தோகா
தோகா கத்தாரின் தலைநகரம் ஆகும். பாரசீக வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ள இந்நகரத்தின் மக்கள்தொகை 2008 ஆம் ஆண்டில் 998,651 ஆக இருந்தது. கத்தாரில் உள்ள மிகப் பெரிய நகரமான இந்நகரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் நாட்டின் மொத்த மக்கள் தொகையின் 80 வீதமானோர் வசிக்கின்றனர். சேக் அமத் பின் கலீபா அல் தானி என்பவரால் ஆளப்படும் இந்நாட்டின் அரசாங்கத்தின் இருப்பிடமும் இதுவே. ஆய்வுகளுக்கும் கல்விக்கும் எனத் தனியாக அமைக்கப்பட்டுள்ள கல்வி நகரமும் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. தோகா மேம்பாட்டுச் சுற்று என அழைக்கப்படும், உலக வணிக அமைப்பின் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் இங்கேயே நடைபெற்றன. இதுவரை நிகழ்ந்தவற்றுள் மிகப்பெரிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எனப்படும் 2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தோகாவிலேயே நடைபெற்றன.
தோகா الدوحة அட்-தாவ்கா | |
---|---|
![]() From top: கத்தார் பல்கலைக்கழகம், இசுலாமியக் கலை அருங்காட்சியகம், Doha Skyline, வக்கிஃப் சந்தை, பேர்ல் | |
![]() கத்தாரில் தோகா மாநகரப் பகுதியின் அமைவிடம். | |
நாடு | கத்தார் |
Municipality | அட் தாவ்கா |
நிறுவப்பட்டது | 1850 |
பரப்பளவு | |
• நகரம் | 132 |
மக்கள்தொகை (2004)[1] | |
• நகரம் | 3,39,847 |
• அடர்த்தி | 2,574 |
• பெருநகர் | 9,98,651 |
நேர வலயம் | AST (ஒசநே+3) |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.