நேபாள அரசியலமைப்பு சட்டம், 2015

நேபாள அரசியலமைப்பு சட்டம், 2015 (Constitution of Nepal 2015) (நேபாள மொழியில்:नेपालको संविधान २०७२) தற்கால நேபாள அரச நிர்வாகத்திற்கும், நீதி நிர்வாகத்திற்கும் வழி காட்டுகிறது. நேபாள அரசியலமைப்புச் சட்டம் 20 செப்டம்பர் 2015 அன்று முதல் நடைமுறைக்கு வந்ததது. இதன் மூலம் முந்தைய 2007ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட தற்காலிக அரசியல் அமைப்பு நீக்கப்பட்டது. மேலும் நேபாள நாட்டு அரசை, நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு என பெயரிடப்பட்டு, சமயச் சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.

2015 நேபாள அரசியலமைப்புச் சட்டம் 8 பகுதிகளாகவும், 305 தொகுப்புகளாகவும், 9 பட்டியல்களாகவும் இயற்றப்பட்டுள்ளது.[1]

வரலாறு

முதல் அரசியலமைப்பு நிர்ண்ய மன்றம் தோல்வி அடைந்ததால், இரண்டாவது அரசியல் நிர்ணய மன்றம் கூட்டப்பட்டு, குறிப்பிட்ட காலத்தில் 2015ல் அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது.[2]

அரசியல் அமைப்பு நிர்ணய மன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் 90% உறுப்பினர்கள், 2015 அரசியல் அமைப்பு சட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். வாக்கெடுப்பில் கலந்து கொண்ட 598 அரசியல் அமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினர்களில், 538 உறுப்பினர்கள் புதிய அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆதரவாகவும், 60 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். தராய் பகுதியின் உறுப்பினர்களில் சிலர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.[3]

2015 அரசியலமைப்பின் சிறப்புகள்

குடியுரிமைக்கான தகுதிகள்

நேபாளக் குடியுரிமை பெறத் கீழ்கண்ட தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (Section 11, Part 2, Constitution of Nepal, 2015)[6]

1 இந்த புதிய அரசியலமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், துவக்கத்தில் நேபாளத்தின் குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் நேபாளத்தின் குடியுரிமை பெற தகுதியுடைய நபர்கள் அனைவரும் நேபாளாக் குடிமக்களாகக் கருதப்படுவர்.

2 நேபாளத்தில் தங்கள் நிரந்தர குடியேற்றத்தை வைத்திருக்கும் பின்வரும் நபர்கள் நேபாளத்தின் குடிமகனாக கருதப்படுவார்கள்: -

(அ) இச்சட்டம் இயற்றுவதற்கு முன்னர், ஒரு நபர் நேபாள வம்சாவளினராக இருந்திருத்தல் வேண்டும்.

(ஆ) நேபாள நாட்டின் குடியுரிமை பெற்ற ஒரு தாய் அல்லது ஒரு தந்தைக்குப் பிறந்த எவரும் நேபாள குடியுரிமை பெறத் தக்கவர்.

3 இந்த அரசியலமைப்பின் ஆரம்பத்தில் நேபாளக் குடியுரிமை பெற்ற ஒரு குடிமகனின் குழந்தை, அவனது / அவளது தந்தை மற்றும் தாய் இருவருமே நேபாளத்தின் குடிமக்கள் எனில் அக்குழந்தை நேபாள குடியுரிமைக்கு தகுதியுடையவர் ஆவார்.

4 நேபாளத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையும், தன்னுடைய தந்தை மற்றும் தாயைப் பற்றிய தகவல்கள் தெரியாத வரை, அல்லது தாய் / தந்தை கண்டுபிடிக்கப்படும் வரை, நேபாளத்தின் குடிமகனாக கருதப்படுவார்.

5 ஒரு நேபாள குடியுரிமை உள்ள தாய்க்கு பிறந்த குழந்தையின் தந்தை, யார் என அறியப்படாத வரை, அக்குழந்தை நேபாள வம்சாவளி குடிமகனாகக் கருதப்படுவார். ஒரு வேளை அக்குழந்தையின் தந்தை ஒரு வெளிநாட்டவர் என்று கண்டறியப்பட்டால், அத்தகைய நபரின் குடியுரிமை, நேபாள கூட்டாட்சி சட்டத்தின்படி இயல்பான குடியுரிமையாக மாற்றப்படும்.

6 ஒரு வெளிநாட்டுப் பெண், நேபாளக் குடிமகனை திருமணம் செய்து கொண்டால், அந்த வெளிநாட்டுப் பெண் இயல்பாகவே நேபாளக் குடியுரிமை பெற தகுதி உள்ளவராகிறார்.

7 அரசியலமைப்புச் சட்டத்தின் தொகுப்பில், வேறு எந்த உள்ளடக்கமும் இல்லாவிட்டாலும், வெளிநாட்டவரை மணந்த ஒரு நேபாளப் பெண்ணிற்கு பிறந்த குழந்தை இயல்பாகவே நேபாளக் குடியுரிமை பெற்று விடுகிறார்.

8 அரசியல் அமைப்புச் சட்டத்தில் குடியுரிமை குறித்து போதுமான விளக்கம் இல்லாத நிலையில், நேபாள அரசே ஒரு நபருக்கு இயல்பான குடியுரிமையை வழங்கலாம்.

9 நேபாள அரசே ஒரு நபருக்கு மதிப்புறு குடியுரிமையை வழங்கலாம்.

10 நேபாளத்தில் எந்தவொரு பகுதியும் ஒன்றிணைக்கப்படுமானால், அத்தகைய பகுதியில் குடியிருக்கும் நபர்கள் நேபாளத்தின் குடிமக்களாக கருதப்படுவர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.