பிரசந்தா

பிரசந்தா (Prachanda, நேபாள மொழி: प्रचण्ड, pɾəʦəɳɖə; பிறப்பு புஷ்ப கமல் தஹால் டிசம்பர் 11, 1954) நேபாளத்தின் பிரதமர் ஆவார். இவார் ஆகஸ்ட் 18, 2008 இல் பிரதமராகப் பதவியேற்றார். பொதுவுடமைவாதியும், புரட்சிவாதியுமாக பிரசந்தா நேபாளத்தின் பெரும் அரசியல் கட்சியான நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)யின் தலைவர் ஆவார். அக்கட்சியின் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைவராகவும் இருக்கிறார். இவரது தலைமையின் கீழ் மாவோயிஸ்டுக்கள் பெப்ரவரி 13, 1996 ஆம் ஆண்டில் அன்றைய மன்னராட்சியை எதிர்த்து மக்கள் புரட்சியை ஆரம்பித்தனர். இதன்போது கிட்டத்தட்ட 13,000 நேபாளிகள் கொல்லப்பட்டனர்[1].

பிரசந்தா
Prachanda
प्रचण्ड
நேபாளப் பிரதமர்
பதவியில்
18 ஆகஸ்ட் 2008  25 மே 2009
குடியரசுத் தலைவர் ராம் பரன் யாதவ்
முன்னவர் கிரிஜா பிரசாத் கொய்ராலா
பின்வந்தவர் மாதவ் குமார் நேபாள்
தனிநபர் தகவல்
பிறப்பு 11 திசம்பர் 1954 (1954-12-11)
காஸ்கி, நேபாளம்
அரசியல் கட்சி நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)
இருப்பிடம் காட்மாண்டூ, நேபாளம்
இணையம் http://www.ppmo.gov.np/

நேபாள சட்டசபை ஆகஸ்ட் 15, 2008 ஆம் ஆண்டு பிரசந்தாவை பிரதமராகத் தேர்ந்தெடுத்தது[2].

எட்டு துணை தளபதிகளை நீக்க மாவோயிஸ்ட் அரசு எடுத்த முடிவை ராணுவ தளபதி ரூக்மங்கத் கத்வால் மதிக்காமல் அவர்களை பணி நீடிப்பு செய்தார் எனவும் அதனால் ஏற்பட்ட மோதலில் ராணுவ தளபதியை பிரதமர் பிரசந்தா நீக்கினார். அதிபர் ராம் பரன் யாதவ் ரூக்மங்கத் கத்வாலை பதவியில் தொடருமாறு கூறியதை தொடர்ந்து பிரசந்தா பிரதமர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.[3][4]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.