நேபாள மாநில எண் 5
மாநில எண் 5 (Province No. 5), (பரிந்துரைக்கப்பட்ட பெயர்: லும்பினி), [1] 20 செப்டம்பர் 2015 அன்று புதிதாக நிறுவப்பட்ட, நேபாளத்தின் ஏழு மாநிலங்களில் ஒன்றாகும்.
மாநில எண் 5 प्रदेश न० ५ | |
---|---|
மாநிலம் | |
![]() பழுப்பு நிறத்தில் மாநில எண் 5 | |
![]() மாநில எண் 5ல் உள்ள 13 மாவட்டங்கள் | |
நாடு | ![]() |
அமைப்பு | 20 செப்டம்பர் 2015 |
தலைநகரம் | பூத்வல் |
முக்கிய நகரங்கள் | பூத்வல், நேபாள்கஞ்ச், சித்தார்த்தநகர், கோரக்கி மற்றும் துளசிபூர் |
மாவட்டங்கள் | 13 |
அரசு | |
• Body | மாநில அரசு |
• ஆளுநர் | உமாகாந்த ஜா |
• முதலமைச்சர் | சங்கர் பொக்ரேல் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) |
• சட்டமன்ற அவைத்தலைவர் | பூர்ண பகதூர் கார்தி |
• சட்டமன்றத் தொகுதிகள் |
|
• மாநில சட்டமன்றம் | அரசியல் கட்சிகள்
|
பரப்பளவு | |
• மொத்தம் | 22 |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 4 |
• அடர்த்தி | 220 |
இனங்கள் | நேபாளிகள் |
நேர வலயம் | நேபாள சீர் நேரம் (ஒசநே+5:45) |
Geocode | NP-FI |
அலுவல் மொழி | நேபாளி |
பிற மொழிகள் | தாரு மொழி, அவதி, மகர் மொழி முதலியன |
2015 நேபாள அரசியல் அமைப்புச் சட்டத்தின் [1], பட்டியல் எண் 4-இன் படி, நிர்வாக வசதிக்காக, 75 மாவட்டங்களைக் கொண்டு புதிதாக துவக்கப்பட்ட ஏழு நேபாள மாநிலங்களின் ஒன்றாகும்.
இம்மாநில அமைச்சரவை தீர்மானத்தின் படி, பூத்வல் நகரம், 17 சனவரி 2018 அன்று, இம்மாநிலத்தின் இடைக்காலத் தலைநகராக அறிவிக்கப்பட்டது. இம்மாவட்டம் 13 மாவட்டங்களைக் கொண்டது.
மாநில எண் 5, 22,288 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 48,91025 மக்கள் தொகையும், 12 மாவட்டங்களையும் கொண்டுள்ளது.
அமைவிடம்
நேபாள மாநில எண் 5-இல் வடக்கிலும், வடகிழக்கில் நேபாள மாநில எண் 4, வடமேற்கில் நேபாள மாநில எண் 6, மேற்கில் நேபாள மாநில எண் 7, தெற்கில் இந்தியா, எல்லைகளாக அமைந்துள்ளது.
மாவட்டங்கள்
இம்மாநிலத்தின் 13 மாவட்டங்களின் விவரம்:
- 1. நவல்பராசி மாவட்டம் (மேற்கு)
- 2. ரூபந்தேஹி மாவட்டம்
- 3. கபிலவஸ்து மாவட்டம்
- 4. பால்பா மாவட்டம்
- 5. அர்காகாஞ்சி மாவட்டம்
- 6. குல்மி மாவட்டம்
- 7. கிழக்கு ருக்கும் மாவட்டம்
- 8. ரோல்பா மாவட்டம்
- 9. பியுட்டான் மாவட்டம்
- 10. தாங் மாவட்டம்
- 11. பாங்கே மாவட்டம்
- 12. பர்தியா மாவட்டம்
- 13. பாகலுங் மாவட்டம் (மேற்கு)
அரசியல்
இம்மாநிலம் 87 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது. அதில் 52 உறுப்பினர்கள் நேரடித் தேர்தலிலும், 35 உறுப்பினர்கள் விகிதாசாரத் தேர்தல் முறையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இம்மாநிலத்திலிருந்து நேபாள தேசிய சபைக்கு 8 உறுப்பினர்களையும், நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 26 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கிறது. இம்மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக சங்கர் பொக்ரோல் பிப்ரவரி, 2018ல் பதவியேற்றார்.
மாநில சட்டமன்றத் தேர்தல், 2017 முடிவுகள்
2017ல் நடைபெற்ற இம்மாநிலச் சட்டமன்றத் தேர்தலில், இம்மாநிலத்தில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றிய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் மற்றும் மாவோயிஸ்ட் மையம் இணைந்து கூட்டணி அரசை நிறுவியுள்ளது. கூட்டணி அரசின் முதலமைச்சராக சங்கர் பொக்ரேல் , மாநில ஆளுநனரால் 14 பிப்ரவரி 2018 அன்று நியமிக்கப்பட்டார்.[2] இம்மாநில சட்டமன்றத்தின் முதன்மை எதிர்கட்சி நேபாளி காங்கிரஸ் ஆகும்.
அரசியல் கட்சி | நேரடித் தேர்தலில் | விகிசாத்சாரத் தேர்தல் முறையில் | மொத்தம் | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | ||||
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் | 28 | 533,613 | 33.10 | 13 | 41 | ||||
நேபாளி காங்கிரஸ் | 7 | 530,844 | 32.93 | 12 | 19 | ||||
மாவோயிஸ்ட் | 14 | 239,281 | 14.84 | 6 | 20 | ||||
நேபாள சோசலிச கூட்டமைப்பு | 3 | 78,567 | 4.87 | 2 | 5 | ||||
ராஷ்டிரிய ஜனதா கட்சி | 0 | 54,110 | 3.36 | 1 | 1 | ||||
ராஷ்டிரிய ஜனமோச்சா | 0 | 32,546 | 2.02 | 1 | 1 | ||||
பிறர் | 0 | 143,219 | 8.88 | 0 | 0 | ||||
மொத்தம் | 52 | 1,612,180 | 100 | 35 | 87 | ||||
Source: Election Commission of Nepal |
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- "Nepal Provinces". statoids.com. பார்த்த நாள் 2016-03-21.
- [ http://www.myrepublica.com/news/36327/ Pokharel appointed Province-5 Chief Minister]