பிரித்தானிய அண்டார்டிக் மண்டலம்

பிரித்தானிய அண்டார்டிக் மண்டலம் என்பது ஐக்கிய இராச்சியத்தால் கோரப்படும் அந்தாட்டிக்காவின் ஒரு பகுதியாகும். இது ஒரு பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதியாகும். இது தென் அகலாங்கு 60°க்கு குறைவனதும் மேற்கு நெட்டாங்குகள் 20°க்கும் 80°க்குமிடைப்பட்ட பகுதியாகும். ஐக்கிய இராச்சியம் முதன்முதலாக 1908 ஆம் ஆண்டு முதன் முதாலாக இப்பகுதிக்கு உரிமக் கோரியது எனினும் இம்மண்டலம் மார்ச் 3, 1962 அன்றே அமைக்கப்பட்டது. 1962 ஆம் ஆண்டுக்கு முன்னர் இம்மண்டலத்தின் பகுதிகள் மூன்று சார்புப் பகுதிகளினால் நிர்வகிக்கப்பட்டது. இம்மண்டலத்தின் சில பகுதிகளை ஆர்ஜென்டீனா சிலி ஆகிய நாடுகளும் உரிமை கோருகின்றன. இம்மண்டலத்தில் பிரித்தானிய அண்டாடிக்கா ஆய்வு நிறுவனத்தின் ஊழியர்கள் மாத்திரமே வசிக்கின்றனர்.

பிரித்தானிய அண்டார்டிக் மண்டலம்
கொடி சின்னம்
குறிக்கோள்: Research and Discovery'
நாட்டுப்பண்: இராணியை கடவுள் காப்பாராக
பிரித்தானிய அண்டாடிக் மண்டலத்தின் அமைவிடம்
பிரித்தானிய அண்டாடிக் மண்டலத்தின் அமைவிடம்
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
Government
   ஆணையாளர் Leigh Turner
   நிர்வாகி Michael Richardson
பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி
   உரிமைக் கோரல் 1908 
   மண்டலம் அமைப்பு மார்ச் 3, 1962 
பரப்பு
   மொத்தம் 17,04,900 கிமீ2
6,58,266 சதுர மைல்
மக்கள் தொகை
   கணக்கெடுப்பு 200
நாணயம் பிரித்தானிய பவுண்ட்

வெளியிணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.