நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)

நேபாள கம்யுனிஸ்ட் கட்சி அல்லது மாவோயிஸ்ட் (Communist Party of Nepal - Maoist Centre) என அழைக்கப்படும் இக்கட்சியானது அரசியல் இராணுவ அமைப்பாகும். இக்கட்சியே நேபாள மக்கள் புரட்சியினைத் தலைமைதாங்கி நடத்தி வருகிறது. 1994 ம் ஆண்டு பிரசந்தா எனும் புஷ்ப கமால் தகால் தலைமையில் அமைக்கப்பட்டது. இக்கட்சியும் இதன் இராணுவ அமைப்பும், நேபாளத்தில் மன்னராட்சியை ஒழித்து புதிய ஜனநாயக சமூக ஆட்சி அமைப்பினை உருவாக்கும் இலட்சியத்துடன் போராடுவதாக தமது அறிக்கைகள் மூலம் கூறி வருகின்றன.

மாவோயிஸ்ட் கட்டுபாட்டுப்பகுதி
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோவாதிகள்) இன் 10 ம் ஆண்டு நிறைவை குறிக்கும் சுவரொட்டி ஒன்று

இவ்வமைப்பு ஏற்கனவே நேபாளத்தில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயருடன் இயங்கிக்கொண்டிருந்த அரசியல் கட்சியில் ஏற்பட்ட பிளவின் மூலம் உண்டானது. 1996 இல் நேபாள மக்கள் புரட்சி என்ற பெயரிலான மக்கள் போராட்டத்தினை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோவாதிகள்) பிரகடனப்படுத்தியது. தொடர்ச்சியான மாவோவாத மக்கள் போராட்டக் கரந்தடி உத்திப் போர்முறையின் மூலம் நாட்டின் பெரும்பாலான பாகங்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் இவர்கள் கொண்டுவந்துள்ளனர். நேபாள கம்யுனிஸ்ட் கட்சியானது, புரட்சிகரமான பன்னாட்டு இயக்கம் (Revolutionary Internationalist Movement), தெற்காசிய மாவோயிஸ்டு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு ஆகியவற்றில் (Coordination Committee of Maoist Parties and Organizations of South Asia) ஆகிய அமைப்புகளில் அங்கத்துவம் வகிக்கிறது.

விமர்சனம்

  • அமெரிக்க அரசின் பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி உள்ளது.
  • ஐரோப்பிய ஒன்றியம் 2005 ம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில் மாவோயிஸ்டுக்கள் உள்நாட்டுப்போரில் சிறுவர்களை ஈடுபடுத்துகின்றது என குற்றம்சாட்டியுள்ளது.
  • கொலைகள், கட்டாய ஆட்சேர்ப்பு போன்றவற்றில் மாவோயிஸ்ட்கள் ஈடுபடுவதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளது.

கட்சியின் முழக்கங்கள்

  • உலகத் தொழிலாளரே, ஒன்றுபடுங்கள்
  • நேபாள மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சி நீடூழி வாழ்க!
  • "மார்க்சியமும் லெனினியமும் மாவோயிசமும் பிரசந்தாவின் பாதையும் நீடூழி வாழ்க!

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.