மாதவ் குமார் நேபாள்
மாதவ் குமார் நேபாள் (Madhav Kumar Nepal, நேபாளம்: माधवकुमार नेपाल, பிறப்பு: மார்ச் 12, 1953) நேபாளத்தின் அரசியல்வாதி. இவர் 2009 மே 25 இல் நேபாளப் பிரதமராகப் பதவியேற்றார்[1]. இவர் முன்னர் 15 ஆண்டுகளாக நேபாள கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகப் பணியாற்றினார்.
மாதவ் குமார் நேபாள் Madhav Kumar Nepal माधवकुमार नेपाल | |
---|---|
2008 இல் நேபாள் | |
நேபாளத்தின் பிரதமர் | |
பதவியில் 25 மே 2009 – 30 சூன் 2010 | |
குடியரசுத் தலைவர் | ராம் பரன் யாதவ் |
முன்னவர் | பிரசந்தா |
பின்வந்தவர் | சாலா நாத் கனால் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 6 மார்ச்சு 1953 ரவுத்தகாட், நேபாளம் |
அரசியல் கட்சி | நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) |
படித்த கல்வி நிறுவனங்கள் | திரிபுவன் பல்கலைக்கழகம் |
பிரதமர்
பிரதமர் பிரசந்தா, இராணுவத் தளபதியைப் பதவி நீக்கியது தொடர்பாக பிரசந்தாவிற்கும் அதிபர் ராம் பரனிற்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரசந்தா தமது பதவியைத் துறந்ததை அடுத்து மாதவ் குமார் நேபாளத்தின் புதிய பிரதமராக மே 25 2009 இல் பதவியேற்றார்[2].
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.