட்ட பெயர் | |
நிங்சோங் (寧宗) | |
தந்தை | குதுக்து கான் |
மரபு | யுவான் |
தாய் | நைமன் இன பாபுசா |
பிறப்பு | மே 1, 1326 |
இறப்பு | திசம்பர் 14, 1332 6) டடு ([[[பெய்ஜிங்]]) | (அகவை
சுயசரிதை
இவர் குசாலாவின் (பேரரசர் மிங்சோங்) இரண்டாவது மகன் மற்றும் தோகோன் தெமுரின் (பேரரசர் ஹுயிசோங்) தம்பி ஆவார். இவரது தந்தை மத்திய ஆசியாவுக்கு நாடு கடத்தப்பட்டு சகடை கானேட்டில் வாழ்ந்த காலத்தில் நைமைர் இன பாபுசா என்ற பெண்ணுக்கு இவர் பிறந்தார்.
இவரது தந்தை குசாலா இறந்து அவரது தம்பி துக் தெமுர் (குசாலாவை விஷம் வைத்துக் கொன்றவராகக் கருதப்பட்டவர்) மன்னனானபோது ரிஞ்சின்பால் ஃபூவின் இளவரசராக நியமிக்கப்பட்டார். ஜனவரி 1331 இல் துக் தெமுர் தனது மகன் அரத்நதரா வாரிசாகப் போவதை வெளிப்படுத்தினார்.[1] தனது மகன் மன்னனாக வேண்டும் என்பதற்காக துக் தெமுரின் மனைவி பூதசிறி, ரிஞ்சின்பாலின் தாய் பாபுசாவைக் கொன்றார். மேலும் தோகோன் தெமுரை கொரியாவுக்கு நாடு கடத்தினார்.[2] ஆனால் இது தேவையற்றதாக நிரூபிக்கப்பட்டது, ஏனெனில் அரத்நதரா வாரிசு என்ற பதவிக்கு வந்து ஒரு மாதத்தில் இறந்தார்.[3]

துக் தெமுர் மரணப்படுக்கையில் மூத்த சகோதரரான குசாலாவிற்கு தான் கொடுத்த துன்பங்களை எண்ணி வருந்தினார். துக் தெமுருக்கு எல் தெகுஸ் என்ற மகன் உயிருடன் இருந்தபோதிலும், குசாலாவின் மூத்த மகனான தோகோன் தெமுரை மன்னனாக்கும் தன் எண்ணத்தையும் வெளிப்படுத்தினார். ஆனால் மூத்த ஆலோசகரான எல் தெமுர் குசாலாவின் மூத்த மகனான தோகோன் தெமுர் மன்னனாவதை எதிர்த்தார். ஏனெனில் தோகோன் தெமுர் குசாலாவை விஷம் வைத்துக் கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தால் எல் தெமுரை எதிர்த்தார். துக் தெமுரின் விதவை மற்றும் எல் தெகுசின் தாயார் பூதசிறி கதுன் துக் தெமுரின் விருப்பத்தை ஏற்று குசாலாவின் மகனை மன்னனாக்க முடிவு செய்தார். அதன்படி ஆறே வயதான ரிஞ்சின்பால் மன்னனாக்கப்பட்டார். தோகோன் தெமுர் தலைநகரான டடுவிலிருந்து தொலைவில் இருந்தபோது, ரிஞ்சின்பால் டடுவில் இருந்தார், எனவே மன்னனாக்கப்பட்டார். அக்டோபர் 23, 1332 அன்று புதிய பேரரசராக ரிஞ்சின்பால் பதவி ஏற்றார், ஆனால் திசம்பர் 14 அன்றே இறந்தார்.[3]
எல் தெமுர் மீண்டும் எல் டெகுசை மன்னனாக்க பூதசிறியைக் கேட்டுக்கொண்டார், ஆனால் இது மறுக்கப்பட்டது. தென்கிழக்கு சீனாவில் தூரத்திலிருந்த குவாங்சியிலிருந்து[4] தோகோன் தெமுரை அழைப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.
மேலும் காண்க
- யுவான் வம்ச பேரரசர்களின் பட்டியல்
- மங்கோலிய ஆட்சியாளர்களின் பட்டியல்
- சீன ஆட்சியாளர்களின் பட்டியல்
குறிப்புகள்
- Yuan shi, 34. p.754
- Yuan shi, 34. pp.774
- Herbert Franke, Denis Twitchett, John King Fairbank-The Cambridge History of China: Alien regimes and border states, 907–1368, p.557
- Jeremiah Curtin-The Mongols: A history, p.392
ரிஞ்சின்பால் கான் பிறப்பு: 1326 இறப்பு: 1332 | ||
Regnal titles | ||
---|---|---|
முன்னர் ஜயாது கான், பேரரசர் வென்சோங் |
மங்கோலியப் பேரரசின் பெரிய கான் (பேரரசு பிரிவின் காரணமாக பெயரளவில் மட்டுமே) 1332 |
பின்னர் உகான்டு கான், பேரரசர் ஹுயிசோங் |
யுவான் வம்சத்தின் பேரரசர் 1332 | ||
சீனாவின் பேரரசர் 1332 |