நேபாள்கஞ்ச்

நேபாள்கஞ்ச் (Nepalgunj) (நேபாளி: नेपालगन्ज, நேபாள நாட்டின் மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியத்தின், பேரி மண்டலத்தில் அமைந்த பாங்கே மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், துணை மாநகராட்சியும் ஆகும்.

நேபாள்கஞ்ச்
नेपालगन्ज
துணை மாநகராட்சி
பாகேஸ்வரி குளக்கரையில் அமைந்த மகாதேவர் கோயில்
அடைபெயர்(கள்): NPJ
நேபாள்கஞ்ச்
நேபாளத்தில் நேபாளகஞ்சின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 28°03′N 81°37′E
நாடு நேபாளம்
பிராந்தியம்மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியம்
மண்டலம்பேரி மண்டலம்
மாவட்டம்பாங்கே
துணை மாநாகராட்சிநேபாள்கஞ்ச்
ஏற்றம்150
மக்கள்தொகை (2011)
  மொத்தம்1,28,450
  அடர்த்தி1,592.13
நேர வலயம்நேபாளச் சீர் நேரம் (ஒசநே+5:45)
இணையதளம்www.nepalgunjmun.gov.np

தராய் சமவெளியில் அமைந்த நேபாள்கஞ்ச் நகரத்தின் தெற்கில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பகராயிச் மாவட்டம் எல்லையாக அமைந்துள்ளது.

தொழில் வளர்ச்சி அடைந்த நேபாள்கஞ்ச் நகரத்தில் மேற்கு ரப்தி ஆற்றின் நீரால் வளமையாக உள்ளது. நேபாள்கஞ்சின் தென்மேற்கில் 85 கிலோ மீட்டர் தொலைவில் கோராயி நகரமும், 16 கிலோ மீட்டர் தொலைவில் கோஹால்பூர் நகரமும், 35 கிலோ மீட்டர் தொலைவில் குலாரியா நகரமும் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல்

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நேபாள்கஞ்ச் நகரத்தின் மக்கள் தொகை 1,28,450 ஆக உள்ளது.[1] நேபாள்கஞ்ச் நகரத்தில் நேபாள மொழி, பஹாரி மொழி, அவதி மொழிகள் பேசப்படுகிறது. இந்நகர மக்கள் இந்து சமயம், பௌத்தம், இசுலாம், சீக்கியம் மற்றும் கிறித்தவ சமயத்தை பின்பற்றுகின்றனர். இந்நகரத்தில் பாகேஸ்வரி கோயில் அமைந்துள்ளது.

தட்ப வெப்பம்

நேபாள்கஞ்ச் நகரத்தின் தட்ப வெப்பம், கோடைகாலத்தில் அதிக பட்ச வெப்பநிலை 40° செல்சியசிற்கும் மேலாகவும், குளிர்காலத்தில் அதிக பட்ச வெப்பம் 4°செல்சியசுமாக உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.