குலுக் கான்
குலுக் கான் (Külüg Khan, மொங்கோலியம்: ஹுலுக் கான், Хөлөг хаан, குலுக் கயன்), பிறப்புப் பெயர் கயிஷன் (கயிசன் என்றும் உச்சரிக்கப்படுகிறது, மொங்கோலியம்: Хайсан, "சுவர்" என்று அர்த்தம்), வுசோங் (யுவானின் பேரரசர் வுசோங் என்ற கோவில் பெயராலும் அழைக்கப்படுகிறார், சீனம்: 元武宗; பின்யின்: Yuán Wǔzōng) (ஆகஸ்ட் 4, 1281 – ஜனவரி 27, 1311), யுவான் வம்சத்தின் பேரரசர் ஆவார். சீனாவின் பேரரசர் தவிர, இவர் மங்கோலிய பேரரசு அல்லது மங்கோலியர்களின் ஏழாவது மாபெரும் கான் என கருதப்படுகிறார், இருப்பினும் பேரரசின் பிரிவின் காரணமாக பெயரளவில் மட்டுமே இப்பெயர் அவருக்கு இருந்தது. மங்கோலிய மொழியில் அவரது பெயர் "போர்வீரன் கான் அல்லது நல்ல குதிரையையுடைய கான்" என்று பொருள்.
கயிசன் குலுக் கான் யுவானின் பேரரசர் வுசோங் | |
---|---|
மங்கோலியப் பேரரசின் 7வது ககான் (பேரரசு பிரிவின் காரணமாக பெயரளவில்) யுவான் வம்சத்தின் 3வது பேரரசர் சீனாவின் பேரரசர் | |
![]() | |
யுவான் சகாப்தத்தின் போது குலுக் கானின் (பேரரசர் வுசோங்) சித்திரப்படம். | |
ஆட்சிக்காலம் | ஜூன் 21, 1307 – ஜனவரி 27, 1311 |
முடிசூடல் | ஜூன் 21, 1307 |
முன்னையவர் | தெமுர் கான் |
பின்னையவர் | அயுர்பர்வத புயந்து கான் |
மனைவி | ஜெங்கே |
முழுப்பெயர் | |
மொங்கோலியம்: ᠬᠠᠢᠰᠠᠨ ᠬᠦᠯᠦᠭ ᠬᠠᠭᠠᠨ கயிசன் குலுக் கான் ஹவாய்-நிங்கின் இளவரசர் (懷寧王) 1304-7 | |
ஊழிப் நாட்கள் | |
ஜிடா (至大 Zhìdà) 1308–1311 | |
மறைவுக்குப் பின் சூட்டப்பட்ட பெயர் | |
பேரரசர் ரென்ஹுயி ஜுவான்ஜியாவோ (仁惠宣孝皇帝) | |
கோயிலில் சூட்டப்பட்ட பெயர் | |
வுசோங் (武宗) | |
தந்தை | தர்மபாலா[1] |
மரபு | யுவான் |
தாய் | கொங்கிராட்டின் டகி |
பிறப்பு | ஆகஸ்ட் 4, 1281 கன்பலிக், யுவான் வம்சம் |
இறப்பு | சனவரி 27, 1311 29) கன்பலிக், யுவான் வம்சம் | (அகவை
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.