புதிய எசுப்பானியா

புதிய எசுப்பானியா, (New Spain), முன்னதாக புதிய எசுப்பானிய அரச சார்பாளுமை (Viceroyalty of New Spain, எசுப்பானியம்: Virreinato de Nueva España),காஸ்டீல் முடியாட்சியின் ஓர் அரச சார்பாளுமை பகுதியாகும். எசுப்பானியப் பேரரசின் எல்லைகள் வட அமெரிக்கா மற்றும் கரிபியனிலிருந்து, பிலிப்பீன்சு வரை பரவியிருந்த காலத்தில் இது 1535இல் உருவாக்கப்பட்டது.[1][2][3][4]

புதிய எசுப்பானிய அரச சார்பாளுமை
Virreinato de Nueva España
காஸ்டீல் மற்றும் எசுப்பானியாவின் குடியேற்றம்
1519–1821
குறிக்கோள்
Plus Ultra
"Further Beyond"
நாட்டுப்பண்
Marcha Real
"Royal March"
புதிய எசுப்பானியா அமைவிடம்
A map of the territories of the Viceroyalty of New Spain, at its zenith in 1795
தலைநகரம் மெக்சிக்கோ நகரம்
மொழி(கள்) எசுப்பானியம், நாகவற் மொழி, மாயர் மொழி, அமெரிக்க முதற்குடிகளின் மொழிகள்
சமயம் கத்தோலிக்க திருச்சபை
அரசாங்கம் அரச சார்பாளுமை
King
 -  1535–1556 Charles I (first)
 - 1813–1821 Ferdinand VII (last)
Viceroy
 - 1535–1550 Antonio de Mendoza (first)
 - 1821 Juan O'Donojú Political chief superior (not viceroy)
சட்டசபை Council of the Indies
வரலாற்றுக் காலம் குடியேற்றவாத காலம்
 - மெக்சிக்கோவின் கைப்பற்றுதல் 1519–1521
 - அரச சார்பாளுமை உருவாக்கம் 1519
 - நியூ கிரனடா உருவாக்கம்.,
    பனாமா உட்பட
 
27 மே 1717
 - சான் இல்டெபோன்சோ உடன்பாடு 1 அக்டோபர் 1800
 - ஆடம்சு-ஓனிசு உடன்பாடு 22 பெப்ரவரி 1819
 - புதிய எசுப்பானிய அரச சார்பாளுமை நீக்கப்படல் 31 மே 1820
 - மெக்சிக்கோ விடுதலைப் போர் மற்றும் நடு அமெரிக்க விடுதலை 1810 - 1821
மக்கள்தொகை
 -  1519 est. 20 
 -  1810 est. 5.5 
நாணயம் Spanish colonial real
முந்தையது
பின்னையது
கூபா ஆளுநரகம்
அசுடெக் பேரரசு
டாராசுகேன் நாடு
மாயா நாகரிகம்
ஐக்கிய அமெரிக்காவின் உள்ளக அமெரிக்கர்கள்
லூசியானா (புதிய பிரான்சு)
Indigenous peoples of the Americas
Kingdom of Tondo
Rajahnate of Cebu
Kingdom of Maynila
Provincial deputation in Mexico
Spanish West Indies
Spanish East Indies
Louisiana (New France)
Florida Territory
Native Americans in the United States
Indigenous peoples of the Americas
First Mexican Empire
தற்போதைய பகுதிகள்

அசுடெக் பேரரசை எசுப்பானியா கைப்பற்றிய பிறகு 1521இல் புதிய எசுப்பானியா உருவானது. புதிய எசுப்பானியா ஒரு காலகட்டத்தில் கனடாவின் கீழான வட அமெரிக்காவின் பெரும்பகுதியையும் தற்கால மெக்சிக்கோ மற்றும் பனாமா தவிர்த்த நடு அமெரிக்கா கொண்டிருந்தது ; மிசிசிப்பி ஆற்றுக்கு மேற்கிலிருந்த அமெரிக்க ஐக்கிய நாட்டையும் புளோரிடாக்களையும் தன்னகத்தேக் கொண்டிருந்தது.

அமெரிக்கக் கண்டத்திற்கு மேற்கிலிருந்த புதிய எசுப்பானியாவில் எசுப்பானிய கிழக்கிந்தியத் தீவுகள் எனப்படும் ( பிலிப்பீன்சு, மரியானா தீவுகள், கரோலீன் தீவுகள், எசுப்பானிய பார்மோசா (தைவான்) பகுதிகள், மலுக்கு தீவுகளின் பகுதிகள்) இருந்தன. அமெரிக்கக் கண்டத்திற்கு கிழக்கிலிருந்த புதிய எசுப்பானியாவில் எசுப்பானிய மேற்கிந்தியத் தீவுகள், (கூபா, (தற்கால நாடுகளான எயிட்டி மற்றும் டொமினிக்கன் குடியரசு உள்ளடக்கிய) லா எசுப்பானியோலா, புவேர்ட்டோ ரிக்கோ, யமேக்கா, கேமன் தீவுகள், டிரினிடாட், மற்றும் வளைகுடாத் தீவுகளை உள்ளடக்கி இருந்தது.

அமெரிக்காக்களில் நிர்வாகப் பிரிவுகளாக, கலிபோர்னியாக்கள், அதாவது (தற்கால அரிசோனா, கலிபோர்னியா, நெவாடா, யூட்டா, மேற்கு கொலராடோ, தெற்கு வயோமிங் உள்ளடக்கிய) ஆல்ட்டா கலிபோர்னியா; வடக்கு பாகா கலிபோர்னியா தெற்கு பாகா கலிபோர்னியா, (தற்கால நாடுகளான கோயுல்லா மற்றும் டெக்சஸ் உள்ளடக்கிய) நுவோ எக்சுட்ரெமடுரா , ( டெக்சசின் சில பகுதிகளையும் நியூ மெக்சிகோவையும் உள்ளடக்கிய) சான்டா ஃபெ தெ நுவோ மெக்சிக்கோ[5] மற்றும் (மேற்கு மிசிசிப்பி ஆற்றுப் படுகையும் மிசௌரி ஆற்றுப் படுகையும் உள்ளடக்கிய) லூசியானாவைக் கொண்டிருந்தது.

மேற்சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.