மகாதேசாதிபதி (இலங்கை)

இலங்கையின் ஆளுநர் அல்லது இலங்கையின் மகாதேசாதிபதி (Governor General of Dominion of Ceylon) என்பது 1948-1972ல் இலங்கையின் நாட்டுத் தலைவரின் பட்டமாகும். இலங்கை 1948ம் ஆண்டு சுதந்திரமடைந்த போதிலும்கூட, 1947ம் ஆண்டு பிரித்தானியர்களால் முன்வைக்கப்பட்ட சோல்பரி அரசியலமைப்பே 1972ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. இந்த அரசியல் யாப்பில் இலங்கையில் பெயரளவு நிர்வாகியாக பிரித்தானிய மகாராணியின் பிரதிநிதி என்ற வகையில் மகாதேசாதிபதி பதவி காணப்பட்டது. சோல்பரி அரசியலமைப்பிற்கு முன்பு காணப்பட்ட தேசாதிபதிகளை விட இப்பதவி அதிகாரத்தில் குறைந்ததாக இருந்தது.

இக்கட்டுரை
இலங்கை அரசியலும் அரசும்
தொடரின் ஒரு பகுதி

முதலாவது தேசாதிபதி

மகாதேசாதிபதிப் பதவி பிரித்தானிய முடியின் பிரதிநிதியாக அமைந்தமையினால் இவர் இலங்கையராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கவில்லை. 1948 பெப்ரவரி 4 இல் இலங்கை விடுதலை அடையும் போது இலங்கையின் தேசாதிபதியாக இருந்தவர் சேர். ஹென்றி மொங்-மேசன் மூர் என்பவர். இவர் விடுதலைக்கு முன்பே தேசாதிபதியாக பிரித்தானிய முடியால் நியமிக்கப்பட்டவர். இவரின் பதவிக்காலம் 1949 சூலை 6 இல் நிறைவடைந்தது. அதுவரை இலங்கையின் தேசாதிபதியாகவே அவர் பணியாற்றினார். இவரின் பதவிக்காலம் முடிந்த பின்பு இலங்கைப் பிரதமர் டி. எஸ். சேனநாயக்காவின் சிபாரிசின் பேரில் பிரித்தானிய முடி 1949 சூலை 6 இல் சோல்பரி அரசியல் யாப்பினை உருவாக்குவதில் மூலகர்த்தாவாக இருந்த சோல்பரி பிரபு என்ற ஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம் என்பவரை மகாதேசாதிபதியாக நியமித்தது. இவரின் பதவிக்காலம் 1954, சூலை 17 இல் நிறைவடைந்தது. இறுதி மகாதேசாதிபதியாக 1962 முதல் 1972 வரை வில்லியம் கொபல்லாவ இருந்தார்.

நியமனம்

இலங்கைப் பிரதம மந்திரியின் சிபாரின்படி பிரித்தானிய முடியினால் இவர் நியமிக்கப்படுவார்.

பதவிக்காலம்

பதவிக்காலம் குறித்து யாப்பில் வரையறுக்கப்படவில்லை. இருப்பினும் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கொரு முறை மகதேசாதிபதி மாற்றப்படுவது மரபாகப் பேணப்பட்டது.

அதிகாரங்கள்

சட்டத்துறை சார்ந்த அதிகாரங்கள்

  • நியமன அங்கத்தவர்க(ஆறுபேர்)களை மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு நியமித்தல்
  • செனட்டின் வெற்றிடங்களை நிரப்புதல்
  • மக்கள் பிரதிநிதிகள் சபையின் சடங்கு ரீதியான இருக்கைகளுக்குத் தலைமை தாங்குதல்
  • மக்கள் பிரதிநிதிகள் சபையைக் கூட்டல், கலைத்தல், ஒத்திவைத்தல்.
  • செனட்சபையைக் கூட்டல், ஒத்திவைத்தல்.

நிர்வாகத்துறை சார்ந்த அதிகாரங்கள்

  • பிரதம மந்திரியைத் தெரிவு செய்தல்
  • அமைச்சரவை உறுப்பினர்களை நியமித்தல்
  • பாராளுமன்றக் காரியதரிசி, நிரந்தரக் காரியதரிசிகள், அமைச்சரவைக் காரியதரிசிகள் ஆகியோரை நியமித்தல்..
  • கணக்காளர் நாயகத்தை நியமித்தல்.
  • தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழு பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்தல்.

நீதித்துறை சார்ந்த அதிகாரங்கள்

  • பிரதம நீதியரசரை நியமித்தல்
  • உயர்நீதிமன்ற நீதியரசர்களை நியமித்தல்
  • நீதிச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்தல்
  • மன்னிப்பு வழங்குதல்

இலங்கையின் மகா தேசாதிபதிகள்

படம் பெயர் பிறப்பு இறப்பு ஆளுநரான நாள் இறுதி நாள் இறையாண்மை
சேர் ஹென்றி மொங்க்-மேசன் மூர்188719644 பெப்ரவரி 19486 சூலை 1949ஜோர்ஜ் VI
ஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம், முதலாம் சோல்பரி பிரபு6 மே 188730 சனவரி 19716 சூலை 194917 சூலை 1954ஜோர்ஜ் VI
எலிசபெத் II
சேர் ஒலிவர் குணத்திலக்க20 அக்டோபர் 189217 திசம்பர் 197817 சூலை 19542 மார்ச் 1962எலிசபெத் II
வில்லியம் கோபல்லாவ17 செப்டம்பர் 189731 சனவரி 19812 மார்ச் 196222 மே 1972எலிசபெத் II

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.